முக்குளோரோசெருமேனேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 1184-65-2 | |
| பப்கெம் | 6328654 |
| பண்புகள் | |
| GeCl3− | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முக்குளோரோசெருமேனேட்டு (Trichlorogermanate) என்பது GeCl−3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் எதிர்மின் அயனியாகும். டிரைகுளோரோசெருமேனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. செருமேனியம் இரு குளோரைடு சேர்மத்தினுடைய குளோரைடு கூட்டுசேர் பொருளாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.
- GeCl2 + Cl- -> GeCl3-
இந்த எதிர்மின் அயனியை நான்காம் நிலை அம்மோனியம் உப்பாகத் தனிமைப்படுத்தலாம்.[1] முக்குளோரோசெருமேனேட்டு எதிர்மின் அயனி முக்குளோரோசிடானேட்டு அயனியைப் போலவே உள்ளது.
எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகளின் படி இந்த எதிர்மின் அயனி பிரமிடு வடிவமானது, Cl-Ge-Cl பிணைப்புக் கோணம் சுமார் 95° மற்றும் Ge-Cl பிணைப்பு தூரம் 232 பைக்கோமீட்டர் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Parshall, G. W. (1974). "Tetraethylammonium Trichlorogermanate(l-) and Trichlorostannate(l-)". Inorganic Syntheses 15: 222. doi:10.1002/9780470132463.ch48.
- ↑ Minami, Yohei; Konishi, Akihito; Yasuda, Makoto (2019). "Synthesis of α-Alkenyl α,β-Unsaturated Ketones via Dehydrogermylation of Oxagermacycles with Regeneration of the Germanium(II) Species". Organic Letters 21 (24): 9818–9823. doi:10.1021/acs.orglett.9b03454. பப்மெட்:31682128.