முதலாம் செயசிம்மன் (பரமார வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் செயசிம்மன்
பரமார-பட்டாரக மகாராசாதிராச பரமேசுவரன்
மால்வாவின் அரசன்
ஆட்சிக்காலம்அண். 1055 – அண். 1070 CE
முன்னையவர்போஜன்
பின்னையவர்உதயாதித்தன்
அரசமரபுபரமாரப் பேரரசு
Mandhata is located in மத்தியப் பிரதேசம்
Mandhata
Mandhata
செயசிம்மனைப் கூறும் ஒரே கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட மந்தாதா

முதலாம் செயசிம்மன் (Jayasimha I) (ஆட்சிக் காலம் பொ.ச.1055-1070) மத்திய இந்தியாவின் மால்வா பகுதியில் ஆட்சி செய்த பரமரா வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர் ஆவார். இவர் வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த மன்னனான போஜனின் வாரிசும், ஒருவேளை ஒரு மகனாகவும் இருக்கலாம்.இவர் மேலைச் சாளுக்கிய இளவரசர் ஆறாம் விக்கிரமாதித்தனின் ஆதரவுடன் அரியணை ஏறியதாகத் தெரிகிறது. மேலும் விக்ரமாதித்தனின் எதிரியான சகோதரன் இரண்டாம் சோமேசுவரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

வரலாறு[தொகு]

பொ.ச. 1055-56 மாந்தாதா செப்புத் தகடு மட்டுமே செயசிம்மன் என்ற பரமார ஆட்சியாளரைக் குறிப்பிடுகிறது. இது போஜனின் கல்வெட்டுகளுடன் மிகவும் ஒத்திருக்கிறது. மேலும் பீமா என்ற கிராமத்தை பிராமணர்களுக்கு வழங்கியதைப் பதிவு செய்கிறது. கல்வெட்டு 1112 விக்ரம் நாட்காட்டி தேதியிட்டது. இதில் செயசிம்மன், சிந்துராசா மற்றும் வாக்பதிராசா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செயசிம்மனின் பட்டங்களும் பெயரும் "பரம-பட்டாரக மகாராசாதிராச பரமேசுவர செயசிம்ம-தேவன்" என்று வழங்கப்பட்டுள்ளது. [1]

வேறு எந்தப் பரமார கல்வெட்டும் செயசிம்மனைக் குறிப்பிடவில்லை. பிற்கால பரமார அரசர்களின் உதய்பூர், நாக்பூர் ஆகியவை செயசிம்மனின் பெயரைத் தவிர்த்துவிட்டு, போஜனுக்குப் பிறகு அடுத்த அரசராக போஜனின் சகோதரன் உதயாதித்தனைக் குறிப்பிடுகின்றன. [2]

சுயசரிதை[தொகு]

செயசிம்மன், ஒருவேளை போஜனின் மகனாக இருக்கலாம். [3] போஜனின் மரணத்தின் போது, காலச்சூரி மன்னன் கர்ணன் , சோலாங்கிய அரசன் முதலாம் பீமதேவன் ஆகியோரின் கூட்டமைப்பு மால்வாவைத் தாக்கியது.[4] இந்த நிலைமைகளின் கீழ் செயசிம்ம்மனும் உதயாதித்தனும் அரியணைக்கு போட்டியாளர்களாக இருந்திருக்கலாம். [5]

மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதனின் அரசவைக் கவிஞரான பில்ஹணன் மாளவத்தில் ஒரு மன்னனின் ஆட்சியை மீண்டும் நிறுவ அவரது புரவலர் உதவியதாகக் குறிப்பிடுகிறார். அவர் மாளவ மன்னனின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த மன்னன் செயசிம்மன் என்று தெரிகிறது. [5] பி. என். கௌதேக்கரின் கூற்றுப்படி தான் அரியணை ஏற உதவுவதற்காக இளவரசர் விக்ரமாதித்தனை அனுப்புமாறு சாளுக்கிய மன்னர் முதலாம் சோமேசுவரனிடம் உதவி கோரியதாகத் தெரிகிறது. [5]

முதலாம் சோமேசுவரனின் மரணத்திற்குப் பிறகு, சாளுக்கிய இளவரசர்களான இரண்டாம் சோமேசுவரனுக்கும் ஆறாம் விக்ரமாதித்தனுக்கும் இடையே வாரிசுப் போர் நடந்தது. இரண்டாம் சோமேசுவரன் செயசிம்மனை விக்ரமாதித்தனின் கூட்டாளியாகக் கருதினார் என்றும், அதனால், கர்ணனை அரியணையில் இருந்து அகற்ற கர்ணனுடன் கூட்டுச் சேர்ந்ததாகவும் தெரிகிறது. [6] தொடர்ந்து நடந்த மோதலில் செயசிம்மன் கொல்லப்பட்டிருக்கலாம். பின்னர், உதயாதித்தன் பரமார சிம்மாசனத்தில் ஏறி, இராச்சியத்தைக் காப்பாற்றினார். [7]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]