முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியல்[தொகு]

வேதியியலில் முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியலானது மைய அணுவினை சுற்றி ஆறு அணுக்கள், அணுக்களின் குழுக்கள் அல்லது ஈனிகள் முக்கோண பெட்டகத்தின் உச்சி புள்ளிகளாக அமைந்திருக்கும் சோ்மங்களின் வடிவத்தை விளக்குகிறது.


உதாரணங்கள்[தொகு]

முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு.

முக்கோண பெட்டக வடிவமுடைய மூலக்கூறின் முதல் உதாரணம் ஹெக்சாமெத்தில் டங்ஸ்டன், அதாவது (W(CH3)6)ஆகும். வேறுசில இடைநிலை உலோகங்கள் முக்கோண பெட்டக வடிவமுடைய மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. Mo(CH3)6 மற்றும் Re(CH3)6 மேலும் Ta(CH3)-6 ;மற்றும் Zr (CH3)2-6 போன்ற அயனிகள்.

MO(S-CH=CH-S)3 என்ற மூலக்கூறில் S-CH=CH-S என்ற உறுப்பானது இருமுனைய ஈனியாக செயல்படுகிறது. இதில் இரு S-அணுக்களும் உலோக அணுவினை இணைக்கிறது. இங்கு மாலிப்டினியத்தை சுற்றி அமைந்துள்ள ஆறு கந்தக அணுக்களின் அணைவு வடிவியல் அமைப்பானது மாலிப்டினியம்-டை-சல்பைடுவின் நீட்டிக்கப்பட்ட அமைப்பினை ஒத்துள்ளது.

சான்றுகள்:[தொகு]

1.Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. p. 725. ISBN 978-0130399137.
2. Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. ISBN 978-0130399137.