முக அங்கீகார அமைப்பு
முக அங்கீகார முறைமை (facial recognition system) என்பது ஒரு கணணி மென்பொருள். இந்த மென்பொருள் ஒரு மனிதனை ஒரு படத்தில் இருந்தோ அல்லது ஒரு காணொளியில் இருந்தோ அடையாளம் காணக்கூடிய ஒரு மென்பொருளாகும். முகத்தில் உள்ள சில தனித்துவமான தன்மைகளை ஒப்பிடுவதன் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவை பெரும்பாலாக கண்காணிப்பு முறைமைகளில் பாவிக்கப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல் வேறு உயிரியல் அங்கீகாரமான கைரேகை அங்கீகாரம் மற்றும் கண்ணிமை அங்கீகாரம் என்பதுடன் சேர்த்து பயன்படுகின்றது.[1] அண்மைய காலங்களில் இந்த தொழில்நுட்பமானது ஒரு வர்த்தக அடையாளமாகவும் சந்தைபடுத்தும் கருவியாகவும் உள்ளது.[2]
பாரம்பரியம்
[தொகு]சில முக அடையாள வழிமுறைகள் முகத்தின் அடையாள சின்னங்கள் அல்லது அம்சங்கள் உதாரணமாக கண்கள,மூக்கு, தாடை அவற்றின் நிலை, அளவு மற்றும் வடிவம் மூலம் அடையாளம் காண முடியும். இந்த அம்சங்கள் பின்னர் பொருத்தமான அம்சங்கள் மற்ற படங்களில் தேட பயன்படுகின்றன. இன்னொரு முறை முக படங்களை சேமிக்கும் இடத்தில் சேமித்து பின் அதனை சுருக்கி முக அடையாளம் காணுதலுக்கு பயன்படுத்தப்படும்.
அடையாளம் காணும் வழிமுறைகள் பிரதானமாக இரண்டாக பிரிக்கலாம். வேறுபட்ட அடையாளங்களைக் கொண்டு அறிவது மற்றது ஒத்த அடையாளங்களை கொண்டு அறிவது.
முப்பரிமாண அடையாளம் காணல்.
[தொகு][3] புதிதாக உதிக்கும் உத்தியானது உறுதித்தன்மையை கூட்டும் விதமாக அமையும் முப்பரிமாண அடையாளம் காணல் ஆகும். இங்கு முப்பரிமாண உணரிகள் மூலம் முகத்தின் வடிவம் பற்றிய தகவல் பதிவாக்கப்படுகிறது. முகத்தின் வித்தியாசப்படக்கூடிய கண்கள,மூக்கு,நாடி பற்றிய தகவல்கள் உபயோகிக்கப்படுகிள்றன.
இதன் அனுகூலமானது முக அடையாளம் காணல் வெளிச்சம் மாறுவதனால் பாதிக்கப்படாது. மற்றும் பல்வேறு பார்வை கோணங்களில் இதனை பயன்படுத்தலாம். முகத்தில் இருந்து பெறப்படும் முப்பரிமாண தரவுகள் முக அடையாளப்படுத்தலினை முன்னேற்றியுள்ளது. 3D ஆய்வுகளானது துல்லியமான உணரிகள் மூலம் வளர்ச்சியடைந்துள்ளது. உணரிகளானது அமைப்பான ஒளியை முகத்தில் செலுத்துவதன் மூலம் செயற்படுகிறது. புல உணரிகள் CMOS சிப் இல் இணைக்கப்பட்டு பல்வேறு பாகங்களை இனங்காண்கிறது. முப்பரிமாண படம் எடுப்பதற்கான புதிய முறையானது 3D புகைப்பட கருவிகளை வெவ்வேறு கோணங்களில் பயன்படுத்தல் ஆகும். முதலாவது பொருளின் பக்கத்தையும் மூன்றாவது குறிப்பிட்ட கோணத்தில் வைத்தும் பயன்படுத்தும். இம்மூன்று குறிப்பிட்ட கோணத்தில் வைத்தும் பயன்படுத்தப்படும்.இம்மூன்று ஒரே நேரத்தில் செயற்பட்டு முக அடையாளத்திற்கு பயன்படும்.[4]
தோல் ஆய்வு
[தொகு]மற்றுமொரு வளரும் முறையானது தோலின் தோற்றம் பற்றிய தகவல்களை டிஜிட்டல் முறையாக பெறுதல் ஆகும். இம்முறையானது தோலின் தனித்துவமான கோடுகள்,கோலங்கள்,புள்ளிகள் கொண்டு கணித முறையிலான வடிவத்தை உருவாக்கும்.
