முதலாம் அஜயராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் அஜயராஜன்
சாகம்பரியின் ஆட்சியாளார்
ஆட்சிக்காலம்சுமார் 721-734 பொ.ச.
முன்னையவர்நரதேவன்
பின்னையவர்முதலாம் விக்ரகராசன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

முதலாம் அஜயராஜன் (Ajayaraja I) (ஆட்சி 721-734 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.இவர் ஜெயராஜா, அஜயபால சக்வா அல்லது அஜயபால சக்ரி என்றும் அழைக்கப்படுகிறார். [1]

முதலாம் அஜயராஜா நரதேவனுக்குப் பிறகு சகமான அரசரானார். [2] 12 ஆம் நூற்றாண்டின் வரலாற்று நூலான பிருத்விராஜ விஜயம், இவர் பல எதிரிகளை தோற்கடித்த ஒரு சிறந்த போர்வீரன் என புகழுரைக்கிறது. [3]

ஒரு கோட்பாட்டின் படி, இவர் அஜயமேரு (நவீன அஜ்மீர் ) நகரத்தை நிறுவினார். இவர் அஜயமேரு கோட்டையை கட்டியதாக பிரபந்த-கோசம் என்ற நூல் கூறுகிறது, இது பின்னர் அஜ்மீரின் தாராகர் கோட்டை என்று அறியப்பட்டது [4] . அக்பர் உல்-அக்யார் இதை இந்தியாவின் முதல் மலைக்கோட்டை என்று அழைக்கிறார். இருப்பினும், பிருத்விராஜ விஜயம் அஜ்மீரின் நிறுவனத்திற்கு இவரது வழித்தோன்றல் இரண்டாம் அஜயராஜா (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு) காரணம் என்று கூறுகிறார். [4] வரலாற்றாசிரியர் ஆர்.பி. சிங்கின் கூற்றுப்படி, அஜ்மீரில் கிபி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அஜ்மீரை நிறுவியவர் இவராகவே இருக்கலாம். [5] இரண்டாம் அஜயராஜா பின்னர் நகரத்தை கணிசமாக மேம்படுத்தினார். எனவும் இராச்சியத்தின் தலைநகரை சாகம்பரியிலிருந்து அஜ்மீருக்கு மாற்றினார் எனவும் ஆர்.பி. சிங் கூறுகிறார் [3] ஷியாம் சிங் ரத்னாவத் மற்றும் கிருஷ்ண கோபால் சர்மா போன்ற மற்றவர்கள், அஜ்மீரை நிறுவியவர் இரண்டாம் அஜயராஜா என்று நம்புகிறார்கள். [6]

இவருக்குப் பிறகு இவருடைய மகன் முதலாம் விக்ரஹராஜா பதவியேற்றார். [7]

சான்றுகள்[தொகு]

நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_அஜயராஜன்&oldid=3429076" இலிருந்து மீள்விக்கப்பட்டது