முஞ்ஜியா (திரைப்படம்)
| முஞ்சியா | |
|---|---|
திரையரங்கு வெளியீட்டுச் சுவரொட்டி | |
| இயக்கம் | ஆதித்யா சர்போதார் |
| தயாரிப்பு |
|
| கதை | நிரேன் பட் |
| இசை |
|
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | சௌரவ் கோஸ்வாமி |
| படத்தொகுப்பு | மனிஷா ஆர். பால்டவா |
| கலையகம் | மேடாக் பிலிம்ஸ் |
| விநியோகம் | பென் ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | 7 சூன் 2024 |
| ஓட்டம் | 123 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
| ஆக்கச்செலவு | ₹30 கோடி[2][3] |
| மொத்த வருவாய் | (மதிப்பீடு) ₹132.13 கோடி[4] |
முஞ்ஜியா (Munjya) என்பது ஆதித்யா சர்போத்தார் இயக்கத்தில், 2024 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய இந்தி மொழி நகைச்சுவைத் திகில் திரைப்படமாகும். நிரென் பட் எழுதிய இத்திரைப்படத்தை தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் அபய் வர்மா, ஷர்வரி, சத்யராஜ் மற்றும் மோனா சிங் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமான 'முஞ்ஜியா' என்னும் அமானுஷ்ய உருவம் முற்றிலும் சிஜிஐத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.[5] மேடாக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், 'மேடாக் அமானுஷ்ய நகைச்சுவைப் பிரபஞ்சத்தின்' மூன்றாவது பாகமாகும். இது இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களால் ஈர்க்கப்பட்ட 'முஞ்ஜியா' அமானுஷ்யப் புனைவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
முஞ்ஜியா திரைப்படம் 7 ஜூன் 2024 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியாகி, பின்னர் மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெறும் 'ஸ்லீப்பர் ஹிட்' திரைப்படமாக இது உருவெடுத்தது. உலகளவில் வெறும் ₹30 கோடி தயாரிப்புச் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், ₹130 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து, 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த எட்டாவது இந்தித் திரைப்படமாக மாறியது.[6][7] மேலும், 70-ஆவது பிலிம்பேர் விருதுகள் விழாவில் இத்திரைப்படம் சிறந்த சிறப்புக் காட்சிகளுக்கான விருதையும் வென்றது.[8]
கதைச் சுருக்கம்
[தொகு]1952 ஆம் ஆண்டில், கொங்கன் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கோத்யா என்ற சிறுவன், தன்னை விட ஏழு வயது மூத்த பக்கத்து வீட்டுக்காரரான முன்னியைத் தீவிரமாகக் காதலிக்கிறான்.ஆனால் அது தோல்வியில் முடிந்தது, முன்னிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டப் பின்பு, இவனுக்கு மொட்டையடிக்கும் சடங்கு நடத்தப்படும் போது, அவளைத் தனதாக்கிக் கொள்ளக் கோத்யா திட்டமிடுகிறான். இதற்காகச் சேதுக்வாடி காட்டில் உள்ள ஒரு போதி மரத்தின் அடியில், தனது சொந்தத் தங்கை கீதாவை நரபலி கொடுக்க முயல்கிறான். ஆனால் கீதா அங்கிருந்து தப்பியோட, அந்தப் பரபரப்பில் கோத்யா தற்செயலாகத் தூக்கிலிடப்பட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது பழிவாங்கும் ஆவியைக் கட்டுப்படுத்துவதற்காக அவனது உடல் அந்த மரத்தின் அடியிலேயே புதைக்கப்படுகிறது. இதனால் அவன் 'முஞ்ஜியா' எனப்படும் பிரம்மராட்சச ஆவியாக மாறுகிறான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, கோத்யாவின் வம்சாவளியைச் சேர்ந்த பிட்டூ என்ற பயந்த சுபாவமுள்ள இளைஞன் தற்செயலாக அந்தப் பகுதிக்கு வரும்போது, முஞ்ஜியாவின் ஆவி அவனிடம் ஒட்டிக்கொள்கிறது. தன் காதலியான முன்னியை (தற்போது வயதான மூதாட்டி) தன்னிடம் சேர்த்து வைக்கும்படி பிட்டூவை அந்த ஆவி மிரட்டுகிறது. இதற்கிடையில் பிட்டூ காதலிக்கும் பெலா என்ற பெண்ணையும் அந்த ஆவி ஆபத்தில் ஆழ்த்துகிறது. இறுதியில், பிட்டூ ஒரு தந்திரமான திட்டத்தின் மூலம், அந்த அமானுஷ்ய ஆவிக்குத் தீ மூட்டி, அதன் பிடியிலிருந்து தன் குடும்பத்தாரையும் காதலியையும் எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதே இத்திரைப்படத்தின் மீதிக்கதையாகும்.
