முடிவு (இந்தித் திரைப்படம்)
நிர்ணய் Nirnay | |
---|---|
இயக்கம் | புஷ்பா ரவாத், அனுபமா ஸ்ரீனிவாசன் |
வெளியீடு | 2012 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
முடிவு (Nirnay, நிர்ணய், decision) 2012 ஆம் ஆண்டில் வெளியான இந்தித் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர்கள் புஷ்பா ரவாத், அனுபமா ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஆவார்.[1] குடும்பங்களிலோ தங்களின் சொந்த விஷயங்கள் சார்ந்தோ முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு வருவதற்கு பெண்களை இன்னமும் கூட நமது சமூகம் அனுமதிப்பதில்லை. எல்லா முடிவுகளையுமே அவர்கள் குடம்பத்திற்கும், உற்றார், உறவினர்களுக்கும் என்ன சொல்வர் என்பதற்காகவோதான் எடுக்கவேண்டியுள்ளது. அதைப்பற்றி இப்படம் பேசுகிறது. தன்னுடைய வாழ்க்கையையும், தனது தோழிகளுடைய வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கும் புஷ்பாவின் சொந்த வாழ்க்கைப்பயணம் பற்றிய படம். காசியாபாத்தில் கீழ் நடுத்தரக் குடும்பங்களில் தங்களுடைய வாழ்க்கை, பணி, திருமணம் என முக்கிய முடிவுகளை எடுப்பதில் இயலாமை நிலையில் உள்ள படித்த இளம்பெண்களின் வாழ்வைப் பின் தொடர்ந்து, அவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவர்களோடு உரையாடியும் கவனித்தும் பதிவு செய்துள்ள படம்[2]