உள்ளடக்கத்துக்குச் செல்

முசிறி சந்திரமௌலீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
சந்திரமௌலீசுவரர் கோயில் கோபுரம்
பெயர்
பெயர்:சந்திரமௌலீசுவரர் கோயில் கோபுரம்
அமைவிடம்
ஊர்:முசிறி
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்

முசிறி சந்திரமௌலீசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறியில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் சந்திரமௌலீசுவரர் என்றும், அம்பாள் கற்பூரவள்ளியம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானை சந்திரன் வந்து வழிபட்டமையால், மூலவரை சந்திரமௌலீசுவரர் என்று அழைக்கின்றனர்.

சன்னதிகள்

[தொகு]

வீரபத்திரர் சிலை மகாமண்டபத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு முன்னுள்ள மகாமண்டபத்தில் ஒரு அழகிய பெண் சிலை இறைவனை வணங்குவதைப் போல அமைந்துள்ளது. நவக்கிரக சன்னதி, சனீசுவரன், பைரவர், நால்வர் சன்னதி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுகப்பெருமான் மற்றும் காசிவிசுவநாதர் சன்னதிகள் உள்ளன.

விழாக்கள்

[தொகு]

பைரவர் சன்னதியில் அஷ்டமி தினத்தில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.[2] பைரவருக்கு பால், தயிர், தேன், இளநீர் மற்றும் வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றால் அபிசேகங்கள் செய்யப்பட்டு மிளகுசாதம், தயிர் சாதம் படைக்கப்படுகின்றன. வெண்பூசணி மற்றும் தேங்காய் மூடிகளில் வேப்ப எண்ணெய் வைத்து விளக்குகள் போட்டு பக்தர்கள் வழிபடுகின்றனர்.

துவாரபாலகர்கள்

[தொகு]

இச்சிவாலயத்தில் உய்யக்கொண்டார் மற்றும் ஆட்கொண்டார் ஆகியோர் துவாரபாலகர்களாக உள்ளார்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=69&Page=6
  2. http://www.maalaimalar.com/Devotional/Worship/2016/09/24130155/1041007/shiva-temnple-theipirai-ashtami-worship.vpf