முக்தார் அன்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தார் அன்சாரி
மௌ தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 1996
முன்னவர் நசீம்
தொகுதி மௌ
தனிநபர் தகவல்
பிறப்பு 30 சூன் 1963 (1963-06-30) (அகவை 60)
யூசப்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
அரசியல் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
குவாமி ஏக்தா தள்
வாழ்க்கை துணைவர்(கள்)
அப்சான் அன்சாரி (தி. 1989)
பிள்ளைகள் அப்பாஸ் அனசாரி
உமர் அன்சாரி
இருப்பிடம் காசீப்பூர், உத்தரப் பிரதேசம்
தொழில் அரசியல்வாதி

முக்தார் அன்சாரி (Mukhtar Ansari) (பிறப்பு 30 சூன் 1963) அரசியல்வாதியான இவர், [2] [3] [4] [5] [6] [7] [8] [9] உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் தலைவர் ஆவார். இவர் மௌ தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருட்டிணானந்த் ராய் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக இருந்த இவர், 13 ஆண்டுகள் சிறையில் கழித்தார். இவருக்கு எதிராக சாட்சிகள் பிறல் சாட்சியாகத் திரும்பி பிறகு இவர், 3 சூலை 2019 அன்று சிறையிலிருந்து வெளியே வந்தார். [10] [11]

அன்சாரி தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராகவும், அடுத்த இரண்டு தடவை சுயேச்சையாகவும் வெற்றி பெற்றார். 2007 இல், இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். இவரது குற்றச் செயல்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சி 2010 இல் இவரை கட்சியிலிருந்து வெளியேற்றிய பின்னர், இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து குவாமி ஏக்தா தள் என்ற ஒரு கட்சியை உருவாக்கினார். 2012 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் மௌ தொகுதியில் இருந்து வென்றார். இவர் குவாமி ஏக்தா தளத்தை பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைத்து, மாநிலத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார். முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கிருட்டிணாந்த் ராயின் கொலை குற்றச்சாட்டிலிருந்து நடுவண் புலனாய்வுச் செயலக சிறப்பு நீதிமன்றம் இவரை விடுவித்தது. [12]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

முக்தார் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்பகால தலைவரான முக்தார் அகமது அன்சாரியின் பேரனாவார். [13]

1970களின் முற்பகுதியில், பின்தங்கிய பூர்வாஞ்சல் பகுதியில் அரசாங்கம் பல மேம்பாட்டுத் திட்டங்களை அமைத்தது . இதன் விளைவாக இந்த திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை கைப்பற்ற பல கும்பல்கள் எழுந்தன. [14] முக்தார் அன்சாரி முதலில் மகானு சிங் கும்பலில் உறுப்பினராக இருந்தார். 1980 களில், இந்த கும்பல் சைத்பூரில் ஒரு நிலம் தொடர்பாக சாகிப் சிங் தலைமையிலான மற்றொரு கும்பலுடன் மோதியது. இதன் விளைவாக தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. சாகிப் சிங் கும்பலின் உறுப்பினரான பிரிஜேஷ் சிங் பின்னர் தனது சொந்தக் கும்பலை உருவாக்கி 1990 களில் காசிப்பூரின் ஒப்பந்தப் பணிகளைக் கைப்பற்றினார். நிலக்கரி சுரங்கம், இரயில்வே கட்டுமானம், மறுசுழற்சிப் பொருட்களை அகற்றல், பொதுப்பணி மற்றும் மதுபான வர்த்தகம் போன்ற 100 கோடி ஒப்பந்த வணிகத்தை கட்டுப்படுத்த அன்சாரியின் கும்பல் இவருடன் போட்டியிட்டது. கடத்தல் போன்ற பிற குற்றச் செயல்களைத் தவிர, மிரட்டி பணம் பறித்தல் போன்ற மோசடிகளிலும் இந்த கும்பல்கள் ஈடுபட்டன. [15]

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை[தொகு]

1990களின் முற்பகுதியில், முக்தார் அன்சாரி தனது குற்றச் செயல்களுக்காக நன்கு அறியப்பட்டார். குறிப்பாக மௌ, காசிப்பூர், வாரணாசி மற்றும் ஜான்பூர் மாவட்டங்களில். இவர் 1995 இல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார், பிரிஜேஷ் சிங்கின் ஆதிக்கத்தை சவால் செய்யத் தொடங்கினார். இருவரும் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் முக்கிய கும்பல் போட்டியாளர்களாக மாறினர். [14] 2002 ஆம் ஆண்டில், சிங் அன்சாரியின் காவலரை கடத்தினார். இதன் விளைவாக ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அன்சாரியின் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர். பிரிஜேஷ் சிங் படுகாயமடைந்து இறந்துவிட்டார் என்று கருதப்பட்டது. அன்சாரி பூர்வாஞ்சலில் மறுக்கமுடியாத கும்பல் தலைவரானார். இருப்பினும், பிரிஜேஷ் சிங் பின்னர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பகை மீண்டும் தொடங்கியது. அன்சாரியின் அரசியல் செல்வாக்கை எதிர்கொள்ள, பாஜக தலைவர் கிருட்டிணானந்த் ராயின் தேர்தல் பிரச்சாரத்தை சிங் ஆதரித்தார். 2002 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் முகமதாபாத்தில் இருந்து முக்தார் அன்சாரியின் சகோதரரும் ஐந்து முறை சட்டமனற உறுப்பினருமான அப்சல் அன்சாரியை ராய் தோற்கடித்தார். பிரிஜேஷ் சிங்கின் கும்பலுக்கு அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்க ராய் தனது அரசியல் அலுவலகத்தைப் பயன்படுத்தினார் என்றும் பின்னர் அவரை அகற்ற இருவரும் திட்டமிட்டதாகவும் முக்தார் அன்சாரி பின்னர் கூறினார். [15]

