முதல் நாட் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் முதல் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்[தொகு]

கௌரவர் அணியில் துச்சாதனன், படை முன்னணியில் சென்றான்; பாண்டவர் அணியில் பீமன், படை முன்னணியில் சென்றான். இருபக்கத்துப் படை வீரர்களுக்குள் வயதில் சிறியவனான அபிமன்யு, அனைவரிலும் மூத்தவரான வீடுமரை எதிர்த்துப் போரிட்டான். முதல் நாட் போரில் பாண்டவர்களின் அணி மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. தருமன் பயந்தான்; துரியோதனன் மகிழ்ச்சியிற் திளைத்தான். "என்ன செய்வோம்?" என கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்ட பாண்டவர்களின் மனதை கிருஷ்ணன் தேற்றினான்.

நிகழ்ந்த மரணங்கள்[தொகு]

1. விராடனுடைய மகன் உத்தரன்
2. விராடனுடைய இரண்டாம் மகன் சுவேதன்

உசாத்துணை[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.