ஆய்வுகள் மூலம் தோல் பற்றிய தகவல் சேர்க்கப்படுவதன் மூலம் அடையாளம் காணும் திறன் 20 முதல் 25 வீதம் வரை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. முக அடையாளம் காணுதல் என்பது ஒருவரை அடையாளம் கண்டு கொண்டு சரிபார்க்க பயன்பாடு ஆகும். இதனை டிஜிடல் உருவத்தின் மூலமோ அல்லது வீடியோ மூலமோ அறியலாம். இது பொதுவாக பாதுகாப்பு அமைப்புகளில் கைரேகை அல்லது கண் கருவிழி அடையாளம் காணல் மூலம் உயிரியலளவுகள் மூலம் ஒப்பிடப்படுகிறது. இது போன்ற வணிக அடையாளங்களே தற்போது பிரபலமாக உள்ளது.
வெப்ப புகைப்படக்கருவி
[தொகு]முக அடையாளம் காணலை வெப்ப புகைப்படக்கருவி மூலம் வித்தியாசமான முறையில் உள்ளீட்டைப் பெறும் முறையானது தலையின் வடிவத்தை மட்டும் கருத்தில் கொள்ளும். இம்முறையில் மூக்கு கண்ணாடி,தொப்பி மற்றும் அழகுக்கலை போன்றன கவனிக்கப்படுவதில்லை. இம்முறையில் உள்ள பிரச்சனையானது முக அடையாளம் காணலுக்கான தரவுத்தளம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பது.
டீகோ சொகொலின்கை மற்றும் அன்ரியா செலிக்கர் ஆய்வுகள் இம்முறையை உபயோகப்படுத்துகின்றனர்.குறைந்த உணர்திறன் உள்ள,குறைந்த மின்சார உணரிகள் நீண்ட அலை வெப்ப கழியூதா கதிர்களைப் பெறுகின்றன. ஆறைக்குள்ளான உறுதித் தன்மையானது 97.05 வீதம் வெளி இடத்தில் 93.3 வீதம் மற்றும் இடைப்பட்ட நிலையில் 98.40 வீதம் பாணப்படுகின்றது. இதற்கு 240 பாடங்கள் 10 வாரங்களில் புதிய தரவுத்தளம் அமைக்க பயன்பட்டது. தரவானது வெயில்,மழை,மேக மூட்டமான நாட்களில் எடுக்கப்பட்டது.
முக்கியமான பயன்பாட்டாளர்கள் மற்றும் பயன்பாடுகள்.
[தொகு]அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து வாடிக்கையாளர் சேவையானது தன்னியக்கமாக இயங்கக்கூடிய கதவுகளை முக அடையாளங் காணலை உதவியாகக் கொண்டு செயற்படுத்துகின்றன. கருசியானது நபரின் முகத்தை தான் வைத்துள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு சிப் படத்துடன் ஒப்பிட்டு சரியானவரை அனுமதிக்கிறது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சட்டத்துறையானது கைது செய்யப்பட்டவர்களின் தரவுத் தளத்தை குற்ற ஆய்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறது.
