முகுல் கேசவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகுல் கேசவன் (Mukul Kesavan)' ஓர் இந்திய எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஆவார். தில்லிப் பல்கலைக்கழகத்தில் வரலாறும் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பும் படித்தார். இவரது முதல் நூலான ”லுக்கிங் துரூ கிளாசு” பெரும் வரவேற்பைப் பெற்றது. தில்லியில் உள்ள ஜமியா மில்லியா இசுலாமியா கல்லூரியில் வரலாறு கற்பிக்கிறார். துடுப்பாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். [3] தன் பார்வையில் இவ்விளையாட்டு பற்றிய கருத்தை எழுதுவார். [4] பரணிடப்பட்டது 2007-09-28 at Archive.today. ஆங்கிலத்தில் எழுதப்படும் இதழான “சிவில் லைன்சு” என்னும் இதழில் துணை ஆசிரியாராகப் பணிபுரிகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவரது தந்தையின் பணிநிமித்தம் காரணமாக தன் வாழ்நாளை தில்லியில் கழித்தார். இவர் இந்தியும் ஆங்கிலமும் பேசுவார். இவரது தந்தை மைசூரைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் பொதுவில் கன்னடமும், வீட்டில் தமிழும் பேசுவர். இவர்கள் நான்கைந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றிருந்தனர். இவர் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து கருநாட்டகாவிற்கு குடிபெயர்ந்தனர் என்பதும் இவர் ஓர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கன.[1]

ஆக்கங்கள்[தொகு]

”த டெலிகிராப்” என்னும் இதழிலும் ”கிரிக் இன்ஃபோ”, “அவுட்லுக் எக்சுபிரசு” ஆகிய இணையதளங்களிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.[2][3] துடுப்பாட்டம் பற்றி “மென் இன் ஒயிட்” என்னும் நூலையும் அதே பெயரில் கிரிகின்ஃபோவில் வலைப்பதிவுகளையும் எழுதினார். ”த அக்ளினசு ஆஃப் த இந்தியன் மேல் அண்டு அதர் புரொபொசிசன்சு” என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் இந்தியத் திரைப்படங்கள், இந்திய நபர்கள், பயணக் கதைகள், அரசியல் கருத்துரைகள் எனப் பல தலைப்புகளில் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. http://www.outlookindia.com/article.aspx?239413
  2. [1]
  3. [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுல்_கேசவன்&oldid=3792186" இலிருந்து மீள்விக்கப்பட்டது