நடிகர் குழு
[தொகு]திரைப்படத்தின் தொடக்க மற்றும் இறுதிப் பெயர்ப்பட்டியலின்படி:[9]
- அபய் வர்மா - பிட்டு
- ஷர்வரி - பெலா / முன்னி (இளமைக்காலப் பகுதி)
- சத்யராஜ் - எல்விஸ் கரீம் பிரபாகர்
- மோனா சிங் - பம்மி (பிட்டுவின் தாய்)
- சுஹாஸ் ஜோஷி - கீதா (அஜி, பிட்டுவின் பாட்டி மற்றும் முஞ்ஜியாவின் சகோதரி)
- குஷி ஹஜாரே - இளமைக்கால கீதா
- தரன்ஜோத் சிங் - தில்ஜித் சிங் தில்லான் அல்லது ஸ்பீல்பெர்க்[10]
- அஜய் புர்கர் - பாலு காகா
- பாக்யஸ்ரீ லிமாயே - ருக்கு
- ஆயுஷ் உலகட்டே - கோத்யா / முஞ்ஜியா
- ஸ்ருதி மராத்தே - கோத்யாவின் தாய்
- ரிச்சர்ட் லோவட் - குபா
- அனய் காமத் - கோத்யாவின் தந்தை
- பத்மினி சர்தேசாய் - முன்னி கனிட்கர் அல்லது "அக்கா"
- ஸ்ரீகாந்த் மோகன் யாதவ் - ஜக்கு
- ரீமா சவுத்ரி - மஹுவா
- ரசிகா வெங்குர்லேகர் - பேருந்தில் வரும் பெண்
- ராதிகா வித்யாசாகர் - சாவித்திரி
- அக்சய் வெங்குலிகர் - பிட்டுவின் தந்தை
- அபிஜீத் சவான் - மருத்துவர்
- அபிஷேக் பானர்ஜி - ஜனார்தன் அல்லது "ஜனா" (சிறப்புத் தோற்றம்)
- வருண் தவான் - பாஸ்கர் (சிறப்புத் தோற்றம்)
படப்பிடிப்பு
[தொகு]இந்த படம் மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள கூடல் மற்றும் குகர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[11][12]
வெளியீடு
[தொகு]திரையரங்க வெளியீடு
[தொகு]இத்திரைப்படம் 2024 ஜூன் 7 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hungama, Bollywood (5 June 2024). "EXCLUSIVE: Munjya passed with ZERO cuts by CBFC; to have paid previews in select cinemas on Thursday, June 6 : Bollywood News". Bollywood Hungama. Archived from the original on 6 June 2024. Retrieved 2026-07-26.
- ↑ "Munjya TV release soon; here's when and where to watch the horror comedy". Business Standard. 16 August 2024. Retrieved 2026-07-26.
- ↑ "Maddock Films leads Bollywood's new era with record-breaking revenues and stellar box office hits; becomes the new Powerhouse in Bollywood". Bollywood Hungama (in ஆங்கிலம்). 2025-01-17. Retrieved 2026-07-26.
- ↑ "Munjya Box Office". Bollywood Hungama இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609052809/https://www.bollywoodhungama.com/movie/munjya/box-office/.
- ↑ Kukreja, Monika Rawal (7 June 2024). "Munjya review: An average blend of horror and comedy with a CGI spooky twist". Hindustan Times. Retrieved 2026-07-26.
- ↑ "Munjya Emerges As Surprise Hit!". Rediff.com. 10 June 2024. Archived from the original on 10 June 2024. Retrieved 2026-07-26.
- ↑ "Bollywood Top Grossers Worldwide 2024". Bollywood Hungama. Archived from the original on 16 January 2024. Retrieved 2026-07-26.
- ↑ "Winners of The 70th Hyundai Filmfare Awards 2025 With Gujarat Tourism: Full List Out | Filmfare.com". www.filmfare.com (in ஆங்கிலம்). Retrieved 2026-07-26.
- ↑ Munjya (in இந்தி). India: Maddock Films. 2024. Retrieved 25 August 2024 – via Disney+ Hotstar.
- ↑ "Munjya's Spielberg aka Taran Singh heaps praise on Sathyaraj's dedication: 'Inspiring to see him learning Hindi'". Hindustan Times. Retrieved 2026-07-26.
- ↑ "Sharvari opens up about mouthwatering Konkan cuisine experience on 'Munjya' set". 2 June 2024. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/sharvari-opens-up-about-mouthwatering-konkan-cuisine-experience-on-munjya-set/articleshow/110627979.cms.
- ↑ "'मुंज्या'मध्ये दिसलेलं महाराष्ट्रातील सुंदर गाव; मान्सून ट्रिपसाठी सर्वोत्तम पर्याय". TV9 Marathi (in மராத்தி). 27 June 2024. Archived from the original on 17 August 2024. Retrieved 28 June 2024.
- ↑ "Maddock Films' 'Munjya' gets a release date" (in en-IN). The Hindu. 21 May 2024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X இம் மூலத்தில் இருந்து 23 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240523192249/https://www.thehindu.com/entertainment/movies/maddock-films-munjya-gets-a-release-date/article68199215.ece.