உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் தெள்ளாற்றுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் தெள்ளாற்றுப் போர் பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மனுக்கும்[1], பாண்டிய மன்னன் சீவல்லபனுக்கும் இடையே நடந்தப் போராகும். மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களுடனும், கங்கர்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு சீவல்லபன் தலைமையிலான பாண்டிய மற்றும் சோழர் கூட்டுப் படையை திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள தெள்ளாறு என்னுமிடத்தில் எதிர்கொண்டு தோற்கடித்தான். இதன் மூலம் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்ற சிறப்புப் பெயரையும், பெரும் புகழையும் பெற்றான். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர்கொண்டு அப்போதைய பாண்டிய நாட்டு எல்லையான வைகையாறு வரை விரட்டிச் சென்றான்.[2].

தெள்ளாற்றுப் போர் நடைபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு குடமூக்குப் போர் நடைபெற்றது. பாண்டிய மன்னன் சீவல்லபன் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் (குடமூக்கு) தோற்கடிக்கவும் செய்தான்[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pallava period 'herostone' unearthed in Vellore dt.". The Hindu. November 24, 2001. http://www.thehindu.com/thehindu/2001/11/24/stories/04242238.htm. பார்த்த நாள்: 17 சூலை 2015. 
  2. "Pallavas". Retrieved 17 சூலை 2015.
  3. "4.2.7 சீமாறன் சீவல்லபன் (கி.பி. 815-862)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். Retrieved 17 சூலை 2015.