2013 போல் ஜக்கிய இராச்சியத்தில் ஒற்றுமையாக்கப்பட்ட தேசிய முக அடையாள தரவுத்தளம் காணப்படவில்லை. ஆயினும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஜக்கிய இராச்சிய திணைக்களமானது 75 மில்லியன் புகைப்படங்களை கொண்ட ஏளைய தரவுத் தளத்தை உருவாக்கியுள்ளது.
FBI ஆனது கைரேகை,கண்விழி போன்ற முக அடையாளங்களை கொண்டு விமான நிலையத்தில் கடந்து செல்லும் சசியான நபர்களை கண்டறிகிறது.
டொகியுமன் சர்வதேச விமான நிலையமானது நூற்றுக் கணக்கான முக அடையாளங்களை கருத்தில் கொண்டு விமான நிலையத்தில் கடந்து செல்லும் பொருத்தமான நபர்களை கண்டுகொள்கிறது.
மேலதிக பயன்பாடுகள்
[தொகு]பாதுகாப்பு துறைக்கு மட்டுமன்றி முக அடையாளம் காணல் வெவ்வேறு பயன்பாடுகளையும் கொண்டது.
2001 சூப்பர் பவுல் நிகழ்வில், புளோரிடா போலீசார் முக அடையாள மென் பொருளை கொண்டு அந்த நிகழ்வில்ப யங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் கலந்து கொண்டார்களா என்பதைக் கண்காணிக்க பயன்படுத்தினர்.
2000ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மெக்சிக்கன் அரசாங்கம் ஆனது முக அடையாளம் காணும் மென்பொருளைக் கொண்டு போலி வாக்காளர்களைத் தவிர்த்தனர். வேவ்வேறு பெயர்களில் தங்களை பதிவு செய்து பல்வேறு வாக்குகளை இடும் வாக்காளர்களை தவிர்த்தனர். துங்களிடம் உள்ள வாக்காளர் தரவு தளத்தை வருகை தரும் வாக்காளரோடு ஒப்பிட்டு கண்டுபிடித்தனர். இந்த தொழில்நுட்பமே ஜக்கிய இராச்சியத்திலும் போலி அடையாள அட்டைஇவாகன பத்திரம் பெறுவதிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் யவஅகளில் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. வுங்கி அட்டை,அடையாள அட்டைகளுக்குப் பதிலாக யவஅஇல் நபரின் புகைப்படத்தை எடுத்து யவஅ தரவுத் தளத்தோடு ஒப்பிட்டு சேவையை தொடர அனுமதிக்கிறது.
முக அடையாளஙடகளை பயன்படுத்தி கைத்தொலைபேசி மென் பொருளை திறக்கவும் பயன்படுகிறது. முக அடையாளம் மூலம் குறிப்பிட்ட நபரே மென்பொருளை பாவிப்பதை உறுதிப்படுத்துகிறது.
அநுகூலங்களும் பிரதிகூலங்களும்
[தொகு]வேறு தொழினுட்பங்களுடன் ஒப்பிடும் போது biometric இன் பிற உத்திகளில் முக அங்கீகாரமானது மிகவும் நம்பகமற்றதாகவும் வினைத்திறன் அற்றதாகவும் காணப்படலாம். எனினும் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகி பரீட்சாத்தம் செய்கின்ற பொருளின் ஒத்துழைப்பு தேவைப்படாமையை குறிப்பிடலாம். நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள அமைப்பு முறையானது (system) விமான நிலையங்கள், அடுக்கு மாடிகள், பொது இடங்களில் கூட்டத்தின் மத்தியில் அமைப்பு முறை பற்றி எச்சரிக்கையுள்ளவராக இருப்பினும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். Biometric இன் பிற முறைகளான கைவிரல் அடையாளம், கண்மணியை நுட்பமாக சோதித்தல். பேச்சு மூலமாக அடையாளப்படுத்தல் போன்ற முறைகள் கூட இவ்வகையான பெரிய அடையாளப்படுத்தலை மேற்கொள்ளாது. எனினும் புகையிரத நிலையம், விமான நிலையத்தில் நிரப்பப்பட்டுள்ள பாதுகாப்பு அமைப்புகளில் முக அங்கீகார அமைப்பு முறையின் வினைத்திறன் பற்றிய கேள்விகள் எழுந்த வண்ணம்தான் உள்ளன.
