முக்கோணத் தள மூலக்கூற்று வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கோணத் தள வடிவத்துடன் கூடிய குறிக்கோள்நிலை அமைப்புக்கொண்ட ஒரு சேர்வை.

வேதியியலில், முக்கோணத் தள மூலக்கூற்று வடிவம் என்பது, நடுவில் ஒரு அணுவையும், அதைச் சுற்றிலும், ஒரு முக்கோண வடிவில் வெளிப்புற அணுக்கள் எனப்படும் மூன்று அணுக்களும் ஒரே தளத்தில் அமைந்திருக்கும் ஒரு மூலக்கூற்று வடிவ மாதிரி ஆகும். ஒரு குறிக்கோள்நிலை முக்கோணத் தள அமைப்பில், மூன்று ஈந்தணைவிகளும் முழுதொத்தவை ஆகவும், பிணைப்புக் கோணங்கள் 120° ஆகவும் இருக்கும். இவ்வாறான மூலக்கூற்று இனங்கள் புள்ளித் தொகுதி D3h ஐச் சேர்ந்தவை. H2CO போல் முழுதொப்பு இல்லாத ஈந்தணைவிகளைக் கொண்ட மூலக்கூறுகள் குறிக்கோள் நிலையில் இருந்து விலகியிருக்கும். போரான் மூபுளோரைடு (BF3), பாமல்டிகைடு (H2CO), பாசுஜீன் (COCl2), கந்தக மூவொட்சைடு (SO3) என்பன முக்கோணத் தள வடிவம் கொண்ட மூலக்கூறுகளுக்கு எடுத்துக்காட்டுகள். முக்கோணத் தள வடிவம் கொண்ட அயனிகளுக்கு எடுத்துக்காட்டாக, நைத்திரேட்டு (NO3), காபனேட்டு அயனி (CO32−), குவானிடினியம் C(NH2) 3+ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]