முசுகுந்தேஸ்வரர் கோயில், கொடும்பாளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூரில் (தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம் )மூவர் கோவிலுக்கு சற்று தொலைவே மேற்கே கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது முசுகுந்தேஸ்வரர் கோயில்.

வரலாறு[தொகு]

இக்கோவிலின் எழுந்தருளியுள்ள இறைவனின் நாமம் முதுகுன்றம் உடையார் என்பதாகும். இக்கோவிலை மகிமலாய இருக்கவேள் என்கிற பராந்தக குஞ்சரமல்லன் எனும் சிற்றரசன் கி பி 921 ஆம் ஆண்டு கட்டினான். எனவே இந்தகோவிலும் தஞ்சை பெரிய கோவிலைப் போல 1000 ஆண்டு பழமையான வரலாறு கொண்ட கோவிலாகும். இக்கோவில் முழுக்க சோழர் கால கட்டிக்கலையே பின்பற்றப்பட்டுள்ளது.