முகம்மது சியாவுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது சியாவுதீன்
Muhammad Ziauddin
இயற்பெயர்
محمد ضیاء الدین
பிறப்பு1938 (1938)
சென்னை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு29 நவம்பர் 2021(2021-11-29) (அகவை 82–83)
இஸ்லாமாபாத், பாக்கித்தான்
தொழில்பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாளர்
தேசியம்பாக்கித்தானியர்
கல்வி நிலையம்தாக்கா பல்கலைக்கழகம்
கராச்சி பல்கலைக்கழகம்
செயற்பட்ட ஆண்டுகள்1964–2021

முகம்மது சியாவுதீன் (Muhammad Ziauddin) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியராகவும் இவர் அறியப்படுகிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1938 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவில் இருந்த சென்னை நகரில் சியாவுதீன் பிறந்தார். [2] டாக்கா பல்கலைக்கழகத்தில் [3] மருந்தியலில் இளம் அறிவியல் பட்டமும், 1964 ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார் [1] . பாக்கித்தான் எகனாமிசுட்டு, மார்னிங் நியூசு, தி முசுலீம், டான், தி நியூசு இன்டர்நேசனல் மற்றும் தி எக்சுபிரசு திரிப்யூன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். " இவரது வாழ்க்கை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து செய்தித்தாள்களில் பரவியது", என்று ஒரு முக்கிய பாக்கித்தானிய தொலைக்காட்சி செய்தி அலைவரிசை கூறியது.[3] [2] [4]

2002 [1] ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டு வரை தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

பாக்கித்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பாக்கித்தான் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து சியாவுதீனை அடிக்கடி அழைத்து ஆலோசனை கேட்பார் என்று கூறப்படுகிறது. [4]

இறப்பு மற்றும் மரபு[தொகு]

29 நவம்பர் 2021 அன்று இசுலாமாபாத்தில் உள்ள இல்லத்தில் முகம்மது சியாவுதீன் காலமானார். [5] [2]

அவரது சக பத்திரிகையாளர்களில் ஒருவரான கைசர் பட், சமச்சீர் மற்றும் புறநிலை நோக்கோடு கட்டுரைகளை எழுதுவார் என்று கூறி இவருக்கு அஞ்சலி செலுத்தினார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Veteran journalist Muhammad Ziauddin passes away at 83 in Islamabad after prolonged illness". DAWN.COM. 29 November 2021.
  2. 2.0 2.1 2.2 "Muhammad Ziauddin, interrogator of historymakers, chronicler of Pakistan's economy, dies". Samaa TV News website."Muhammad Ziauddin, interrogator of historymakers, chronicler of Pakistan's economy, dies". Samaa TV News website.
  3. 3.0 3.1 "Senior journalist Muhammad Ziauddin passes away at 83". The Express Tribune (newspaper). 29 November 2021. https://tribune.com.pk/story/2331542/senior-journalist-muhammad-ziauddin-passes-away-at-83. 
  4. 4.0 4.1 4.2 "Muhammad Ziauddin: The last of the Mohicans". The Express Tribune (newspaper). 29 November 2021. https://tribune.com.pk/story/2331613/muhammad-ziauddin-the-last-of-the-mohicans. 
  5. "سینئر صحافی محمد ضیاء الدین انتقال کر گئے". urdu.geo.tv.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_சியாவுதீன்&oldid=3422464" இலிருந்து மீள்விக்கப்பட்டது