உள்ளடக்கத்துக்குச் செல்

முடிதிருத்துநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முடிதிருத்துபவர் (Barber) என்பவர், தலைமுடி அல்லது தாடியை வெட்டுதல், மழித்தல், அழகுபடுத்துதல், அலங்கரித்தல் ஆகியவற்றை முக்கியத் தொழிலாகக் கொண்ட ஒருவர் ஆவார். ஒரு முடிதிருத்துநர் பணிபுரியும் இடம், முடிதிருத்தகம் அல்லது சிகையலங்கார நிலையம் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியக் காலம் முதலே முடிதிருத்தகங்கள் சமூக தொடர்பு, பொது உரையாடல் நடக்கும் இடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சில சமயங்களில், முடிதிருத்தகங்கள் பொது மன்றங்களாகவும் இருந்தன. அவை வெளிப்படையான விவாதங்கள், பொதுக் கவலைகளைப் பேசுதல், சமகாலப் பிரச்சனைகள் பற்றிய விவாதங்களில் குடிமக்களை ஈடுபடுத்தும் இடங்களாக இருந்தன.

முந்தைய காலங்களில், முடிதிருத்துவோர் ( முடிதிருத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் என அழைக்கப்படுபவர்கள்) அறுவைச் சிகிச்சை மற்றும் பல் மருத்துவத்தையும் செய்தனர். [1] முடிதிருத்தும் தொழில் செய்யும் நாவிதர் சாதியினர் தமிழ்நாட்டில் மருத்துவர் என்றும் அழைக்கபட்டனர்.[2] பாதுகாப்பான மழித்தகடுகளின் வளர்ச்சி மற்றும் ஆங்கிலம் பேசுவோர் பண்பாட்டில் தாடியின் பரவல் குறைந்து வருவதால், பெரும்பாலான முடிதிருத்துவோர் இப்போது முகத்தில் காணப்படும் முடியை விட ஆடவரின் தலை முடியை வெட்டுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.

பெயர்கள்

[தொகு]
At Wunti market Bauchi, Bauchi State Nigeria
ஒரு பாரம்பரிய ஹவுசா முடிதிருத்தும் ( வான்சாமி )

நாவிதர் என்ற பெயர் முடிதிருத்துநரைக் குறிக்கும் ஒரு தொழில்முறை சாதிப் பெயராக உள்ளது. முடிதிருத்துநர் என்ற பெயர் ஆடவரின் தலைமுடி அலங்காரத்தில் நிபுணத்துவம் பெற்ற சிகையலங்கார நிபுணர்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியாக, அனைத்து சிகையலங்கார நிபுணர்களும் நாவிதர்களாகவே கருதப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டில், அழகுக்கலைத் தொழில் முடிதிருத்துநர் தொழிலிலிருந்து பிரிந்தது, மேலும் இன்று சிகையலங்கார நிபுணர்கள் பார்பர்களாகவோ அல்லது அழகுக்கலை நிபுணர்களாகவோ உரிமம் பெறலாம். முடிதிருத்துநர்கள் தாங்கள் பணிபுரியும் இடம், அவர்கள் பணிபுரிய உரிமம் பெற்ற பணிகள் , தங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் பெயர் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகிறனர். இந்தச் சொல்லியல் வேறுபாட்டின் ஒரு பகுதி, ஒரு குறிப்பிட்ட நாட்டின், இடத்தின் விதிமுறைகளைப் பொறுத்தது.

1900களின் முற்பகுதியில், முடிதிருத்துநரைக் குறிக்கப் பயன்படுத்தபடும் பார்பர் என்பதற்கு மாற்றுச் சொல்லாக அமெரிக்காவில் "கைரோடன்சர்" என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்தது. [3]

அமெரிக்காவில் உள்ள மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு இடையில் தொழிலாளர் மற்றும் உரிமச் சட்டங்களில் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, மேரிலாந்து, பென்சில்வேனியா மாநிலங்களில் அழகுக்கலை நிபுணர்கள் நேரான சவரக்கத்தியைப் பயன்படுத்த முடியாது. அதை முடிதிருத்துநர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். இதற்கு மாறாக, நியூ ஜெர்சியில் இரண்டு தொழில்களும் மாநில அழகுக்கலை வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் முடிதிருத்துநர்களுக்கும் அழகுக்கலை நிபுணர்களுக்கும் இடையில் சட்டரீதியான வேறுபாடு இல்லாமல், அவர்களுக்கு ஒரே உரிமம் வழங்கப்படுகிறது, மேலும் அவர்கள் விரும்பினால் நேரான சவரக்கத்தி சவரம், வண்ணம் தீட்டுதல், பிற இரசாயன வேலைகள் மற்றும் முடி வெட்டுதல் ஆகிய இரண்டையும் செய்யலாம். [4]

வரலாறு

[தொகு]

முடிதிருத்துநர் தொழிலுக்கு நீண்ட வரலாறு ஒன்று உண்டு. எகிப்தில் வெண்கலக் காலத்தின் ( கி.மு. 3500 இல்) நினைவுச்சின்னங்களில் சவரக்கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் முடிதிருத்தும் பணிகள் கி. மு. 5000 இல் எகிப்தியர்களால், சிப்பி ஓடுகள் அல்லது கூர்மையாக்கப்பட்ட தீக்கல்லால் செய்யபட்ட கருவிகளைக் கொண்டு செய்யப்பட்டன. [5] பண்டைய எகிப்திய பண்பாட்டில், முடிதிருத்துவோர் மிகவும் மதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். பண்டைய கிரேக்கத்தில் ஆண்கள் தங்கள் தாடி, முடி , நகங்கள் போன்றவற்றை κουρεύς (கியூரியஸ்) என்பவர்களைக் கொண்டு அகோராவில் (சந்தை) வெட்டி அலங்கரித்துக் கொள்வர். முடிதிருத்துவோர் தங்கள் ஆடைகளில் முடிகள் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க, தங்கள் தோள்களில் ஒரு கரடுமுரடான துணியை (ὠμόλινον) பயன்படுத்தினர். பெண் முடிதிருத்துநரும் (κουρεύτριαι) இருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Küskü, Elif Aslan (2022-01-01). "Examination of Scientific Revolution Medicine on the Human Body / Bilimsel Devrim Tıbbını İnsan Bedeni Üzerinden İncelemek". The Legends Journal of European History Studies. https://www.academia.edu/87500649.
  2. "தமிழ்நாடு சாதிகள் பட்டியல்" (PDF). pdf
  3. "On this day in Florida history - June 21, 1926 - Miami barbers don't want to be called 'chirotonsors'". Florida History Network. Retrieved 2020-12-07.
  4. redlemon (2023-08-11). "TSPA Howell". TSPA Howell (in ஆங்கிலம்). Retrieved 2026-03-05.
  5. "Barbering Timeline - National Barber Museum". www.nationalbarbermuseum.org. Retrieved 2018-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிதிருத்துநர்&oldid=4547086" இலிருந்து மீள்விக்கப்பட்டது