முதன்மை கட்டுரையாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்விசார் பதிப்பாசிரியர் தரநிலைகள் பல்வேறு துறைகளில் பரவலாக வேறுபடுகின்றன. இயற்கை அறிவியல், கணினி அறிவியல் மற்றும் மின் பொறியியல் உள்ளிட்ட கல்விப் பாடங்களில், ஒரு ஆய்வுக் கட்டுரையின் முதன்மை கட்டுரையாளர் அல்லது முதன்மை ஆசிரியர் (Lead Author) என்பார் பொதுவாக ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆய்வுக்கட்டுரையினை எழுதித் திருத்தியவர் ஆவார். இக்கட்டுரையில் வரும் இணை ஆசிரியர்களின் பங்களிப்பானது முதன்மை ஆசிரியரின் பங்களிப்பினை ஒப்பிடும் போது குறைவானதாகும். சில ஆய்விதழ்கள் ஒவ்வொரு ஆசிரியரின் பங்களிப்புகளையும் விவரிக்கும் அறிக்கைகளைக் கோருகின்றன.[1] இருப்பினும், பிற துறைகளில் (கணிதம் போன்றவை), ஆசிரியர்கள் பொதுவான பங்களிப்பைக் காட்டிலும் அகர வரிசைப்படி ஆசிரியர்களின் பெயர்கள் பட்டியலிடப்படுகிறது.[2][3]

அண்மைக் காலங்களில் பல எழுத்தாளர் ஆய்வுக்கட்டுரைகளின் விகிதம் அதிகரித்துள்ளது. இது சிக்கலான பல புலனாய்வாளர் ஆராய்ச்சி திட்டங்களையும்,[4] அத்துடன் கல்வி செயல்திறன் மதிப்பீட்டின் "வெளியிடு அல்லது அழிந்துபோக " கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

மேலும் காண்க[தொகு]

  • கல்வி ஆசிரியர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Editorial: What did you do? Nature Physics now requires a statement of authors' contributions to a paper", Nature Physics, p. 369, 2009, doi:10.1038/nphys1305 {{citation}}: Missing or empty |url= (help).
  2. 2004 Statement on The Culture of Research and Scholarship in Mathematics: Joint Research and Its Publication (PDF), American Mathematical Society, 2004.
  3. Andrew Appel (January 1992). "Is POPL Mathematics or Science?". http://www.cs.princeton.edu/~appel/papers/science.pdf. 
  4. Weltzin, J. F.; Belote, R. T.; Thomas, L. M.; Keller, J. K.; Engel, C. E. (2006), "Authorship in ecology: attribution, accountability, and responsibility", Frontiers in Ecology and the Environment, pp. 435–441, doi:10.1890/1540-9295(2006)4[435:AIEAAA]2.0.CO;2, JSTOR 3868870