உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது நபி நிலவைப் பிளந்த நிகழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது நபி நிலவைப் பிளந்த நிகழ்வு (splitting of the moon by Prophet Muhammad ) (அரபு மொழி: انشقاق القمر‎) என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.[1] [2] இந்நிகழ்வு குர்ஆன் வசனங்கள் மூலமும் (54:1-2),ஹதீஸ்கள் மூலமும் எடுத்தியம்பப் படுகின்றன.

பெரும்பாலான முஸ்லீம் விரிவுரையாளர்கள் நேரடி சந்திரன் பிளவு நிகழ்வு நடந்தது என விளக்குகின்றனர். சில அறிஞர்கள் கூற்றுப்படி இறுதித் தீர்ப்பு நாள் அன்று நடக்கும் நிகழ்வு எனக்கூறுகின்றனர்.

நேரடி விளக்கங்கள் முகம்மது நபியின் தோழர்களான இப்னு அப்பாஸ், அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் போன்றவர்கள் மூலமும் இன்னும் சிலர் மூலமும் விவரிக்கப்பட்டுள்ளன.[3][4]

பின்னணி

[தொகு]

சில குறைஷிக் குலத்தைச் சார்ந்த தலைவர்கள் முகம்மது நபியிடம் "நீங்கள் உண்மையான இறைத்தூதராக இருந்தால் முற்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர்கள் போல் அற்புதங்களை காட்டவும்" எனக்கூறினாரகள். அப்பொழுது முகம்மது நபி நிலவை பிளந்து மறுபடியும் ஒட்ட வைத்தார்கள் என்பது முசுலிம்களின் நம்பிக்கையாகும்.[5][6][7][8][9] [10] [11] [12] [13] [14]

குர்ஆன் வசனங்கள்

[தொகு]

முகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய குர்ஆன் வசனங்கள் 54:1-2 வருமாறு:

اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُّسْتَمِرٌّ

(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள். "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.

ஹதீஸ்

[தொகு]

முகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய ஹதீஸ் வசனங்கள் வருமாறு:

மக்காவாசிகள் முகம்மது நபியிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே,சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளப்பதை தாம் இறைவனின் தூதர் என்பதற்குச் சான்றாக முகம்மது நபிக் காட்டினார்கள். என்று அனஸ் பின் மாலிக் எனும் நபித்தோழர் கூறினார்.

[15]

நாசா செயற்கைக்கோள் புகைப்படம்

[தொகு]

1969 இல் அப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் நிலவு பிளந்ததற்கான[சான்று தேவை] அடையாளம் கண்டறியப்பட்டது.[16] .[17][18] அப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் 300 கி.மீ. நீள பிளவு காணப்பட்டது.[19]

2010 இல் இணைய விவாதங்களில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சார்ந்த பிராட் பெய்லி "நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இணைய விவாதங்கள் மூலம் இல்லாமல் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாகவே நிருபிக்க வேண்டும்" எனக் கூறினார்.[20]

சேரமான் பெருமாள்

[தொகு]

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர நாட்டு மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.என்பதாக இந்திய மாநிலமான கேரள முசுலிம்கள் மத்தியில் தொன்மவியல் கருத்து உள்ளது.[21][22]

மேற்கோள்கள்

[தொகு]
 1. SAFIUR RAHMAN, MUBARAKPURI (2002). When the Moon Split (A Biography of Prophet Muhammad). DARUSSALAM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9-96089-728-1. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
 2. "Muhammad." பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் in Islamic mythology. 2007. Encyclopædia Britannica Online, p.13
 3. Ibn Kathir, Tafsir ibn Kathir, Sura Qamar, verses 54:1-2
 4. "According to al-Tabari, all the expositors (ahl al-ta'wil) agree on essentially this same account for the occasion for the revelation of these verses." cf. Thomas E. Burman, Religious Polemic and the Intellectual History of the Mozarabs, C.1050-1200, p.150
 5. Allameh Tabatabaei, Tafsir al-Mizan, Verse 54:1-2
 6. Majma Ul-Bayan
 7. ஸஹீஹ் புகாரி, 5:28
 8. ஸஹீஹ் புகாரி, 4:56
 9. ஸஹீஹ் புகாரி, 6:60
 10. ஸஹீஹ் புகாரி, 6:60
 11. ஸஹீஹ் புகாரி, 6:60
 12. ஸஹீஹ் முஸ்லிம், 39:6721
 13. ஸஹீஹ் முஸ்லிம், 39:6724-6726
 14. ஸஹீஹ் முஸ்லிம், 39:6728-6730
 15. ஸஹீஹ் முஸ்லிம், 39:5398
 16. "cracking of moon confirmed by nasa researchers". expressnewzpk. Archived from the original on 2017-07-31. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2015. According to the astronomers it is clearly possible to the moon had been divided.
 17. "Hoax-Slayer - Moon Split Miracle Chain Letter". Archived from the original on 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
 18. Astronomy Picture of the Day
 19. "Rima Ariadaeus, a Linear Rille". NASA. பார்க்கப்பட்ட நாள் 8 June 2016. Experts agree that Rima Ariadaeus, about 300 km (186.4 mi) long, is a fault system similar to those on Earth.
 20. "NASA Lunar Science - Evidence of the moon having been split in two". Archived from the original on 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
 21. S.N., Sadasivan (Jan 2000), "Caste Invades Kerala", A Social History of India, APH Publishing, p. 303,304,305, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 817648170X
 22. "Cheraman Juma Masjid A Secular Heritage". Archived from the original on 2017-07-26. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.