முக்தா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்தா குப்தா (Mukta Gupta)(பிறப்பு 28 ஜூன் 1961) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், தில்லி அரசின் முன்னாள் அரசு வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.[1] அரசு வழக்கறிஞராக பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார். இதில் இந்திய நாடாளுமன்றம் மீதான 2001 தாக்குதல் மற்றும் 2000ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள செங்கோட்டை மீதான பயங்கரவாத தாக்குதல், மற்றும் ஜெசிகா லால் மற்றும் நைனா சாகனி ஆகியோரின் கொலை வழக்குகள் குறிப்பிடத் தக்கனவாகும்.[1]

மாண்புமிகு நீதியரசர்
முக்தா குப்தா
நீதிபதி- தில்லி உயர்நீதி மன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 அக்டோபர் 2009
பரிந்துரைப்புகே. ஜி. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதீபா பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சூன் 1961 (1961-06-28) (அகவை 62)
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

வாழ்க்கை[தொகு]

குப்தா டெல்லியில் உள்ள மான்ட்போர்ட் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், 1980ஆம் ஆண்டில் தில்லி இந்து கல்லூரியிலிருந்து இளம் அறிவியல் கல்வியினையும், தில்லி பல்கலைக்கழக சட்ட பீடத்தில் சட்டம் கல்வியினையும் பயின்றார்.[1]

தொழில்[தொகு]

குப்தா 1984ஆம் ஆண்டு தில்லி சட்டக் குழுவில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தில்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1]

1993ஆம் ஆண்டில், தில்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக குப்தா நியமிக்கப்பட்டார். மேலும் இவர் குற்றவியல் விடயங்களைக் கையாளும் இந்தியாவின் தேசிய தலைநகர் தில்லியின் அரசாங்கத்தின் நிலையான ஆலோசகராகவும் செயல்பட்டார்.[1] புது தில்லியில் உள்ள அனைத்திந்திய இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் சட்டப் பிரதிநிதியாகவும், சட்டத்திற்கு முரண்பட்ட கைதிகள் மற்றும் சிறார் மறுவாழ்வு தொடர்பான திட்டங்களில், தில்லி சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1][2]

அரசு வழக்கறிஞராக, ஜெசிகா லால் கொலை, நைனா சாகானியின் கொலை, [3] நிதிஷ் கட்டாராவின் கொலை, இந்திய நாடாளுமன்றம் நீதான 2001 தாக்குதல் தொடர்பான குற்ற வழக்குகள் உட்படப் பல குறிப்பிடத்தக்கக் குற்ற வழக்குகளில் குப்தா விசாரித்துள்ளார். 2000ஆம் ஆண்டு தில்லியில் செங்கோட்டை மீது பயங்கரவாத தாக்குதல் வழக்கிலும் இவர் வாதாடியுள்ளார்.[1][2]

பிரியதர்சினி மட்டூ மற்றும் மதுமிதா சர்மாவின் கொலைகள், இந்தியக் கடற்படை போர் அறையிலிருந்து உளவுத்துறை கசிவு தொடர்பான வழக்கு உட்படப் பல முக்கிய வழக்குகளில் குப்தா நடுவண் புலனாய்வுச் செயலகம் சார்பில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.[1][2]

நீதித்துறை[தொகு]

குப்தா 2009இல் தில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2014இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1][4]

நீதிபதியாக, காங்கிரசு தலைவர் சசி தரூரை அவதூறாகப் பேசிய தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிரான வழக்கு உட்படப் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்துள்ளார்.[5] இந்தியாவில் பயங்கரவாத சதி செய்ததற்காக பாகிஸ்தானியர் ஒருவரைக் குற்றவாளியாக்கிய வழக்கிலும் தீர்ப்பளித்துள்ளார்.[6] அக்டோபர் 2020இல், இந்திய உச்ச நீதிமன்ற சட்ட சங்க செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிவாரணம் வழங்க குப்தா மறுத்துவிட்டார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவை நீதித்துறை நெறிமுறையை மீறியதற்காகவும், பிரதமரைப் புகழ்ந்து பேசியதற்காகவும், சங்கத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இவர் தலையிட முயன்றதைத் தொடர்ந்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டது.[7] [8]

2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (சிமி) சட்டத்தின் கீழ் சட்டவிரோத சங்கமாக அறிவிக்கப்பட வேண்டுமா என்பதை ஆராயச் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் 1967இன் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குப்தா சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[9]

இந்தியாவில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் குறித்து குப்தா பல வழக்குகளில் தீர்ப்பளித்தார். 2012ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கையூட்டு வாங்கியதாகக் கூறிய இராணுவ செய்திக்குறிப்பைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை குப்தா மறுத்துவிட்டார், இந்தியச் சட்டம், 'நற்பெயர் உரிமையை' அடிப்படை உரிமையாக அமல்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார். [10] ஜூலை 2020இல், கூகிள், முகநூல் மற்றும் டுவிட்டருக்கு பெண் ஊழியர் மீது குற்றவியல் நடத்தை குற்றச்சாட்டுகள் அடங்கிய இடுகைகளை நீக்குமாறு உத்தரவிட்டார். அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.[11][12]

ஏப்ரல் 2020இல், குப்தா புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் எச்.ஐ.வி-பாசிட்டிவ் எனப் பரிசோதித்ததை அடுத்து, மருத்துவப் பராமரிப்புக்கான அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "CJ And Sitting Judges: Justice Mukta Gupta". Delhi High Court. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  2. 2.0 2.1 2.2 "Justice Mukta Gupta made permanent Delhi HC judge". 2014-05-29. https://www.business-standard.com/article/current-affairs/justice-mukta-gupta-made-permanent-delhi-hc-judge-114052901049_1.html. பார்த்த நாள்: 2020-10-23. 
  3. "Tandoor case: Judge recuses from hearing Sushil Kumar Sharma's parole plea". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/tandoor-case-judge-recuses-from-hearing-sushil-kumar-sharmas-parole-plea/articleshow/38093486.cms. பார்த்த நாள்: 2020-10-23. 
  4. "Justice Mukta Gupta made permanent Delhi High Court judge". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/justice-mukta-gupta-made-permanent-delhi-high-court-judge/articleshow/35722451.cms. 
  5. "Delhi High Court questions Arnab Goswami for running parallel investigation in Pushkar death case, asks to show restraint". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-09-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  6. "Life term to Pakistan national for 'waging war' against India". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/life-term-to-pakistan-national-for-waging-war-against-india/articleshow/48560388.cms. 
  7. "Supreme Court Bar Association Gets Notice Over Suspended Secretary's Plea". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  8. "Delhi HC Declines to Stay Suspension of SCBA Secretary Who Dissented Against Criticism of Justice Arun Mishra". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  9. "Central Government constitutes Unlawful Activities (Prevention) Tribunal : "SIMI" an unlawful association?". SCC Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-02-22. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  10. "HC refuses to ask govt to withdraw army press release". Hindustan Times (in ஆங்கிலம்). 2012-05-24. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  11. "HC directs Google, FB, Twitter to take down posts, tweets defaming suspended IAS officer". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/hc-directs-google-fb-twitter-to-take-down-posts-tweets-defaming-suspended-ias-officer/articleshow/77053274.cms. 
  12. "Remove posts defaming suspended IAS officer: Delhi HC to Google, FB, Twitter". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-07-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  13. "Delhi HC directs AIIMS to treat HIV-positive woman with mouth cancer". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-04-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_குப்தா&oldid=3285788" இலிருந்து மீள்விக்கப்பட்டது