முடிவில் குரங்குத் தேற்றம்

முடிவில் குரங்குத் தேற்றம் (Infinite monkey theorem), ஒரு தட்டச்சுக் கருவியின் விசைப்பலகையில் முடிவில்லாத அளவிலான நேரத்திற்கு எழுமாற்றாக விசைகளைத் தட்டும் ஒரு குரங்கு (முடிவில்லாத எண்ணிக்கையான குரங்குகள் எனவும் கூறுவதுண்டு.[1]), குறிப்பிட்ட ஓர் உரையைக் கிட்டத்தட்ட உறுதியாகத் தட்டச்சிடும் என்று கூறுகின்றது.[2] இங்கு மேற்கூறிய உரைக்கு எடுத்துக்காட்டாக, வில்லியம் செகப்பிரியரின் அனைத்து நாடகங்களையும் உள்ளடக்கிய உரையைக் கூறுவதுண்டு.[3] இங்குக் குரங்கு எனப்படுவது உண்மையான குரங்கைக் குறிக்கவில்லை; எழுத்துகளினதும் குறியீடுகளினதும் எழுமாற்றுத் தொடரிகளைப் பிறப்பிக்கும் கற்பனைக் கருவியைக் குறிக்கின்றது.[4]
ஆய்வுகள்[தொகு]
2003இல் பிளைமவுத்துப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் மாணவர்களும் இங்கிலாந்தின் தேவனிலுள்ள பெயிண்டன் விலங்குக் காட்சிச்சாலையில் ஆறு குரங்குகளின் பார்வையில் ஒரு கணினி விசைப்பலகையை வைத்து, அழுத்தப்படும் விசைகளைச் சைகைகளாகப் பெற்றனர்.[5] இதன்போது S எழுத்தைக் கூடுதலான அளவில் கொண்டு, மொத்தமாக, ஐந்து பக்கங்கள் கிடைக்கப்பெற்றன.[6]
2011இல் அடூப்பு என்ற திறந்த மூல மென்பொருளில் செசி அண்டர்சனால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் குரங்குகள் செகப்பிரியரின் எ இலவ்வர்சு கொம்பிளெயிண்டு என்ற கவிதையை எழுமாற்றாகத் தட்டச்சிட்டுள்ளன.[7]
இதனையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Nick Collins (2011 செப்டம்பர் 26). "Monkeys at typewriters 'close to reproducing Shakespeare'". The Telegraph. பார்த்த நாள் 2015 ஆகத்து 18.
- ↑ Muhammad Waliji (2006 ஆகத்து 12). "Monkeys and Walks" 2. The University of Chicago. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
- ↑ Michael Clair (2015 சூலை 26). "What did the world look like the last time the Cubs were no-hit?". MLB. பார்த்த நாள் 2015 ஆகத்து 18.
- ↑ Jessica Dupuy (2015 செப்டம்பர் 2). "The Mathematics of Winemaking". Texas Monthly. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 17.
- ↑ "No words to describe monkeys' play". BBC News (2003 மே 9). பார்த்த நாள் 2015 ஆகத்து 18.
- ↑ Elmo, Gum, Heather, Holly, Mistletoe & Rowan (2002). Notes Towards the Complete Works of Shakespeare. Vivaria. பக். 4-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9541181-2-X.
- ↑ Doug Gross (2011 செப்டம்பர் 26). "Digital monkeys with typewriters recreate Shakespeare". CNN. பார்த்த நாள் 2015 ஆகத்து 18.