முண்டக்கயம்
முண்டக்கயம்
Doorway to highrange | |
|---|---|
town | |
| ஆள்கூறுகள்: 9°32′15″N 76°53′5″E / 9.53750°N 76.88472°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கோட்டயம் |
| அரசு | |
| • நிர்வாகம் | முண்டக்கயம் கிராம ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 54 km2 (21 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 38,445 |
| • அடர்த்தி | 710/km2 (1,800/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாகா | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 686513 |
| தொலைபேசி குறியீடு | 04828 |
| வாகனப் பதிவு | KL-34 |
| மக்களவைத் தொகுதி | பத்தனம்திட்டா |
| குடிமை முகமை | கிராம ஊராட்சி |
முண்டக்கயம் (Mundakayam) என்பது கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.[1][2] இது தெற்கு கேரளத்தின் மலைப்பகுதிகளுக்கான நுழைவாயிலாகத் திகழ்வதுடன், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களின் எல்லையாகவும் அமைந்துள்ளது. முண்டக்கயத்திலிருந்து காஞ்சிரப்பள்ளி 14 கி.மீ (8.7 மைல்) தொலைவிலும், எருமேலி 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன. இப்பகுதி பசுமையான சூழலையும் இரப்பர் தோட்டங்களையும் கொண்டுள்ளது. மணிமாலா ஆறு இந்நகரின் வழியாகப் பாய்கிறது. இது மாவட்டத் தலைமையகமான கோட்டயத்திலிருந்து கிழக்கே 48 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 148 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மணிமலை ஆற்றங்கரையில் காணப்பட்ட 'முண்டி' என்ற வகைக் கொக்குகள் காரணமாகவே இப்பகுதிக்கு 'முண்டக்கயம்' என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
பொருளாதாரம்
[தொகு]முண்டக்கயம் காபி, மிளகு, கோகோ , இயற்கை ரப்பர் விளையும் பூமியாகும். 1967-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற அகில இந்திய வேளாண் மற்றும் தொழில்துறை கண்காட்சியை இந்தி திரைப்பட இயக்குநர் சுனில் தத் தொடங்கி வைத்தார்.
நிருவாகம்
[தொகு]முண்டக்கயம் பகுதியானது கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான பூஞ்ஞார் தொகுதியின் ஒரு பகுதியாகவும், இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. வழக்கறிஞர் செபாஸ்டியன் எம்.ஜே (யு.டி.எஃப்) தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஆன்டோ ஆன்டனி முண்டக்கயம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
கல்வி
[தொகு]உள்ளூர் பள்ளிகளில் செயின்ட் ஜோசப்ஸ் சென்ட்ரல் ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் மற்றும் எண்டையாரில் உள்ள ஜான் ஜோசப் மர்பி மெமோரியல் மேல்நிலைப் பள்ளி ஆகியவை அடங்கும்.
அரசு அலுவலகங்கள்
[தொகு]- முண்டகாயம் அஞ்சல் நிலையம்
- முண்டகாயம் காவல் நிலையம்
- அரசு பொது மருத்துவமனை முண்டகாயம்
- பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை
- பிஎஸ்என்எல் அலுவலகம்
- கேரள நீர் ஆணைய அலுவலகம்
- கேரள மாநில மின்சார வாரியம் அலுவலகம்
- கிராம அலுவலகம்
- கிருஷி பவன்
- மத்திய கலால் அலுவலகம், முண்டக்கயம்
- கலால் ரேஞ்ச் அலுவலகம், முண்டக்கயம்
- திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஆணையர் அலுவலகம், முண்டக்கயம்
குறிப்பிடத்தக்க கோவில்கள்
[தொகு]- பார்த்தசாரதி கோயில், முண்டக்கயம்[3] [4]
- வள்ளியங்காவு தேவி கோயில், பாலூர்க்காவு
காலநிலை
[தொகு]| தட்பவெப்ப நிலைத் தகவல், முண்டக்கயம் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 32 (90) |
32 (90) |
33 (91) |
33 (91) |
32 (90) |
30 (86) |
29 (84) |
29 (84) |
30 (86) |
30 (86) |
30 (86) |
31 (88) |
30.9 (87.7) |
| தாழ் சராசரி °C (°F) | 22 (72) |
23 (73) |
25 (77) |
25 (77) |
25 (77) |
24 (75) |
23 (73) |
24 (75) |
24 (75) |
24 (75) |
24 (75) |
23 (73) |
23.8 (74.9) |
| பொழிவு mm (inches) | 22 (0.87) |
39 (1.54) |
60 (2.36) |
155 (6.1) |
320 (12.6) |
636 (25.04) |
596 (23.46) |
397 (15.63) |
292 (11.5) |
326 (12.83) |
210 (8.27) |
52 (2.05) |
3,105 (122.24) |
| சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) | 1 | 2 | 3 | 7 | 10 | 21 | 20 | 17 | 13 | 12 | 8 | 3 | 117 |
| ஆதாரம்: Weather2Travel | |||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்
[தொகு]- திலகன் - புகழ்பெற்ற மலையாளத் திரைப்பட நடிகர் - 200-இக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்த ஒரு திரைப்பட மற்றும் நாடக நடிகர்.
- தடகள வீரரான ஜோசப் ஆபிரகாம், 2010 குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
- சீமா ஜி. நாயர் - மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை நடிகை
அருகிலுள்ள சுவாரசியமான இடங்கள்
[தொகு]அருகிலுள்ள நகரங்கள்
[தொகு]- காஞ்சிரப்பள்ளி 14 கி.மீ.
- எருமேலி 12 கி.மீ.
- எரட்டுபெட்டா 26 கி.மீ.
- பால 35 கி.மீ.
- பத்தனம்திட்டா 46 கி.மீ.
- கோட்டயம் 54 கி.மீ.
- தொடுபுழா 56 கி.மீ.
- திருவல்லா 60 கி.மீ.
- சங்கனாச்சேரி 58 கி.மீ.
- குமுளி 55 கி.மீ.
- கட்டப்பனை 58 கி.மீ.
- மணிமல 29 கி.மீ.
அருகிலுள்ள வட்டங்கள்
[தொகு]- காஞ்சிரப்பள்ளி 14 கி.மீ.
- அழுதா 24 கி.மீ.
- வழூர் 28 கி.மீ.
- இரன்னி 30 கி.மீ.
அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்
[தொகு]- கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் 105 கி.மீ.
- திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 155 கி.மீ.
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்
[தொகு]- கோட்டயம் தொடருந்து நிலையம் 51 கி.மீ.
- சங்கனாசேரி தொடருந்து நிலையம் 53 கி.மீ.
- திருவல்லா தொடருந்து நிலையம் 56 கி.மீ.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taluks & Villages | Kottayam District, Government of Kerala | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
- ↑ "Mundakayam Village Code 628195, Kanjirappally Taluk, Kerala". Kerala Village Codes (in Indian English). Retrieved 2026-08-09.
- ↑ Says, Mullai Kumaran (26 November 2013). "Kerala Vishnu Temple Festival Calendar". Retrieved 2016-12-09.
- ↑ Tourist Guide, to Kerala. Temples and Festivals.