முசா கா முசல்லா

ஆள்கூறுகள்: 34°42′58″N 73°21′37″E / 34.716044°N 73.360241°E / 34.716044; 73.360241
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசா கா முசல்லா
உயர்ந்த இடம்
உயரம்4,100 m (13,500 அடி)
ஆள்கூறு34°42′58″N 73°21′37″E / 34.716044°N 73.360241°E / 34.716044; 73.360241
புவியியல்
அமைவிடம்மன்சேரா, கைபர் பக்துன்வா மாகாணம்
மூலத் தொடர்இமயமலை

முசா கா முசல்லா ( Musa ka Musalla: மோசசின் பாய்) என்பது இமயமலையில் சிரான் மற்றும் ககன் பள்ளத்தாக்கு சந்திப்பில் சுமார் 4,100 மீட்டர் (13,500 அடி) உயரத்தில் நிற்கும் ஒரு சிகரமாகும்.[1] இது ஆப்டாபாத் நகருக்கு வடக்கே 150 கிலோமீட்டர் (93 மை) தொலைவில் மன்சேரா மாவட்டத்தின் பாலாகோட் வட்டத்தில் அமைந்துள்ளது.[2]

பெயர்க் காரணம்[தொகு]

முசா கா முசல்லா என்ற பெயர் "மோசசின் பாய்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூசா என்ற ஆடு மேய்ப்பவர் அங்கு உச்சியில் பிரார்த்தனை செய்ததாக ஒரு கதை கூறுகிறது.[2] மலையுச்சியில் அவருக்கு ஒரு சன்னதியும் உள்ளது, அவர் உள்ளூர் மக்களால் துறவியாக மதிக்கப்படுகிறார்.[1]

பாதைகள்[தொகு]

கோடைக்காலத்தில் மூன்று வழிகள் வழியாக இந்த சிகரத்தை அணுகலாம். ஆனால் அனைவருக்கும் பல மணிநேர மலையேற்றம் தேவை.[2]

  • பாலாகோட் முதல் நாடி பங்களா மற்றும் குந்த் பங்களா வழி
  • பராஸ் முதல் சரன் வனப் பாதை
  • சங்கியாரி முதல் மண்டகுச்சா வழி

சங்கியாரி முதல் மண்டா குச்சா வரையிலான பாதை சிகரத்தை அடைய மிகவும் எளிதான பாதையாகும்.[3]

இதனையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "So close to Musa ka Musalla". The News on Sunday (TNS) (in ஆங்கிலம்). 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 2.2 "Musa ka Musalla: Pakistan's playground where fairies come to play". The Express Tribune. 2017-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
  3. Elahi, Faysal Khan (2017-12-11). "Trekking to Siran Valley is a dream come true for adventure junkies and photo enthusiasts alike". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசா_கா_முசல்லா&oldid=3931331" இலிருந்து மீள்விக்கப்பட்டது