உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது கரம் ஷா அல்-அசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது கரம் ஷா அல்-அசாரி (1 ஜூலை 1918 7 ஏப்ரல் 1998) இவர் பாக்கித்தானிலிருந்த பரேல்வி இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் ஆவார். இவர் சிஷ்டியா சூபி ஒழுங்கோடு தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. [1] [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

முகம்மது கரம் ஷா 1918 ஜூலை 1 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் சர்கோதா மாவட்டத்தில் உள்ள பெரா என்ற இடத்தில் பிறந்தார். [1] இவர் தனது அடிப்படைக் கல்வியை 1936 இல் தனது சொந்த ஊரான பெராவில் முடித்தார். பின்னர் அவர் பாரசீக மற்றும் அரபு மொழிகளைக் கற்றுக்கொண்டார். பின்னர் குவாஜா கமர் உல் தின் சியால்வியின் (1906 1981) ஆலோசனையின் பேரில், 1942 இல் ஹதீஸைப் படிப்பதற்காக முராதாபாத் சென்றார். இவர் 1945 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் அல்-அசார் பல்கலைக்கழகத்தில் உயர் மதக் கல்விக்காக எகிப்துக்குச் சென்றார்.அங்கு இஸ்லாமிய சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

முகம்மது கரம் ஷா அல்-அசாரி 1995 ஆம் ஆண்டு தீர்க்கதரிசி முகம்மது நபியின் உருது சுயசரிதை " ஜியா அன் நபி " என்ற புத்தகத்தின் ஆசிரியராக இருப்பதால் நன்கு அறியப்பட்டவர் மற்றும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். [1] [3] அந்தப் புத்தகத்தில் 7 தொகுதிகள் உள்ளன. பின்னர், இது முகம்மது கயூம் அவான் எழுதிய 7 தொகுதிகளைக் கொண்ட ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. [4] குர்ஆனின் உருது விளக்கமான தப்சீர் ஜியா உல் குர்ஆனை 5 தொகுதிகளில் எழுதியதற்காகவும் இவர் அங்கீகரிக்கப்படுகிறார். [5] [6] [7]

பெராவில் தனது தந்தையால் நிறுவப்பட்ட தார் அல் உலும் முஹம்மதியா கௌசியா என்ற இஸ்லாமிய நிறுவனத்தை மறுசீரமைத்து, மதக் கல்வியின் பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். மதக் கல்வியுடன் நவீன கல்வியும் கற்கப்பட வேண்டும் என்று இவர் கருதினார். [1]

முகம்மது கரம் ஷா அல்-அசாரி பாக்கித்தான் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றவர் மற்றும் அகில இந்திய முஸ்லீம் லீக்கிற்காக 1946 ஆம் ஆண்டு இந்திய மாகாணத் தேர்தல்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்துள்ளார். [1]

முகம்மது கரம் ஷா அல்-அசாரி 1998 இல் இறக்கும் வரை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தன் ஷரியாத் அமர்வுகளில் பணியாற்றினார். [1] தேசிய ஷரியத் நீதிமன்றம் 1981 ஆம் ஆண்டில் முதன்முதலில் நிறுவப்பட்டபோது இவர் அதில் ஒரு நீதிபதியாக ஆனார். [8]

எழுதிய நூற்கள்

[தொகு]

இவர் எழுதிய தப்சீர் ஜியா உல் குர்ஆன் என்ற நூல் 1995 இல் ஐந்து தொகுதிகளில் வெளிவந்துள்ளது. [9] ஜியா அன் நாபி என்ற புத்தகம் 1995இல் முஹம்மது நபியின் விரிவான சுயசரிதையாக ஏழு தொகுதிகளில் வெளிவந்துள்ளது. [1]

விருதுகளும், அங்கீகாரமும்

[தொகு]

பாக்கித்தான் அரசாங்கத்தால் சீதாரா-இ-இம்தியாஸ் (சிறந்த நட்சத்திரம்) என்ற கௌரவம் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும், பாக்கித்தான் அஞ்சல் துறை தனது 'கடிதங்களில் சிறந்தவர்' என்ற முத்திரைத் தொடரில் 2004 இல் ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இவரைக் கௌரவித்தது. [10]

இறப்பு

[தொகு]

முகம்மது கரம் ஷா அல்-அசாரி கிட்டத்தட்ட ஒரு வருடம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இருந்து பின்னர் 1998 ஏப்ரல் 7, அன்று இறந்தார். [1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 8 Muhammad Sultan Shah. "Diya'al-Quran: A Unique Quranic Commentary and the Commentator (profile of Muhammad Karam Shah al-Azhari)" (PDF). University of the Punjab website. Retrieved 21 September 2019.
  2. Distinguished Al-Azhari scholar of the 20th century honoured in international conference on The World Organization for al-Azhar Graduates (UK website) பரணிடப்பட்டது 2020-01-29 at the வந்தவழி இயந்திரம் Published 29 July 2016, Retrieved 21 September 2019
  3. "Zia-un-Nabi (Urdu) - Maktabah Mujaddidiyah". maktabah.org. Retrieved 21 September 2019.
  4. "Zia un Nabi : English 7 Vol's - £69.99 : Madani Propagation, Online book shop". islam786books.com. Retrieved 21 September 2019.
  5. "Tafsir Zia-ul-Quran Urdu : Free Download & Streaming : Internet Archive". archive.org website. Retrieved 21 September 2019.
  6. "تفسیر ضیاء القرآن، اردو - Maktabah Mujaddidiyah". maktabah.org. Archived from the original on 20 அக்டோபர் 2019. Retrieved 21 September 2019.
  7. "mohrasharif.com - Tafsir Zia-ul-Quran - Volume 1 to 5 (Urdu)". mohrasharif.com. Retrieved 21 September 2019.
  8. Some new faces in Sargodha Dawn (newspaper), Published 26 August 2002, Retrieved 21 September 2019
  9. Books of Muhammad Karam Shah al-Azhari on goodreads.com website Retrieved 21 September 2019
  10. Profile and commemorative postage stamp of Muhammad Karam Shah al-Azhari on paknetmag.com website Retrieved 4 October 2019

வெளி இணைப்புகள்

[தொகு]