முதலாம் அந்தியோசூஸ் சோத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் அந்தியோசூஸ் சோத்தர்
செலூக்கியப் பேரரசர்
முதலாம் அந்தியோசூஸ் உருவம் பொறித்த வெள்ளி நாணயம். பின்பக்கத்தில் அமர்ந்த நிலையில் அப்பல்லோ கடவுள்
செலுக்கியப் பேரரசர்
ஆட்சிக்காலம்செப்டம் கிமு 281 – 2 சூன் 261
முன்னையவர்செலூக்கஸ் நிக்காத்தர்
பின்னையவர்இரண்டாம் அந்தியோசூஸ் தீயஸ்
பிறப்புகிமு 324/323
பாரசீகம் அல்லது மெசொப்பொத்தேமியா
இறப்புகிமு 2 சூன் 261
(வயது 61–63)
சிரியா
துணைவர்சிரியாவின் ஸ்ட்ராடொனிஸ்
குழந்தைகளின்
பெயர்கள்
செலுக்கஸ்
லவோதிஸ்
இரண்டாம் அபமா
மாசிடோனியாவின் ஸ்ட்ராடொனிள்
இரண்டாம் அந்தியோசூஸ் தீயஸ்
வம்சம்செலூக்கிய வம்சம்
தந்தைசெலூக்கஸ் நிக்காத்தர்
தாய்அபாமா
மதம்பண்டைய கிரேக்க சமயம்

முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் (Antiochus I Soter) (கிமு 324/3 – கிமு 2 சூன் 261) ஹலெனியக் காலத்தில் மேற்காசியா மற்றும் நடு ஆசியாவின் பகுதிகளை கிமு 281 முதல் 261 முடிய 20 ஆண்டுகள் செலூக்கியப் பேரரசை ஆண்ட இரண்டாவது பேரரசரும், செலூக்கஸ் நிக்காத்தர் மகனும் ஆவார்.[1][2]இவரை மெசொப்பொத்தேமியாவில் அகிலத்தின் மன்னர் என அழைக்கப்பட்ட ஆட்சியாளர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

செலூக்கியப் பேரர்சர் செலுக்கஸ் நிக்காத்தருக்கும் நடு ஆசியாவின் சோக்தியானா பகுதி இளவரசி அபாமாவுக்கும் பிறந்தவரே முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் ஆவார்.[3][4][5] [6]

இவரது தந்தை நிக்காத்தரின் இறப்பிற்கு முன்னரே, அந்தியோசூஸ் சோத்தர் கிமு 294-இல், திமித்திரியஸ் போலியோர்செடிசின் மகளும், தனது வளர்ப்புத் தாயான சிரியாவின் ஸ்டாட்டோனைசை மணந்தார்.[7]

அந்தியோசூஸ் சோத்தர் வெளியிட்ட தங்க நாணயங்கள்

கிமு 281-இல் செலூக்கஸ் நிக்காத்தர் படுகொலை செய்யப்பட்டதால், முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் செலூக்கியப் பேரரசர் ஆனார். கிமு 278-இல் அனதோலியாவை கைப்பற்றிய கௌல் எனும் துருக்கியர்களை, இந்தியாவின் யானைப்படைகளைக் கொண்டு, முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் வெற்றி பெற்றார். எனவே இவரை மீட்பர் எனும் பொருளில் சோத்தர் என அழைக்கப்பட்டார்.[6]

கிமு 271-இல் மேற்காசியாவை ஆண்ட கிரேக்க செலூக்கிய வம்சத்திற்கும், எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தினருக்கும் இடையே முதல் சிரியப் போர் நடைபெறற்து. போரின் முடிவில் சிரியாவின் டமஸ்கஸ் நகரம் மற்றும் ஆசியா மைனரின் கடற்கரைப் பகுதிகளை எகிப்தின் தாலமி வம்சத்தினர் கைப்பற்றினர்.

