முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முடச்சிக்காடு கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணியில் இருந்து அதிராம்பட்டினம் செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் அழகிய கிராமம் முடச்சிக்காடு. இங்கு ஏறத்தால் 2000 நபர்கள் வசித்து வருகின்றனர்.

முடச்சிக்காடு
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்

இந்த கிராமத்தில் கடந்த 65 ஆண்டுகளாக 6 தலைமுறைகளாக இளைஞர் நற்பணி மன்றம் நடத்தப்பட்டு வருகிறது. 65 ஆண்டுகளுக்கு முன் முடச்சிக்காட்டின் முதல் கல்வி கற்ற முதல்  தலைமுறையினர்கள் சி. வீராச்சாமி , ந. கந்தசாமி, எம்.ஆர். கோவேந்தன், குழ.செல்லையா, சி. இராசரெத்தினம் ஆகியோர்களால் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. பின்னர் பி.சின்னையன் சி.என்.சந்திரமோகன், பன்னீர் செல்வம், க சுந்தரம் இவர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் கோ. சந்திரமோகன், ம. சுந்தர்ராசு, சி. சவுந்தரராஜன், ஷேக் இப்ராம்ஷா, சி. குணசேகரன், ந. சுகுமாரன், ந. சித்திரவேலு, சி. பழனிவேலு ஆகியவர்களால் நடத்தப்பட்டது. பின்னர் அடுத்த தலைமுறையினர்களான  காமராசு, சி. செல்லையா, இரா. அருள், ச.சண்முகசுந்தரம், மதிவாணன், இரா. அகிலன், மா. கணநாதன், சேகர், ச. வசந்த், விஜய்குமார், பிரகாஷ், ராஜேஷ் ஆகியோரார் நடத்தப்பட்டது. இவர்களில் தலையில் பேருந்து வந்து செல்லும் எங்கள் ஊர்ச்சாலையின் இருபுறத்திலும் வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்களை வெட்டுவது, ஊரில் திருவிழாக்களை தலைமையேற்று நடத்துவது. பள்ளிக்கட்டிடம், குளத்தை ஆழப்படுத்துதல், சாலை செப்பனிடுதல் பற்றி சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரியப்படுத்துதல், சாதி மற்றும் வருமானச்சான்றிதழ் பெற்றுத்தர உதவிபுரிதல் போன்ற பணிகளும் அடங்கும்.

முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்
முடச்சிக்காடு
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்

தற்போது முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம் ச.தினேஷ், ச. நிகாஷ், வி.பி. நீலகண்டன், சி. விக்னேஷ், கு.விக்னேஷ், கு.வினேத், அன்புத்துரை, விமல், ஸ்டாலின், செல்வம், ஆகிய நண்பர்களால் தொடர்ந்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. சமுதாயப் நலப்பணிகள் கல்விசார் பணிகள் நீர் மேலாண்மை ஆகிய நேக்கத்துடன் பல பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றது.

முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்
முடச்சிக்காடு இளைஞர் நற்பணி மன்றம்