முகைதீன் அ. காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகைதின் அ. காதர்' (M. A. Kadar)(பிறப்பு 5 நவம்பர் 1942-இறப்பு 01 ஆகத்து 2011) இந்திய அரசியல்வாதி ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இவர் 1998ஆம் ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநிலங்களவை உறுப்பினர்[தொகு]

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு (30-06-1998 முதல் 29-06-2004) வரை செயல்பட்டார்.

குடும்பம்[தொகு]

காதர் 1942ஆம் ஆண்டு முகைய்யதீன் மரைக்காயருக்கு மகனாக இராமநாதபுரம் மாவட்டம். மண்டபத்தில் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளார். காதருக்கு சபியா என்ற மனைவியும், மூன்று மகன்களும், 1 மகனும் உள்ளனர்.[1]

அரசியல்[தொகு]

மண்டபம் பேரூராட்சி தலைவராகவும், இராமநாதபுரம் நகரசபையின் தலைவராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் மாவட்ட பொருளாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் என பல பதவி வகித்து வந்தவர்.[2]

இறப்பு[தொகு]

இராமநாதபுரத்தில் 01 ஆகத்து 2011-ல் உடல் நலக்குறைவால் இறப்பெய்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Members of the rajya Sabha[1] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. [2] முன்னாள் ராஜ்யசபா திமுக எம்.பி. - எம்.ஏ. காதர் மரணம்

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Members of the rajya Sabha - K" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-07-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகைதீன்_அ._காதர்&oldid=3917530" இலிருந்து மீள்விக்கப்பட்டது