முகவரிப் பாட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி வடிவமைப்பில் முகவரிப் பாட்டை (Address bus) என்பது நினைவக முகவரிகளைத் தாங்கிச் (சுமந்து/ஏந்தி/எடுத்து/கொண்டு) செல்லும் ஒரு துணை அமைப்பாகும். இது பல இணைப்புகளைக் கொண்டதாக இருக்கும். நுண்செயலியோ நேரடி அணுகல் நினைவகமோ ஒரு நினைவக முகவரியில் ஏதேனும் ஒரு தகவலைப் படிக்கவோ எழுதவோ வேண்டுமென்றால் அதற்கு அத்தகவல் எழுதப்பட்டுள்ள நினைவக முகவரி தேவையாகும். அந்நினைவக முகவரியை ஏந்திச் செல்பவையே முகவரிப் பாட்டைகளாகும். மேலும் அந்நினைவகத்திலுள்ள தரவுகள் தரவுப் பாட்டை மூலம் எடுத்துச் செல்லப்படும். முகவரிப் பாட்டையின் அகலமே ஒரு கணினியால் அதிகபட்சமாக எவ்வளவு முகவரிகளைக் குறிப்பிட முடியும் என்பதை நிர்ணயிக்கிறது. எடுத்துக்காட்டாக 32 பிட் (இருமத்துணுக்கு) முகவரிப் பாட்டை கொண்ட ஒரு கணினியானது 232 நினைவக இருப்பிடங்களைச் சுட்டும். அதாவது 4,294,967,296 நினைவக இருப்பிடங்களை அக்கணினியால் சுட்ட முடியும். இதில் ஒவ்வொரு நினைவக இருப்பிடமும் ஒரு பைட் அளவினை ஏற்குமாயின் அக்கணினியால் 4 கிகா பைட் அளவு நினைவக இருப்பிடத்தைச் சுட்ட முடியும்.

நிறுவல்[தொகு]

முன்பு செயலிகள் ஒவ்வொரு இருமத்துணுக்கிற்கும் (பிட்) தனித்தனி வடங்கள் (Wires) இருந்தன. அதாவது ஒரு 16 இருமத்துணுக்கு (பிட்) முகவரிப் பாட்டை கொண்ட கணினியானது 16 புற வடங்களைக் கொண்டிருந்தது. ஆனால் இவ்வெண்ணிக்கை நாளாக நாளாக அதிகரித்துச் சென்றது. எனவே பயன்படுத்தப்பட்ட வடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இது சில்லில் உள்ள ஊசிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. இது விரும்பத்தகாத ஒன்றாகும். மாஸ்டெக் 4096 DRAM -இல் தொடங்கி பன்மையாக்கிய முகவரியாக்கம் (Multiplexed Addressing) பொதுவான ஒன்றாக மாறியது. பன்மையாக்கிய முகவரியாக்கத்தில், முகவரியானது இரு சம பாகங்களாக அனுப்பப்படும். இது முகவரிப் பாட்டைகளின் எண்ணிக்கையைப் பாதியாக்கியது. எடுத்துக்காட்டாக 32 இருமத்துணுக்கு (பிட்) முகவரிப் பாட்டையானது 16 வடங்களைக் கொண்டு அமைக்கப்படலாம். இதில் முகவரியின் இரண்டாம் பகுதியைத் தொடர்ந்து உடனடியாக அதன் முதற்பகுதி அனுப்பப்படும்.

இதையும் பார்க்கவும்[தொகு]

  1. 1. தரவுப் பாட்டை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவரிப்_பாட்டை&oldid=2130417" இலிருந்து மீள்விக்கப்பட்டது