முதலாம் சர்வசேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் சர்வசேனன்
தர்ம-மகாராஜா
ஆட்சிக்காலம்சுமார் 325 - 355 பொ.ச.
முன்னையவர்முதலாம் பிரவரசேனன்
பின்னையவர்விந்தியசேனன்
மரபுவாகாடகப் பேரரசு

முதலாம் சர்வசேனன் (Sarvasena I) (ஆட்சி 325 – 355 பொ.ச. [1] ) வாகாட வம்சத்தின் அரசரும் வத்சகுல்ம கிளையின் நிறுவனரும் ஆவார். இவர் தர்ம-மகாராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். மேலும், பிராகிருதத்தில் ஒரு திறமையான கவிஞராக இருக்கலாம். பிற்கால எழுத்தாளர்கள் இவரது இழந்த படைப்பான ஹரிவிஜயத்தைப் புகழ்ந்தனர். மேலும் இவரது சில வசனங்களும் கதாசட்டசையில் சேர்க்கப்பட்டுள்ளன. [2] சர்வசேனனுக்குப் பிறகு இவரது மகன் விந்தியசேனன் ஆட்சிக்கு வந்தார். [3]

சான்றுகள்[தொகு]

  1. Shastri, Ajay Mitra (1997). Vakatakas: Sources and History. Aryan Books International. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173051234. 
  2. Singh, Upinder (2009). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century. Pearson Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1677-9. 
  3. A.S. Altekar (2007). The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120800434. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சர்வசேனன்&oldid=3405862" இலிருந்து மீள்விக்கப்பட்டது