முசாஃபராபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முசாஃப்பராபாத்
Muzaffarabad
ஆசாத் காசுமீரின் மாவட்டங்கள்
முசாஃப்பராபாத் நகரம்,பாக்கித்தான்
முசாஃப்பராபாத் நகரம்,பாக்கித்தான்
ஆசாத் காசுமீருடன் முசாஃப்பராபாத் வரைபடம்
ஆசாத் காசுமீருடன் முசாஃப்பராபாத் வரைபடம்
நாடுபாக்கித்தான்
தலைமையிடம்முசாஃபராபாத்
அரசு
 • மாவட்ட நசீம்ஆரிசு பின் முனிர்
 • மாவட்ட நைப் நசீம்என்.உசாமா லத்தீப்
பரப்பளவு
 • மொத்தம்1
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்650
 • அடர்த்தி396
நேர வலயம்பாக்கித்தான் சீர் நேரம் (ஒசநே+05:00)
வட்டம் (தாலுகா)களின் எண்ணிக்கை3

முசாஃபராபாத் மாவட்டம் (Muzaffarabad district) என்பது பாக்கித்தான் நாட்டின் ஆசாத் காசுமீர் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சீலம் ஆறு மற்றும் நீலம் ஆறு ஆகிய ஆறுகளின் கரையில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் ஒரு மலைப்பாங்கான மாவட்டமாகும். மேற்கில் பஞ்சாபும், காசுமீரின் மாவட்டங்களான குப்வாரா மற்றும் பாரேமுல்லா மாவட்டங்கள் கிழக்கிலும், நீலம் மாவட்டம் வடக்கிலும், பாக் மாவட்டம் தெற்கிலும் சூழ்ந்து முசாஃபராபாத் மாவட்டத்திற்கு எல்லைகளாக அமைகின்றன. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,642 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். முசாஃபராபாத் நகரம் ஆசாத் காசுமீரு மாகாணத்திற்கு ஒரு தலைநகரமாக விளங்குகிறது. முசாஃபராபாத் கோட்டத்தின் ஒரு பகுதி முசாஃபராபாத் மாவட்டமாகும்.

மொழியும் மக்கள் தொகையும்[தொகு]

இம்மாவட்டத்தில் 6,50,370 பேர் வாழ்வதாக 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது [1]. பொதுவாக மாவட்டத்தின் முக்கியமான மொழியாக பல்வேறு வகைகளில் பகாரி மொழி கருதப்படுகிறது. இருப்பினும் சில நேரங்களில் இலக்கியத்தில் சிபலி[2] அல்லது பூஞ்சி மொழி [3] என்று குறிக்கப்படுகிறது. உள்ளூர் முசாஃபராபாத்தில் இம்மொழி இந்துகோ என அறியப்படுகிறது [4] இங்கு இந்துகோ மொழி பேசுபவர்களை மேற்கில் இந்துகோ மொழி பேசுபவர்களிடமிருந்து எளிமையாக அடையாளம் காணலாம்[5], எனினும் அவர்களது பேச்சு பாக் மாவட்டப் பாகங்களில் பேசப்படும் பல்வேறு வகையான மொழியிலிருந்தும், மேலும் முர்ரிக்கு தெற்கே மைய மாவட்டத்தில் பகாரி மொழி பேசப்படும் பகுதியின் மொழியிலிருந்தும் சற்று வித்தியாசப்பட்டும் இருக்கிறது[6].

மத்திய குழுவினரின் பகாரி மொழியில் பயன்படுத்தப்படும் சொல்லகராதியில் உள்ள சொற்கள் உள்ளூர் பேச்சு மொழியில் அதிக அளவில் (83-88%) கலந்துள்ளன. அருகிலுள்ள மேன்செகரா மற்றும் அப்போட்டாபாத் பகுதிகளில் பேசப்படும் இந்துகோ மொழிச் சொற்களின் கலப்பை விட (73–79%) இது அதிகமாகும்[7]. மாவட்டத்தில் பேசப்படும் மற்றொரு மொழி குயாரி மொழியாகும். உள்ளூரில் பேசப்படும் குயாரி மொழி அசாராவில் பேசப்படும் குயாரி மொழி வகைகளுடன் ஒப்பிடுகையில் அடிப்படை சொற்களில் 83-88% ஒற்றுமை காணப்படுகிறது. மற்றும் ஆசாத் காசுமீர் குயாரி மொழியில் 79-86% ஒற்றுமையும் காணப்படுகிறது [8]. முசாபராபாத் நகரில் காசுமீரி மொழி பேசப்படுகிறது. வடக்கே நீலாம் பள்ளத்தாக்கின் பேசப்படும் காசுமீரி மொழியைக் காட்டிலும் மேலும் தெளிவாக இருந்தாலும்கூட, இது வேறுபட்டதாகக் கருதப்படுகிறது [9].

நிர்வாகக் கோட்டங்கள்[தொகு]

முசாஃப்ப்ஃரபாத் மாவட்ட வரைபடம்

முசாஃபராபாத் மாவட்டம் நிர்வாகத்திற்காக மூன்று தாலுக்காக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலும் 51 ஒன்றிய கவுன்சில்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன [10].

  • முசாஃபராபாத் தாலுக்கா
  • பட்டேகா (நசிராபாத்)
  • கேரி துப்பாட்டா
  • தித்வால் தாலுக்கா

கல்வி[தொகு]

பாக்கித்தானின் மாவட்ட கல்வி தரவரிசைப்படி 2017 ஆம் ஆண்டில், அலிஃப் அய்லான் வெளியிட்ட ஒரு அறிக்கையில் முசாபராபாத் தேசிய கல்வித் தரத்தில் 73.85 புள்ளிகள் பெற்று 6 வது இடத்தைப் பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உள்கட்டமைப்பை நோக்கினால் பள்ளிகளின் உள்கட்டமைப்பு தரத்தில் 34.29 புள்ளிகள் பெற்று முசாஃபராபாத் 105 வது இடத்திலேயே உள்ளது, மின்சாரம், குடிநீர் மற்றும் எல்லை சுவர் இல்லாதது. போன்ற உள்கட்டமைப்புகளில் முறையே 11.7, 27.93, 40.09 புள்ளிகளை இம்மாவட்டம் பெற்றுள்ளது. ஒரு பள்ளியில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பொதுவாகப் படிப்பதற்காக உகந்ததாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

பள்ளிகளில் 72% பள்ளிகள் தொடக்கப்பள்ளிகளாகும். 28% பள்ளிகளே தொடக்கப்பள்ளிக்கு மேல் உயர்த்தப்பட்ட பள்ளிகளாகும். ஆகையால் ஆரம்பப்பள்ளிகளிலிருந்து படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்ந்து படிப்பதற்கு போதுமான பிந்தைய ஆரம்ப பள்ளிகள் இங்கு இல்லை. இதனால் படிப்படியாக மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறிப்பாக பெண்கள் பள்ளிக்கு வருவது நிரந்தரமாக குறைந்து வருகிறது. கல்வித்தரத்திற்காக தொடங்கப்பட்ட தலீம் டூ செயலியில் நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் முக்கியமாக உட்கட்டமைப்பு மற்றும் திருப்திகரமான கட்டிடம் இல்லை போன்ற சில புகார்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

நூற்பட்டியல்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 34°19′N 73°39′E / 34.317°N 73.650°E / 34.317; 73.650