முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதல் டெஸ்ட் போட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டி 1877 மார்ச் 15 ஆம் திகதி தொடங்கியது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேண் நகரில் தொடங்கிய இப்போட்டியில் நாணயச் சுண்டில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. சார்ள்ஸ் பான்னர்மன் (Charles Bannerman) ஆட்டமிழக்காமல் பெற்ற 165 ஓட்டங்களின் உதவியுடன் ஆஸ்திரேலியா 245 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 196 ஆட்டங்களைப் பெற்றது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பகுதி ஆட்டத்தில் (இனிங்ஸில்) பான்னர்மன் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அணி 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 154 என்ற வெற்றி இலக்குடன் தமது இரண்டாவது பகுதி ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி 108 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. உலகின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.