முகலாய உணவு வகைகள்
தோற்றம்
முகலாய உணவு வகைகள் (ஆங்கிலம்: Mughlai cuisine) என்பது தொடக்க-நவீன காலத்தில் முகலாயப் பேரரசின் இந்திய-பாரசீகப் பண்பாட்டு மையங்களில் உருவாக்கப்பட்டு பிரபலமாக்கப்பட்ட உணவுகளை உள்ளடக்கியதாகும். நடு ஆசிய மற்றும் அலால் சமையல் பாணிகள் மற்றும் செய்முறைக் குறிப்புகளுடன் இந்தியத் துணைக் கண்டத்தின் உணவுகளை சேர்த்த வகை இதுவாகும். தொடக்க கால முகலாய அரசர்கள் உண்மையில் தோன்றிய இடமான நடு ஆசியாவின் துருக்கிய உணவுகளால் முகலாய உணவானது வலிமையான தாக்கம் பெற்றிருந்தது. இதுவும் பதிலுக்கு வட இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய பகுதிகளின் பிராந்திய உணவுகளின் மீது வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகலாய உணவுகளின் பட்டியல்
[தொகு]- பிரியாணி
- ஹலீம்
- குர்மா
- ரொவுஸ்ட்
- நிஹாரி
- பிலாஃப் (புலாவ்)
- பகர்கானி
- பக்லவா
- ஆலூ கோஸ்ட் (ஆட்டிறைச்சி, உருளைக் கிழங்கு குழம்பும்)
- கீமா மட்டார் (அரைத்த ஆட்டிறைச்சி, பட்டாணிக் குழம்பு)
- கோஃப்தா
- சோர்பா
- கெபாப் (தில்லி சுல்தானக காலத்தின் போது இது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது):[1]
- துன்டே கே கபாப்
- பீகாரி கெபாப் (வெட்ட வெளியில் நெருப்பில் மாமிசத் துணுக்குகள் வாட்டப்படுதல்)
- ககோரி கெபாப் (முதன் முதலில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டது)
- சப்லி கெபாப் (முதன் முதலில் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பசுதூன்களால் உருவாக்கப்பட்டது)
- கல்மி கெபாப்
- ஷீக் கபாப்
- ஷமி கெபாப் (முதன் முதலில் முகலாய சகாப்தத்தின் போது சிரிய சமையல்காரர்களால் உருவாக்கப்பட்டது, "ஷமி" என்ற சொல் அவர்களது சிரிய பூர்வீகத்தைக் காட்டுகிறது)
- சிகாம்பூர் கெபாப்
- முகலாய் பரத்தா
- முர்க் முசல்லம்
- பசந்தா
- சவர்மா
- சிக்கன் டிக்கா
- ரெசாலா
இனிப்புகள்
[தொகு]- குலாப் ஜாமுன்
- ஃபலூடா
- சேவியான் (பால், தெளிவான வெண்ணெய், சேமியா, பன்னீர் மற்றும் பாதாம் சேர்த்து உருவாக்கப்படுகிறது)
- சர்பத்
- பர்ஃபி ('பனி'யைக் குறிக்கும் பாரசீகச் சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது)
- பிர்னி
- குங்குமப்பூ பிர்னி (குங்குமப்பூ சேர்க்கப்பட்டு அரிசியை அடிப்படையாக் கொண்ட இனிப்பு)
- பாதாமி பிர்னி (பாதாம் சேர்க்கப்பட்டு அரிசியை அடிப்படையாக் கொண்ட இனிப்பு)
- ஷாஹி துக்ரா (உலர்ந்த பழங்களுடன் கூடிய இனிப்பு ரொட்டிப் பண்டம். இதில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.)
- ஷீர் குருமா
- முகலாய அரசவையினர் இந்தியாவின் பல மாம்பழ வகைகளை விரும்பி அறுவடை செய்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mishra, Smita (February 27, 2016). "The 1,000 Year History of the Kebab on Your Plate". The Times of India.
- ↑ Pal, Sanchari (June 7, 2016). "Food for Thought: Unpeeling the Mango's Interesting History in India". The Better India.
மேலும் படிக்க
[தொகு]- Mughlai Cook Book, Diamond Pocket Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7182-547-8 [1]
- Nita Mehta's Vegetarian Mughlai Khaana By Nita Mehta, Published 1999 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86004-10-6
- Mughlai By Amrita Patel Published 2004, Sterling Publishers, 160 pages பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-207-2646-4