முதலாம் அர்ச்சுனவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ச்சுனவர்மன்
திரி-விதி-வீர-சூடாமணி
மால்வாவின் மன்னன்
ஆட்சிக்காலம்அண். 1210 – அண். 1215 CE
முன்னையவர்சுபதவர்மன்
பின்னையவர்தேவபாலன்
துணைவர்
  • ஜெயசிறீ
  • சர்வகலா
பட்டப் பெயர்
அர்ச்சுனவர்மன்
அரசமரபுபரமாரப் பேரரசு
தந்தைசுபதவர்மன்
மதம்இந்து சமயம்
முதலாம் அர்ச்சுனவர்மன் is located in மத்தியப் பிரதேசம்
Pipliya Nagar
Pipliya Nagar
Locations of Arjunavarman's inscriptions (map of மத்தியப் பிரதேசம்)

அர்ச்சுனவர்மன் (Arjunavarman) (ஆட்சிக் காலம். பொ.ச. 1210-1215 ) மத்திய இந்தியாவின் மால்வா பகுதியில் ஆட்சி செய்த பரமாரா வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவான்.

இராணுவ வாழ்க்கை[தொகு]

இவன், தனது சுபதவர்மனுக்குப் பிறகு பதவிக்கு வந்தான். மேலும், குசராத்தின் எல்லைகளுக்குள் நுழைந்து சோலாங்கிப் பேரரசின் பல பகுதிகளை வெற்றி கொண்டான். 14ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர் மெருதுங்கா இவனை "குசராத்தை அழித்தவன்" என்று அழைக்கிறார். சிறிது காலத்திற்கு சோலங்கி அரியணை ஏறிய செயந்த-சிம்மனை (அல்லது செயசிம்மன்) இவன் தோற்கடித்தான். அர்ச்சுனனின் பொ.ச.1211 தேதியிட்ட பிப்லியாநகர் மானியம் செயந்தனின் மீதான வெற்றியைக் குறிப்பிடுகிறது. எனவே இவனது குசராத்து படையெடுப்பு இதற்கு முன்பே நடந்திருக்க வேண்டும். 1213 வாக்கில் இவன் பரூச் பகுதியை கைப்பற்றியதாக போபாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. பர்வ மலைப் பள்ளத்தாக்கில் ( பாவாகத் மலையாக இருக்கலாம்) செயசிம்மனை இவன் தோற்கடித்ததாக தார் கல்வெட்டு கூறுகிறது. செயந்தனின் மகள் ஜெயஸ்ரீயை அர்ச்சுனன் சிறைபிடித்ததாகவும், அவளைக் காதலித்ததாகவும் அது கூறுகிறது. அசோக் மஜும்தாரின் கூற்றுப்படி, செயந்தன் பரமாரர்களுடன் திருமணக் கூட்டணியின் மூலம் சமாதானம் செய்ததை இது குறிக்கிறது. [1]

யாதவ ஆட்சியாளரான சிங்கண்ணா, லதா பகுதி (தெற்கு குசராத்) மீது படையெடுத்தபோது, அர்ச்சுனனின் சௌகான் தளபதி சலகனசிம்மன் அவனைத் தோற்கடித்தான்.[2] பின்னர், யாதவ மன்னன் தனது தளபதி கோலேசுவரன் தலைமையில் மற்றொரு படையை லதா பகுதிக்கு அனுப்பினான். இந்த இரண்டாவது படையெடுப்பு பரமார நிலப்பிரபுத்துவத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. [3]

அர்ச்சுனவர் போசள இளவரசி சர்வகலாவை மணந்தான். இவள் போசள மன்னன் வீர வல்லாளனின் பேத்தியின் மகளாக இருக்கலாம். போசள பிரதேசத்தின் மீது சிங்கண்ணாவின் படையெடுப்பு பரமார மற்றும் யாதவர்களுக்கு இடையே ஒரு புதிய மோதலுக்கு வழிவகுத்தது. சிங்கண்ணா 1215இல் பரமார இராச்சியத்தின் மீது படையெடுத்தான். பிற்கால யாதவ அரசவைக் கவிஞரான ஹேமாத்ரியின் கூற்றுப்படி, இந்தப் படையெடுப்பு அர்ச்சுனவர்மனின் தோல்வியிலும், மரணத்திலும் முடிந்தது. ஹேமாத்ரியின் கூற்றின் உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியது. ஏனெனில் 1222 தேதியிட்ட பஹல் கல்வெட்டு அர்ச்சுனவர்மனின் தோல்வியைக் குறிப்பிடுகிறது. ஆனால் அதில் இவனது மரணம் பற்றிய தகவல் இல்லை.[4] திலுவல்லி கல்வெட்டு சிங்கண்ணா மாலவத்தின் அதிபதியை தாழ்த்தியது என்றும் கூறுகிறது.[5]

ஷாஜாபூருக்கு அருகிலுள்ள பிப்லியாநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அர்ச்சுனவர்மனின் 1211 தேயிட்ட கல்வெட்டு, ஒரு கிராமத்தின் நன்கொடையைப் பதிவு செய்கிறது. [6] செஹோரில் கண்டுபிடிக்கப்பட்ட 1213 கல்வெட்டு (முதலில் பிப்லியாநகரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்) ஒரு கிராம மானியத்தையும் பதிவு செய்கிறது.[7] 1215 தேதியிட்ட செஹோரிலிருந்த மற்றொரு கல்வெட்டு, ஒரு பிராமணருக்கு நிலம் வழங்கியதைப் பதிவு செய்கிறது.[8]

சான்றுகள்[தொகு]

  1. Majumdar 1956, ப. 148.
  2. Jain 1972, ப. 370.
  3. Jain 1972, ப. 371.
  4. A. S. Altekar 1960, ப. 534.
  5. T. V. Mahalingam 1957, ப. 145.
  6. Trivedi 1991, ப. 162-163.
  7. Trivedi 1991, ப. 166-167.
  8. Trivedi 1991, ப. 168-169.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அர்ச்சுனவர்மன்&oldid=3378748" இலிருந்து மீள்விக்கப்பட்டது