முக்தாமணி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தாமணி தேவி
Muktamani Devi
பிறப்புமணிப்பூர்
பணிபுத்தாக்கம், தொழில் முனைவு
அறியப்படுவதுமுக்தா காலணி தொழிற்சாலை
விருதுகள்பத்மசிறீ

முக்தாமணி தேவி (Muktamani Devi) இந்திய மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். மொய்ராங்தெம் முக்தாமணி தேவி என்ற பெயராலும் இவர்  அழைக்கப்படுகிறார், எளிமையான கையால் பின்னப்பட்ட கம்பளியாலான காலணிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவினார். 1990 இல் மணிப்பூரின் காக்ச்சிங்கில் நிறுவப்பட்ட முக்தா காலணி தொழிற்சாகையில் இந்த காலணிகள் தயாரிக்கப்பட்டன. கம்பளி மற்றும் பின்னல் பூந்தையல் பிரிவின் கீழ் தௌபலில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1] [2] [3]

மக்களுக்கு காலணிகள் தயாரிக்கும் கைவினைப் பயிற்சியும் அளிக்கிறார். ஏற்கனவே 1000 எண்ணிக்கைக்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

முக்தாமணி தேவி, 1958 ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தார். மணிப்பூரின் காக்சிங் மொய்ராங்தெம் இவருடைய சொந்த ஊராகும். விதவை தாயால் வளர்க்கப்பட்டார். 17 வயதாக இருந்தபோது திருமணம் நடந்தது. முக்தாமணி பகலில் நெல் வயலில் வேலை செய்து மாலையில் வீட்டில் தின்பண்டங்களை விற்று வந்தார். இரவுகளில் ஏந்து பைகள் மற்றும் கூந்தல் பட்டைகள் பின்னி, கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக அவற்றையும் விற்பார்.[2] 1989 ஆம் ஆண்டு தொழில்முனைவோர் உலகிற்குள் தற்செயலாக நுழைந்தார். பழைய தேய்ந்து போன காலணிகளுக்குப் பதிலாகப் புதிய இணை காலணிகள் வேண்டும் என்று மகள் கேட்டபோது, புதிய இணை செருப்பு வாங்கத் தேவையான பணத்தைத் திரட்ட முடியாமல், முக்தாமணி தன் மகளுக்காக கம்பளிக் காலணிகளைப் பின்னினார். இந்த கையால் பின்னப்பட்ட காலணிகள் வகுப்பு ஆசிரியர் மற்றும் நண்பர்களின் கவனத்தை ஈர்த்தது, மேலும் அவர்கள் தங்களுக்கும் இதேபோன்ற காலணிகளை உருவாக்குமாறு கோரினர். இந்த வாய்ப்பை உடனடியாக உணர்ந்த முக்தாமணி, கையால் பின்னப்பட்ட கம்பளி காலணிகளை வணிக ரீதியாக தயாரிக்கும் சிறிய அலகொன்றை தொடங்க முடிவு செய்தார். முக்தா காலணி தொழிற்சாலையை நிறுவினார், காலப்போக்கில், தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் கடுமையான உழைப்பின் காரணமாக, முக்தா தயாரிப்புகள் தேசிய மற்றும் பன்னாட்டு சந்தைகளுக்கு வழிவகுத்தன.[2]

பத்மசிறீ[தொகு]

  • 2022 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறப்பான சேவைக்காக முக்தாமணி தேவிக்கு, பத்ம தொடர் விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு வழங்கியது. [4] மணிப்பூரைச் சேர்ந்த உத்வேகமான பெண் தொழிலதிபராக கைவினைப்பொருளான கம்பளி காலணிகளை ஏற்றுமதி செய்து பிரபலப்படுத்தியதற்காகவிம் இவரது சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்பட்டது. [5]

மற்ற சாதனைகள்[தொகு]

  • அனைத்து மணிப்பூர் தொழில் மேளாவில் வெற்றி பெற்றார் (1993) [1]
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகப் பரிசு, இந்திய அரசு (2006 மற்றும் 2009) [1]
  • சிட்டிகுரூப் குறு தொழில்முனைவோர் விருது (தேசிய விருது) (2006) [3]
  • தலைசிறந்த கைவினைஞருக்கான மாநில விருது (2008) [3]
  • 2013-14 ஆம் ஆண்டின் சிறந்த பெண் தொழிலதிபர் (2015) [3] [6]
  • 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய ஆயுள்காப்பீடு மற்றும் தேசிய தந்தி நிறுவனங்கள் மூலம் நிறுவப்பட்ட  உண்மையான பிரபலங்கள் விருது [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Manipur adds another feather to its cap through Moirangthem Muktamani". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
  2. 2.0 2.1 2.2 Swetha Vangaveti. "Meet the woman who once worked in the paddy field has become a global entrepreneur". Book of Achievers. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
  3. 3.0 3.1 3.2 3.3 B Rakesh Sharma. "The journey of Moirangthem Muktamani Devi: From a humble mother to Padma Shri". Imphal Free Press. Imphal Free Press. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
  4. "Padma Awards 2022" (PDF). Padma Awards. Ministry of Home Affairs, Govt of India. Archived from the original (PDF) on 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  5. "Padma Awards 2022". Padma Awards. Ministry of Home Affairs, Govt of India. Archived from the original on 2022-01-29. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  6. "Muktamani gets entrepreneur award". E-PAO (Now the World Knows). E-PAO (The Sangai Express). பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
  7. Telegraph Beureau. "And so the legend goes..." The Telegraph Online. The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.

கூடுதல் வாசிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தாமணி_தேவி&oldid=3421250" இலிருந்து மீள்விக்கப்பட்டது