Cylinder of Antiochus I
எ-சகிலா மற்றும் எ-சிதா கடவுள்களை மீண்டும் நிறுவியவர் எனக்குறிப்பிடும், பாபிலோனியாவின் மன்னாதி மன்னரான முதலாம் அந்தியோசூசின் அக்காடிய மொழி உருளை முத்திரை[8][9][10][11]

கிமு 268-இல் முதலாம் அந்தியோசூஸ் பாபிலோன் பிரதேசத்தின் போர்சிப்பா நகரத்தில் எசிதா கோயில் நிறுவ அடித்தளம் அமைத்தார்.[12]முதலாம் அந்தியோசூசின் முதல் மகன் செலுக்கஸ், கிமு 275 முதல் கிமு 268/267 கிழக்கு செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசின்]] ஆளுநராக இருந்தார். தன் தந்தை அந்தியோசூசுக்கு எதிராக கலகம் செய்த செலுக்கசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கிமு 262-இல் தற்கால துருக்கியின் பெர்காமோன் எனும் நகரத்தில்[13], தனது ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போரை அடக்கச் சென்ற அந்தியோசூஸ் போரில் தோற்று இறந்தார்.[6]இவருக்குப் பின இவரது மகன் இரண்டாம் அந்தியோசூஸ் கிமு 261-இல் செலூக்கியப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். [14]

இந்தியாவுடனான தொடர்புகள்[தொகு]

முதலாம் அந்தியோசூஸ் சோத்தர் பரத கண்டத்தின் மௌரியப் பேரரசர் பிந்துசாரரிடம் நட்புரிமை பூண்டார். அந்தியோசூஸ் சோத்தரின் சார்பில் தெய்மெச்சூஸ் என்ற கிரேக்க அறிஞரை பிந்துசாரர் அவையில் கிரேக்க தூதுவராக இருந்தார். மேலும் பிந்துசாரருக்கு திராட்சை மது பானம், உலர் பழங்களையும், அரண்மனை இளம் ஆண்களுக்கு போர், தத்துவம், வரலாறு, இராஜதந்திரம், அரசாட்சி போன்றவைகளைக் கற்றுத் தர ஆசியர்களையும் அனுப்பி வைத்தார் என கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெக்கேசாண்டர் தனது குறிப்புகளில் குறித்துள்ளார்.[15][16] அசோகர் கல்வெட்டுகளில் கிரேக்க செலூக்கியப் பேரரசர்களின் பெயர்கள் குறிப்பிட்டுள்ளது.[17]

முதலாம் அந்தியோசூஸ் வெளியிட்ட நாணயங்கள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Antiochus I Soter Seleucid king
 2. "Antiochus I Soter". Livius.
 3. Magill, Frank N. et al. (1998), The Ancient World: Dictionary of World Biography, Volume 1, Pasadena, Chicago, London,: Fitzroy Dearborn Publishers, Salem Press, p. 1010, ISBN 0-89356-313-7.
 4. Holt, Frank L. (1989), Alexander the Great and Bactria: the Formation of a Greek Frontier in Central Asia, Leiden, New York, Copenhagen, Cologne: E. J. Brill, pp 64–65 (see footnote #63 for a discussion on Spitamenes and Apama), ISBN 90-04-08612-9.
 5. Arrian, Anabasis 7.4.6
 6. 6.0 6.1 6.2  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Seleucid Dynasty s.v. Antiochus I. Soter". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 24. (1911). Cambridge University Press. 
 7. Plutarch, Demetrius, 38 gives the most famous account of this tale. See also Appian, Syr. IX.59
 8. Haubold, Johannes (2013) (in en). Greece and Mesopotamia: Dialogues in Literature. Cambridge University Press. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107010765. https://books.google.com/books?id=85sLLYY-owgC&pg=PA135. 
 9. Andrade, Nathanael J. (2013) (in en). Syrian Identity in the Greco-Roman World. Cambridge University Press. பக். 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107244566. https://books.google.com/books?id=4ROhAQAAQBAJ&pg=PA46. 
 10. "Antiochus cylinder". British Museum.
 11. Wallis Budge, Ernest Alfred (1884) (in English). Babylonian Life and History. Religious Tract Society. பக். 94. https://archive.org/details/babylonianlifea03budggoog. 
 12. Oelsner, Joachim (2000). "Hellenization of the Babylonian Culture?" (PDF). The Melammu Project. 6 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
 13. Pergamon
 14. Smith, Andrew. "Johannes Malalas - translation". www.attalus.org. 2017-06-06 அன்று பார்க்கப்பட்டது.
 15. Kosmin 2014, ப. 34–35.
 16. Mookerji 1966, ப. 38.
 17. Translation of Jarl Charpentier 1931:303–321.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முதலாம் அந்தியோசூஸ் சோத்தர்
முன்னர்
செலூக்கஸ் நிக்காத்தர்
செலூக்கியப் பேரரசர்
கிமு 281–261
பின்னர்
இரண்டாம் அந்தியோகஸ்