முதற்கனல் (புதினம்)
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
![]() | |
நூலாசிரியர் | ஜெயமோகன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | புராண மறுபுனைவுப் புதினம் |
வெளியீட்டாளர் | நற்றிணை பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2014 |
அடுத்த நூல் | மழைப்பாடல் |
முதற்கனல் ஜெயமோகன் எழுதிய நாவல். மகாபாரதத்தைக் களமாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு என்னும் புதினத் தொடரின் முதல் பகுதி இது. இது மகாபாரதக் கதையின் மறு புனைவு ஆகும். ஜனவரி 2014 முதல் தேதி முதல் ஜெயமோகனின் இணையதளத்தில் தொடராக வெளிவந்தது.
அமைப்பு[தொகு]
இந்நாவலில் முதற்கனல் என குறிப்பிடப்படுவது காசிநாட்டு இளவரசி அம்பை. ராஜதந்திரச் செயல்பாடுகளின் மூலம் அவமதிக்கப்பட்ட அம்பையின் சினமே பேரரசான அஸ்தினபுரியின் அழிவுக்கும் மகாபாரதப்போருக்கும் காரணமாக அமைந்த முதல் நிகழ்வு என நாவல் சித்தரிக்கின்றது. பீஷ்மர் அம்பையை சிறையெடுப்பதும் அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் குழந்தைகள் பிறப்பதும் அம்பையின் சினம் சிகண்டியின் உருவம் கொள்வதும் இந்நாவலில் சொல்லப்பட்டுள்ளது