முதலாம் அர்செஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் அர்செஸ்
𐭀𐭓𐭔𐭊
Coin of Arsaces I (1), Nisa mint.jpg
பார்த்தியா இராச்சியத்தின் முதலாம் அர்செஸ் உருவம் பொறித்த நாணயம். பின்பக்கத்தில் கிரேக்க மொழியில் குறிப்புகளுடன் அமர்ந்த நிலையில் வில் ஏந்திய வீரன்.
ஆட்சிக்காலம்கிமு 247 – 217
பின்னையவர்இரண்டாம் அர்செஸ்
இறப்புகிமு 217
பார்த்தியா
குடும்பம்உறுப்பினர்இரண்டாம் அர்செஸ்
தந்தைஃபிரியாபிட்ஸ்
மதம்சொராட்டிரிய நெறி
பார்த்தியப் பேரரசின் குதிரை வீரன் சிற்பம்
பார்த்தியா இராச்சியத்தின் மன்னர் முதலாம் அர்செஸ் அரண்மனையின் சிதிலங்கள், நிசா நகரம், துருக்மெனிஸ்தான்

முதலாம் அர்செஸ் (Arsaces I) பாரசீகத்தில் பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர் ஆவார். இவர் பார்த்தியப் பேரரசை கிமு 247 முதல் கிமு 217 முடிய 30 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர். இவர் கிரேக்க செலூக்கிய பேரரசை எதிர்த்து போரிட்டு, பாரசீகத்தின் வடக்குப் பகுதிகளை கைப்பற்றி, பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர்.[1] இவர் சொராட்டிரிய சமயத்தைப் பின்பற்றியவர் ஆவார். இவருக்குப் பின் இவரது மகன இரண்டாம் அர்செஸ் ஆட்சிக்கு வந்தார். இவருக்குப் பின் பார்த்தியா இராச்சியம், பார்த்தியப் பேரரசாக விரிவாக்கம் அடைந்தது.

முதலாம் அர்செஸ் நிறுவிய பார்த்தியா இராச்சியத்தின் அமைவிடம்[தொகு]

பார்த்தியா இராச்சியம் மற்றும் அதனைச் சுற்றியிருந்த பேரரசுகள்

முதலாம் அர்செஸ் நிறுவிய பார்த்தியா இராச்சியத்தின் தெற்கிலும், தென்கிழக்கிலும் கிரேக்க செலூக்கியப் பேரரசு மற்றும் மௌரியப் பேரரசுகளும், மேற்கில் மத்திய தரைக்கடலை ஒட்டி பண்டைய எகிப்தின் தாலமிப் பேரரசும், உரோமைக் குடியரசும் இருந்தன.

நாணயம்[தொகு]

முதலாம் அர்செஸ் வெளியிட்ட நாணயத்தின் முன்பக்கத்தில் தம் உருவமும், பின்பக்கத்தில் அமர்ந்த நிலையில் வில் ஏந்திய வீரனின் உருவமும் பொறித்தார். மேலும் நாணயத்தில் கிரேக்க மொழியில் குறிப்புகள் கொண்டிருந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அர்செஸ்&oldid=3582669" இருந்து மீள்விக்கப்பட்டது