முதல்வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் வஞ்சி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. [1] இது வாகைத்திணையில் வரும் துறை.

பகையரசன் உள்ளிருக்கும்போதே அவன் கோட்டையைச் சிதைக்கும் செய்தி நல்லது அன்று என்று விளக்கும் புறநானூற்றுப் பாடலுக்கு ‘முதல் வஞ்சி’ என்னும் துறைப்பெயர் இடப்பட்டுள்ளது.

பகைவனைத் தாக்குதல் வஞ்சி. ஆனால் எதிர்க்காதவனைத் தாக்குதல் தவறு எனக் காட்டுவது முதல்வஞ்சி.

புறாவுக்காகத் தன்னையே தந்த சிபிச் சக்கரவர்த்தி மரபில் வந்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பகையரசன் கோட்டைக்குள் இருக்கும்போதே இது நல்லதா என்று எண்ணிப் பார்க்காமல் அவன் கோட்டையைச் சிதைக்க வல்லவன் எனப் பாராட்டுவது போல் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் இகழ்கிறார். இது முதல்வஞ்சி என்னும் துறை.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 37
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்வஞ்சி&oldid=1269468" இருந்து மீள்விக்கப்பட்டது