முதலாம் தமஸ்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் தமஸ்ப்
மலைகளில் முதலாம் தமஸ்ப். ஓவியர் பரூக் பெக்.
ஈரானின் ஷா
ஆட்சிக்காலம்23 மே 1524 – 25 மே 1576
முடிசூட்டுதல்2 சூன் 1524
முன்னையவர்முதலாம் இஸ்மாயில்
பின்னையவர்இராண்டாம் இஸ்மாயில்
பிரதிநிதி
பட்டியலை காண்க
  • திவ் சுல்தான் உரும்லு
  • கோபெக் சுல்தான்
  • சுகா சுல்தான்
  • உசைன் கான்
பிறப்பு(1514-02-22)22 பெப்ரவரி 1514
ஷாகாபாத், இசுபகான், சபாவித்து ஈரான்
இறப்பு25 மே 1576(1576-05-25) (அகவை 62)
கசுவின், சபாவித்து ஈரான்
துணைவர்பலர், அவர்களில் சிலர்:
சுல்தானும் பேகம்
சுல்தான் அகா கனும்
பெயர்கள்
அபுல் பாத் தமஸ்ப் (பாரசீக மொழி: ابوالفتح تهماسب‎)
அரசமரபுசபாவித்து
தந்தைமுதலாம் இஸ்மாயில்
தாய்தசுலு கனும்
மதம்பன்னிருவர் சியா இசுலாம்
முத்திரைமுதலாம் தமஸ்ப்'s signature

முதலாம் தமஸ்ப் என்பவர் சபாவித்து ஈரானின் இரண்டாவது ஷாவாகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் 1524 முதல் 1576 வரை ஆட்சி புரிந்தார். முதலாம் இஸ்மாயில் மற்றும் அவரது முதன்மை மனைவியான தசுலு கனுமின் மூத்த மகனாக இவர் பிறந்தார். தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு 23 மே 1524 அன்று அரியணைக்கு வந்தார். இவரது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகள், 1532ஆம் ஆண்டு வரை கிசில்பாஷ் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால் குறிப்பிடப்படுகிறது. இதற்குப் பிறகு இவர் தனது ஆட்சியை நிலைநாட்டினார். முழுமையான முடியரசைத் தொடங்கினார். சீக்கிரமே இவர் உதுமானியப் பேரரசுடன் நீண்ட காலம் நடைபெற்ற போரை எதிர்கொள்ள வேண்டி வந்தது. இப்போர் மூன்று கட்டங்களாக நடந்தது. முதலாம் சுலைமானின் தலைமையிலான உதுமானியர்கள் தங்களது விருப்பத்திற்குரிய நபர்களை சபாவித்து அரியணையில் அமர வைக்க முயற்சித்தனர். 1555ஆம் ஆண்டின் அமாசியா அமைதி உடன்படிக்கையுடன் இப்போரானது முடிவுக்கு வந்தது. இதன்மூலமாக பகுதாது, பெரும்பாலான குர்திஸ்தான் மற்றும் மேற்கு சார்சியா மீது உதுமானியர்கள் கட்டுப்பாட்டைப் பெற்றனர். புகாராவின் உசுப்பெக்கியர்களுடன் குராசானுக்காகத் தமஸ்ப் சண்டையிட்டார். உசுப்பெக்கியர்கள் அடிக்கடி ஹெறாத் மீதும் ஊடுருவல்களை நடத்தினர். 1528ஆம் ஆண்டு இவருக்கு 14 வயதாக இருந்தபொழுது இவர் இராணுவத்திற்குத் தலைமை தாங்கி சாம் யுத்தத்தில் உசுப்பெக்கியர்களைத் தோற்கடித்தார். உசுப்பெக்கியர்கள் அறிந்திராத சேணேவியை இவர் யுத்தத்தில் பயன்படுத்தினார்.[1][2][3][4]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_தமஸ்ப்&oldid=3531774" இலிருந்து மீள்விக்கப்பட்டது