முதலாம் கர்ணதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்ணதேவன் I அல்லது முதலாம் கர்ணதேவன் (Karandev I) மேற்கு இந்தியாவின் குஜராத்தை ஆண்ட வகேலா வம்ச அரசன் ஆவான். இரண்டாம் பீமதேவனுக்குப் பின் பட்டமேறியவர். ஆஷ்வால் நாட்டு அரசன் பில் என்பவரை போரில் வென்றமைக்கு நினைவாக, சபர்மதி ஆற்றாங்கரையில் கர்ணாவதி நகரை (தற்கால அகமதாபாத்) அமைக்க அடித்தளமிட்டவர். கர்ணதேவன், மிருனாள்தேவியை மணந்து சித்துராஜ் ஜெய்சிங் என்ற மகனை பெற்றார்.[1]

கே. எம். முன்ஷி எழுதிய படான் நி பிரபுதா எனும் குஜராத்தி வரலாற்று புதினத்தில், மன்னன் கரண் தேவ், அரசி மினாள்தேவி மற்றும் அவர்களின் மகன் சித்துராஜ் ஜெய்சிங் ஆகியோரைப் பற்றி விரிவாக விவரித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.britannica.com/EBchecked/topic/621483/Karnadeva-Vaghela
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கர்ணதேவன்&oldid=2988895" இருந்து மீள்விக்கப்பட்டது