உள்ளடக்கத்துக்குச் செல்

முசரப் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோண்தகர் முசரப் உசைன் (Khondaker Mosharraf Hossain) ஒரு வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நவம்பர் 20, 1981 இல் டாக்காவில் பிறந்தார், இடது கை மட்டையாளர் மற்றும் மெதுவான இடது கை மரபுவழா பந்து வீச்சாளர் ஆவார். இவர் சில சமயங்களில் ரூபல் என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார். 2001/02 இல் அறிமுகமான இவர் 2006/07 சீசனின் இறுதி வரை டாக்கா பிரிவுக்காகவும் 2004/05 இல் பாரிசல் பிரிவுக்கு ஒரு பருவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவர் தோன்றினார். இவர் 2005/06 மற்றும் 2006/07 ஆகிய ஆண்டுகளில் பங்களாதேஷ் அ துடுப்பாட்ட அணியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் வங்காளதேச துடுப்பாட்ட அணி தவிர வங்காளதேச அ அணி, பரிசல் பிரிவுத் துடுப்பாட்ட அணி, வஙாளதேச கிழக்குத் துடுப்பாட்ட அணி, தாக்கா பிரிவுத் துடுப்பாட்ட அணி, தாக்கா கிளாடியேட்டர்ஸ் மற்றும் தாக்கா வாரியர்ஸ் துடுப்பட்ட அ னி ஆகிய அணிகளுக்காக இவர் விளையாடி வருகிறார்.இவர் தற்போதுவரை எந்தத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் விளையாடவில்லை.

இவர் சிட்டகொங் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் முதல் தரத் துடுப்பாட்ட ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் மொத்தமாக 105 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 9 இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் இதுவரை மூன்று ஐம்பது ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் சிட்டகாங் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 85 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் சிறந்த மட்டையாட்டம் ஆகும்.

1 அக்டோபர் 2016 அன்று, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இவர் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார், இது வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவுப் பட்டியலில் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், இவர் கொமிலா விக்டோரியன் அணியில் இவர் இடம் பெற்றார்.[1] மார்ச் 2019 ஆம் ஆண்டில் இவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.[2]

துடுப்பாட்டப் போட்டிகள்[தொகு]

2018 ஆம் ஆண்டில் வங்காளதேச துடுப்பாட்ட லீக்கில் இவர் விளையாடினார்.டிசம்பர் 24, சியல்ஹட் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற வங்காளதேச கிழக்குத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் 14 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து தஜூல் இசுலாம் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 25 ஓவர்கள் வீசி 91 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 30 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து நயீம் அசன் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 17 ஓவர்கள் வீசி 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 1 ஓவர்களை மெய்டனாக வீசி 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி 5 இலக்குகளில் வென்றது.

குறிப்புகள்[தொகு]

  1. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Bangladesh cricketer Mosharraf Hossain diagnosed with brain tumour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசரப்_உசைன்&oldid=3530627" இலிருந்து மீள்விக்கப்பட்டது