முதலாம் விக்ரகராசன்
முதலாம் விக்ரகராசன் | |
---|---|
சகமான அரசன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 734-759 பொ.ச. |
முன்னையவர் | முதலாம் அஜயராஜன் |
பின்னையவர் | முதலாம் சந்திரராஜா |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
விக்ரகராசன் (Vigraharaja I) (ஆட்சி 734-759 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார். [1]
இவர் தனது தந்தையான முதலாம் அஜயராஜனுக்குப் பிறகு சகமான ஆட்சியாளராக ஆனார். [2] பிரித்விராஜ விஜயம் என்ற நூல் வழக்கமான துதிகளைப் பயன்படுத்தி இவரைப் புகழ்கிறது. அது இவர் பல இராணுவ வெற்றிகளை அடைந்ததைக் குறிக்கிறது. [3]
பிருத்விராஜா விஜயத்தின் கூற்றுப்படி, விக்ரகராஜாவுக்கு சந்திரராஜா மற்றும் கோபேந்திரராஜா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்: இவருக்குப் பிறகு சந்திரராஜாவும், அவருக்குப் பிறகு கோபேந்திரராஜாவும் பதவியேற்றனர். [2] பிற்கால ஹம்மிர மகாகாவ்யம் சந்திரராஜாவை ("ஸ்ரீ சந்திரா") விக்ரகராஜாவின் மூதாதையரான நரதேவரின் மகன் என்று குறிப்பிடுகிறது. [4]
சான்றுகள்
[தொகு]- ↑ Anita Sudan 1989, ப. 116.
- ↑ 2.0 2.1 R. B. Singh 1964, ப. 55.
- ↑ R. B. Singh 1964, ப. 88.
- ↑ Anita Sudan 1989, ப. 23.
உசாத்துணை
[தொகு]- Anita Sudan (1989). A study of the Cahamana inscriptions of Rajasthan. Research. இணையக் கணினி நூலக மைய எண் 20754525.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.