பலவீனங்கள்
[தொகு]முக அங்கீகார முறையில் குறைபாடுகள் காணப்படுகின்றன பொதுவாக குறைந்த ஒளி, Sunglasses, நீளமான முடிகள், பகுதியாக மூடப்பட்ட முகம் கொண்ட நபர் போன்ற இடங்களில் தெளிவற்றதன்மை காணப்படுகின்றது. இவை பொதுவாக மாறுபடுகின்ற முக பாவனைகளுக்கும் வினைத்திறன் குறைந்ததாகவே காணப்படுகின்றன.
வினைத்திறன்
[தொகு]இப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு குற்றங்கள் குறைவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. முக அங்கீகார அமைப்பு பொறிமுறை நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் தாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றோம் என்ற ஒரு வித பயத்தினாலேயே குற்றங்கள் செய்ய தயங்குகின்றனர். இக்காரணியால் குற்றங்கள் பெரிதும் குறைகின்றன.
தனியுரிமை தொடர்பான பிரச்சினைகள்
[தொகு]சில அரசாங்கங்கள் அமைப்புகள் குறித்த எல்லைக்குட்பட்ட குடிமக்களின் இருப்பிடங்கள்இ செயற்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது.அலுவலகங்களில் வேலைசெய்பவர்களின் உரிமைகளை பாதுகாத்து விமர்சனங்களை குறைப்பதற்கு ஏதுவாக அமைகின்றது.
இவ்வாறு பொதுமைப்படுத்தப்பட்ட அதிகாரம் நிரம்பிய கண்காணிப்பு சிறப்புரிமையானது முறைகேடாகி அரசியல், பொருளாதாரங்களை கட்டுப்படுத்துகிறது.
இவ்வாறான முக அங்கீகார முறையானது அடையாளப்படுத்தலில் மட்டுமல்லாது தனிநபர் சார்ந்த பிற தரவுகளையும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கின்றது. உதாரணமாக தனிநபர் புகைப்படங்கள் வலைப்பதிவுகள், சமூக வலைத்தள கணக்குகள், வலைத்தள நடவடிக்கைகள், பயண முறைகள். தனிநபர் ஒருவர் முகத்தை மறைக்காதவிடத்து முக அங்கீகார கண்காணிப்பு முறையிலிருந்து தப்புவதற்கு குறைந்தளவான சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன. முக அங்கீகார முறையினால் அடையாளப்படுத்தப்பட்ட தனிநபர் ஒருவரினதோ அரசாங்கத்தினதோ தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க வழிவகுக்கிறது.
முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் காணப்படுகின்ற தனிநபர் தரவுகள் முக அங்கீகார முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சில அரசாங்கங்கள் குடிமக்களின் biometric தரவு சம்பந்தமான தனியுரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்றி வருகின்றன.
சமூக வலைத்தளங்கள் அதன் பாவனையாளர்களின் அனுமதி இல்லாமல் அறிவித்தலும் வழங்காமல் முக அங்கீகார தரவுகளை சேகரித்து சேமித்து வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் biometric தனியுரிமை சட்டத்தின் கீழ் சட்டத்தை மீறுகின்ற செயற்பாடுகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Facial Recognition Applications". Animetrics. Archived from the original on 2008-07-13. பார்க்கப்பட்ட நாள் 2008-06-04.
- ↑ "Facial Recognition: Who's Tracking You in Public?". Consumer Reports (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-04-05.
- ↑ Williams, Mark. "Better Face-Recognition Software". Archived from the original on 2011-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.
- ↑ Crawford, Mark. "Facial recognition progress report". SPIE Newsroom. பார்க்கப்பட்ட நாள் 2011-10-06.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)