முக்ரிஸ் மகாதீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்ரிஸ் மகாதீர்
Mukhriz Mahathir
2020-ஆம் ஆண்டில் முக்ரிஸ் மகாதீர்
கெடா மந்திரி பெசார்
பதவியில்
6 மே 2013 – 3 பிப்ரவரி 2016
பதவியில்
11 மே 2018 – 17 மே 2020
மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை துணை அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2009 – 15 மே 2013
தொகுதிஜெர்லுன்
1-ஆவது தலைவர்
உள்நாட்டு போராளிகள் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஆகத்து 2020
1-ஆவது துணைத் தலைவர்
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி
பதவியில்
7 செப்டம்பர் 2016 – 28 மே 2020
தொகுதிஜெர்லுன்
[[மலேசிய நாடாளுமன்றம் நாடாளுமன்றம்]]
for ஜெர்லுன்
பதவியில்
9 மே 2018 – 19 நவம்பர் 2022
பெரும்பான்மை5,866 (2018)
பதவியில்
8 மார்ச் 2008 – 5 மே 2013
பெரும்பான்மை2,205 (2008)
சட்டமன்ற உறுப்பினர் Member
for ஜித்ரா கெடா மாநில சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 மே 2018
பெரும்பான்மை10,849 (2018)
சட்டமன்ற உறுப்பினர் Member
for ஆயர் ஈத்தாம் கெடா மாநில சட்டமன்றம்
பதவியில்
5 மே 2013 – 9 மே 2018
பெரும்பான்மை2,446 (2013)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முக்ரிஸ் மகாதீர்

25 நவம்பர் 1964 (1964-11-25) (அகவை 59)
கெடா, மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிஅம்னோ (2004–2016)
சுயேட்சை (சூன்-ஆகத்து 2016, மே-ஆகத்து 2020)
பெர்சத்து (2016–2020)
பெஜுவாங் (2020-இல் இருந்து)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் நேசனல் (2004–2016)
பாக்காத்தான் ஹரப்பான் (2017–2020, நட்பு: 2020–2022)
தாயகக் கட்சி (2022–2023)
துணைவர்நூர்சையித்தா சக்காரியா
பிள்ளைகள்4
பெற்றோர்(s)மகாதீர் பின் முகமது
அசுமா முகமது அலி
வாழிடம்(s)5, துன் இசுமாயில் சாலை 1, புக்கிட் துங்கு, கோலாலம்பூர்
முன்னாள் கல்லூரிசோபியா பல்கலைக்கழகம்
பாஸ்டன் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகர்
இணையத்தளம்mukhriz.com
மலேசிய நாடாளுமன்றம்

முக்ரிஸ் மகாதீர் (ஆங்கிலம்: Mukhriz Mahathir; மலாய்: Dato' Seri Utama Mukhriz bin Tun Dr. Mahathir; ஜாவி: محاضر; مخرج بن சீனம்: 慕克里·马哈迪) (பிறப்பு: 25 நவம்பர் 1964) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மலேசியா கெடா மாநிலத்தின் மந்திரி பெசார் எனும் முதலமைச்சர் (Menteri Besar of Kedah) பதவியை இரு முறை வகித்தவர் ஆகும்.

மே 2013 முதல் பிப்ரவரி 2016 வரையில் கெடா மாநிலத்தின் 11-ஆவது மந்திரி பெசார்; மீண்டும் மே 2018 முதல் மே 2020 வரையில் 13-ஆவது மந்திரி பெசார் என இரு முறை முதலமைச்சராகப் பணியாற்றியவர்.

முன்னாள் பிரதமர்கள் அப்துல்லா அகமது படாவி (Abdullah Badawi) மற்றும் நஜீப் ரசாக் (Najib Razak) ஆகியோரின் பாரிசான் நேசனல் (Barisan Nasional) (BN) நிர்வாகத்தின் கீழ், மார்ச் 2008 முதல் மே 2013 வரை; மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை துணை அமைச்சராகவும் (Deputy Minister of International Trade and Industry) பணியாற்றினார்.

பொது[தொகு]

முக்ரிஸ் மகாதீர், மலேசியாவின் 4-ஆவது, 7-ஆவது பிரதமரான மகாதீர் முகமதுவின் மூன்றாவது மகன் ஆவார். மலேசிய வரலாற்றில் இரண்டு வெவ்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கூட்டணிகளைப் பிரதிநிதித்த இரண்டு மந்திரி பெசார்களில் இவரும் ஒருவர் ஆகும்.

இவர் தன் தந்தையார் மகாதீர் முகமதுவுடன்; பாரிசான் நேசனல் கூட்டணியின் ஓர் அங்கமான அம்னோவின் (UMNO) உறுப்பினராக இருந்தார். 2016-இல் பெர்சத்து உருவாகும் வரையில் இவரும் இவரின் தந்தையாரும் அம்னோவின் உறுப்பினர்களாக இருந்தனர்.