கொலை வழக்கில் சிறை தண்டனை[தொகு]

ஆட்கடத்தல், கொலை வழக்குகளில் முக்தார் அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.[16] இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணாநந்த ராய் கொலை வழக்கில் முக்தார் அன்சாரிக்கு 29 ஏப்ரல் 2023 அன்று நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.[17][18]

குறிப்புகள்[தொகு]

 1. "Member Profile". official website of Legislative Assembly of Uttar Pradesh. http://www.upvidhansabhaproceedings.gov.in/member?memberId=19758. பார்த்த நாள்: 16 December 2018. 
 2. "Rivalry between two mafia dons-turned-politicians turns Uttar Pradesh into a battlefield". http://indiatoday.intoday.in/story/rivalry-between-two-mafia-dons-turned-politicians-turns-uttar-pradesh-into-a-battlefield/1/192665.html. 
 3. "Why Mukhtar Ansari in Varanasi should worry Modi, Kejriwal". http://www.firstpost.com/election-diary/why-mukhtar-ansari-contesting-from-varanasi-should-really-worry-modi-kejriwal-1442423.html. 
 4. "UP jails turn parlour houses - Deccan Herald". http://archive.deccanherald.com/deccanherald/nov102004/i9.asp. 
 5. "Gangs of UP: The bloody rivalry between Mukhtar Ansari and Brijesh Singh". https://in.news.yahoo.com/gangs-bloody-rivalry-between-mukhtar-175602506.html. 
 6. "Mafia-Turned-Politician Mukhtar Ansari's Party To Merge With SP". http://www.news18.com/news/politics/mafia-turned-politician-mukhtar-ansaris-party-to-merge-with-sp-1258828.html. 
 7. "Gangster-Turned-Politician Mukhtar Ansari Joins BSP Ahead Of Uttar Pradesh Elections". http://www.huffingtonpost.in/2017/01/26/gangster-turned-politician-mukhtar-ansari-joins-bsp-ahead-of-utt/. 
 8. "Akhilesh Yadav’s move to stop Mukhtar Ansari may be too little, too late". http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/akhilesh-yadavs-move-to-stop-mukhtar-ansari-may-be-too-little-too-late/articleshow/52946955.cms. 
 9. "SP may soon embrace Mukhtar Ansari’s party for UP poll benefit". http://indianexpress.com/article/india/india-news-india/sp-may-soon-embrace-mafia-dons-party-for-up-poll-benefit-2979086/. 
 10. "Mukhtar Ansari acquittal verdict could’ve been different if witnesses were protected: Court". https://theprint.in/india/mukhtar-ansari-acquittal-verdict-could-have-been-different-if-witnesses-were-protected-court/260634/. 
 11. "Watertight case against Mukhtar Ansari crumbles with hostile witnesses". https://timesofindia.indiatimes.com/city/lucknow/watertight-case-against-mukhtar-crumbles-with-hostile-witnesses/articleshow/70066855.cms. 
 12. [1]
 13. "Robinhoods who scare world's most-wanted Dawood Ibrahim". Daily Bhaskar. 2012-07-18. http://daily.bhaskar.com/article/UP-photos-robinhoods-who-scare-worlds-most-wanted-dawood-ibrahim-3540419.html. 
 14. 14.0 14.1 Alka Pande (2005-12-09). "A Slice Of Sicily". Outlook. http://www.outlookindia.com/article.aspx?229602. 
 15. 15.0 15.1 Aman Sethi (17–30 December 2005). "Rule of the outlaw". Frontline 22 (26). http://www.frontline.in/static/html/fl2226/stories/20051230004301700.htm. 
 16. Mukhtar Ansari booked for murder after 21 yrs, sixth case since in prison
 17. Ex-MLA Mukhtar Ansari Gets 10 Years In Prison In Connection With Murder Of Cong Leader's Brother
 18. Mukhtar Ansari convicted in kidnapping, murder case; gets 10 years imprisonment
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தார்_அன்சாரி&oldid=3702970" இருந்து மீள்விக்கப்பட்டது