முதலாம் சந்திரராஜா
Appearance
முதலாம் சந்திரராஜா (ஆட்சி சுமார் 759-771 பொ.ச. ) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர் வடமேற்கு இந்தியாவில் இன்றைய ராஜஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்தார்.
சாகம்பரி அரசர் மூன்றாம் பிருத்விராஜனின் (வழக்கமான நாட்டுப்புற புராணங்களில் பிருத்திவிராச் சௌகான் என்று அழைக்கப்படுகிறார்) வாழ்க்கையைப் பற்றிய ஒரு புகழ்ச்சியான சமசுகிருத காவியமான "பிருத்விராஜ விஜய"த்தில், இவர் தனது முன்னோடியான முதலாம் விக்ரகராஜாவின் மகனாவார். இருப்பினும், பிற்கால ஹம்மிர மகாகாவியம், இவரது தந்தை விக்ரகராஜாவின் மூதாதையர் நரதேவன் என்று கூறுகிறது.
சகமான அரசர் முதலாம் விக்கராஜாவின் மகனான இவருக்குப் பிறகு இவரது சகோதரர் கோபேந்திரராஜா பதவிக்கு வந்தார். இவருக்குப் பிறகு சந்திரராஜாவின் மகன் முதலாம் துர்லபராஜா பதவிக்கு வந்தார்.