பின்னர் ஆகத்து 2020-இல் உள்நாட்டு போராளிகள் கட்சி (Homeland Fighters' Party) (PEJUANG) நிறுவப்பட்டது. அப்போது இருந்து இவர் அந்தக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும்; முதல் தலைவராகவும் இருந்து வருகிறார்.[1]

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்[தொகு]

அத்துடன் மார்ச் 2008 முதல் மே 2013 வரை; மே 2018 முதல் அக்டோபர் 2022 வரை, ஜெர்லூன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (Jerlun Federal Constituency) பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் அல்லாமல் கெடா மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும் (Kedah State Legislative Assembly) பணிபுரிந்து உள்ளார்.

மே 2018 முதல் கெடா மாநிலத்தின் ஜித்ரா தொகுதிக்கான (Jitra State Constituency) சட்டமன்ற உறுப்பினராகவும்; மே 2013 முதல் மே 2018 வரை ஆயர் ஈத்தாம் தொகுதிக்கான (Ayer Hitam State Constituency) சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

முக்ரிஸ் மகாதீர், 1987-ஆம் ஆண்டில் தோக்கியோவில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் (Sophia University) வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் அவர் 1989-ஆம் ஆண்டில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் (Boston University) மற்றோர் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2][3][4]

முக்ரிஸ் பல வணிக நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அதில் ஆப்காம் நிறுவனம் (Opcom Holdings); கோசுமோ டெக் (Kosmo Tech)[5] மற்றும் மலேசிய உரிமைச் சங்கம் (Malaysian Franchise Association)[6] ஆகியவை அடங்கும்.[8] பெர்டானா பன்னாட்டு அமைதி அமைப்பின் (Perdana Peace Global Organisation) நிர்வாக இயக்குனராகவும் இருந்தார்.[7] அவர் மலேசிய புற்றுநோய் தடுப்பூசி நிறுவனமான பயோவென் (Bioven) இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[8]

முக்ரிஸ் 14 நவம்பர் 1993-இல் புவான் ஸ்ரீ உத்தாமா நோர்சியேட்டா சக்காரியா (To' Puan Seri Utama Norzieta Zakaria) என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

சர்ச்சை[தொகு]

27 ஆகத்து 2020-இல், மீட்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (Movement Control Order) (MCO) விதிகளை மீறியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தன்னுடைய மகள் மற்றும் மருமகன் என்று முக்ரிஸ் ஒப்புக்கொண்டார்.[9][10][11] 2020 ஆகத்து 28-இல், முக்ரிசின் மகள் மீரா அல்யன்னா முக்ரிஸ் (Meera Alyanna Mukhriz), மதியம் 12 மணிக்கு மேல் ஓர் உணவகத்தில் இருந்ததன் மூலம் மீட்பு இயக்கம்-கட்டுப்பாட்டு உத்தரவை (Recovery Movement-Control Order) (RMCO) மீறியதற்காக மன்னிப்பு கோரினார்.[12][13]

சான்றுகள்[தொகு]

  1. "Former Malaysian PM Mahathir and 4 other MPs sacked from Bersatu". CNA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-29.
  2. "Yab Dato' Seri Paduka Hj Mukhriz Bin Tun Mahathir".
  3. "Mukhriz Hanya Mampu Bertahan 3 Tahun Sebagai MB Kedah - MYNEWSHUB".
  4. "Mukhriz Mahathir: Executive Profile & Biography - Bloomberg". Bloomberg News.
  5. Board of directors பரணிடப்பட்டது 10 மார்ச்சு 2007 at the வந்தவழி இயந்திரம்
  6. Openings for franchise companies
  7. Mukhriz: More time needed to bring peace to southern Thailand பரணிடப்பட்டது 21 மே 2011 at the வந்தவழி இயந்திரம்
  8. Board of Directors பரணிடப்பட்டது 7 சனவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
  9. Asyraf, Faisal (2020-08-27). "Mukhriz 'disappointed' daughter, son-in-law breached MCO". Malaysiakini.
  10. "Mukhriz confirms daughter, son-in-law among 29 fined for violating recovery MCO". The Star (in ஆங்கிலம்). 2020-08-27.
  11. Arif, Zahratulhayat Mat (2020-08-27). "Mukhriz confirms daughter, son-in-law picked up over RMCO breach". NST Online (in ஆங்கிலம்).
  12. "Mukhriz's daughter Ally apologises for RMCO breach". www.themalaysianinsight.com (in ஆங்கிலம்).
  13. Babulal, Veena; Solhi, Farah (2020-08-28). "Ally Mukhriz 'deeply ashamed' for breaking RMCO rules". NST Online (in ஆங்கிலம்).

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்ரிஸ்_மகாதீர்&oldid=3905776" இலிருந்து மீள்விக்கப்பட்டது