முதலாம் கிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் கிருட்டிணன் அல்லது கன்னரதேவன் (ஆட்சிக்காலம் 756-774 ) என்பவன் இராஷ்டிரக்கூட மன்னனாவான். இவனுக்கு முன் ஆட்சியில் இருந்தவன் இவனது மாமா தந்திவர்மன் ஆவான். முதலாம் கிருட்டிணன் கண்ணரா அல்லது கண்ணரத்தேவன் எனக் கன்னடக் கல்வெட்டுகளால் அழைக்கப்படுகிறான். அகலவர்ஷா, சுபதுங்கா, பிரீத்திவல்லபா, சிறீவல்லபா, என்பவை இவனது பட்டப்பெயர்களாகும். புகழ்பெற்ற சமண தர்க்கவியலாரும் இராஜவர்த்திகா நூலின் ஆசிரியருமான அகலங்க பாட்டர் இவனது காலத்தவர் ஆவார்.

சில வரலாற்று ஆசிரியர்கள், தந்தி வர்மனிடமிருந்து கிருட்டிணன் அரியணையைப் பறித்துக்கொண்டான் என்று கருதுகின்றனர்.[1]ஆனால் வேறுசில ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர்.[2]

இவன் மேற்கு கங்க மன்னன் சிறீபுருசனுடன் போரிட்டு அவனது நாடான கங்கப்பாடியின் சிலப்பகுதிகளைக் கைப்பற்றினான். மேலும் சிலகரன் என்னும் தென் கொங்கன் மன்னன், கீழை சாளுக்கிய நான்காம் விஷ்ணுவர்தனன் ஆகியோரைத் தோர்க்கடித்தான்.[3] எல்லோரா கைலாசநாதர் கோவில் இவனால் 770-இல் கட்டப்பட்டதாகும். மேலும் இவன் காலத்தில் 18 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன என அவனது கல்வெட்டுமூலம் தெரியவருகிறது. கிருட்டிணனுக்குப் பிறகு அவனது மூத்த மகன், இரண்டாம் கோவிந்தன் ஆட்சிக்கு வந்தான்.

குறிப்புகள்[தொகு]

  1. Vincent Smith in Reu (1933), p58
  2. Reu (1933), p58
  3. Kamath (2001), p74

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கிருட்டிணன்&oldid=3327380" இருந்து மீள்விக்கப்பட்டது