முக்திதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முக்திதம் (Muktidham) என்பது பல்வேறு இந்து கடவுள்களைக் கவுரவிக்கும் வகையிலான பளிங்கு கோயில் வளாகமாகும். இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் நகரின் புறநகர்ப் பகுதியான நாசிக் சாலையில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது ஒரு அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. உள்ளூர் தொழிலதிபர் மறைந்த திரு. ஜே.டி. சவுகான்-பைட்கோவின் தாராள நன்கொடை மூலம் கட்டப்பட்டது.[1] [2] இந்த கோயில் 1971 இல் நிறுவப்பட்டது.

இங்கு 12 ஜோதிர்லிங்கங்களின் பிரதிகளைக் கொண்டுள்ளது. இவை அசல் தெய்வங்களின் பரிமாணத்தின் படி கட்டப்பட்டுள்ளன. மேலும் இவை அந்தந்த யாத்திரை மையங்களுக்கு அனுப்பப்பட்டதன் மூலம் புனிதப்படுத்தப்பட்டுள்ளன.[1] [2]

மேலும், முக்திதம் வளாகத்தில் கிருட்டிணருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. கிருட்டிணர் கோயிலின் சுவர்களில் கிருட்டிணர் மற்றும் மகாபாரத காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் உள்ளன. இவற்றைப் பிரபல ஓவியர் ரகுபீர் முல்கோன்கர் வரைந்துள்ளார். இவரின் சேவைகளை முக்திதத்தின் நிறுவனர் ஜெயராம்பாய் சவுகான் பயன்படுத்திக் கொண்டார்.[3] [4] இந்த கோயிலின் தனித்துவமானது பகவத்கீதாவின் பதினெட்டு அத்தியாயங்களும் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.[2][5]

இந்த கோயிலில் உள்ள பளிங்குக் கற்கள் ராஜஸ்தானில் உள்ள மக்ரானாவிலிருந்து கொண்டுவரப்பட்டது. இவை ராஜஸ்தானி சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.[2]

இக்கோயிலில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களின் பிரதிகளைத் தவிர, ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் அனைத்து முக்கிய இந்து கடவுள்களின் சிலைகளும் (விஷ்ணு, லட்சுமி ராம, லட்சுமணன், சீதா, அனுமன், துர்கா, விநாயகர்) உள்ளன. [1] [2]

நகரத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்திதம் ஒன்றாகும். கும்பமேளாவின் போது ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் முக்திதம் கோயிலுக்கு வருகை தருகின்றனர். [2]

மேலும், இந்த வளாகத்தில் ஒரு தர்மசாலையும் உள்ளது. இதில் குறைந்தது 200 யாத்திரிகர்கள் தங்கலாம். [6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்திதம்&oldid=3101902" இருந்து மீள்விக்கப்பட்டது