உள்ளடக்கத்துக்குச் செல்

முதன்மை ஆய்வாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதன்மை ஆய்வாளர் (Principal investigator) என்பது பல நாடுகளில் சுயாதீனமான ஆய்வு நிதி வைத்திருப்பவர் மற்றும் ஆய்வு நிதிக்காக ஆய்வுத் திட்டத்திற்கான முன்னணி ஆராய்ச்சியாளரைக் குறிக்கிறது. பொதுவாக ஆய்வக ஆய்வு அல்லது மருத்துவ சோதனை போன்ற அறிவியல் ஆய்வுகளில் இத்தகை பதவி பயன்படுத்தப்படுகிறது. இந்த சொற்றொடர் பெரும்பாலும் "ஆய்வகத்தின் தலைவர்" அல்லது "ஆராய்ச்சி குழு தலைவர்" என்பதற்கு ஒத்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அறிவியலில் வெளிப்பாடு பொதுவானது என்றாலும், இறுதி முடிவுகளை எடுக்கும் நபர் அல்லது நபர்களுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இவரே கொடுக்கப்பட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான நிதி மற்றும் செலவினங்களை மேற்பார்வையிடுபவர் ஆவார்.[1]

ஒரு இணை ஆய்வாளர் ஆராய்ச்சி திட்டத்தின் மேலாண்மை மற்றும் தலைமைத்துவத்தில் முதன்மை ஆய்வாளருக்கு உதவி புரிபவர் ஆவார். முதன்மை ஆய்வாளருக்கு உதவ ஒன்றுக்கு மேற்பட்ட இணை ஆய்வாளர்கள் இருக்கலாம்.[2]

கூட்டாட்சி நிதி[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நலக் கழகம் அல்லது தேசிய அறிவியல் அறக்கட்டளை போன்ற ஆய்வு நிதியினை நல்கும் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் நிதியளிக்கப்பட்ட திட்டத்தை முடிப்பதற்கும், ஆராய்ச்சி மற்றும் அறிக்கையிடலுக்கும் நேரடிப் பொறுப்பை ஏற்கும் நபர் முதன்மை ஆய்வாளர் ஆவார்.[3][4] சிறிய திட்டங்களைப் பொறுத்தவரையில் (1–5 நபர்களை உள்ளடக்கியது), முதன்மை ஆய்வாளர் இத்திட்டத்தினை உருவாக்கியவர் ஆவார். ஆனால் பெரிய ஆய்வுத் திட்டங்களைப் பொறுத்த வரையில் முதன்மை ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு மூலம் ஆய்வுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது.

மருத்துவ ஆய்வின் பின்னணியில், ஓர் முதன்மை ஆய்வாளர் என்பது தேசிய நலக் கழகம் அல்லது பிற நிதி நிறுவனங்களின் மானியங்களுடன் பணிபுரியும் ஒரு கல்வியாளராக இருக்கலாம் அல்லது புதிய மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைப் பரிசோதிப்பதில் பணிபுரியும் மருந்து நிறுவனத்தின் ஒப்பந்ததாரராக இருக்கலாம்.

2000ஆம் ஆண்டில் அமெரிக்க உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மானியத்தில் 20,458 முதன்மை ஆய்வாளர்கள் இருந்தனர். 2013-ல் இந்த எண்ணிக்கை 21,511ஆக இருந்தது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NERC RESEARCH GRANTS AND FELLOWSHIPS HANDBOOK" (PDF). UK Research and Innovation. February 2021. Archived from the original (PDF) on 27 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 27 August 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Research Councils. "Joint Electronic Submissions Handbook: Co-Investigators". பார்க்கப்பட்ட நாள் 4 May 2021.
  3. See, for example, NSF Grant Policy Manual 210f 'Definitions: Principal Investigator'.
  4. NIAID (NIH) 'Glossary of Funding and Policy Terms and Acronyms'
  5. Couzin-Frankel, J (2014). "Chasing the money". Science 344 (6179): 24–5. doi:10.1126/science.344.6179.24. பப்மெட்:24700835. https://semanticscholar.org/paper/fdebf3b87ad8e5416b30f9cf731a3906ed6c0094. [தொடர்பிழந்த இணைப்பு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதன்மை_ஆய்வாளர்&oldid=3625725" இலிருந்து மீள்விக்கப்பட்டது