முகம்மது அலியின் பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 30°01′43″N 31°15′35″E / 30.028611°N 31.259722°E / 30.028611; 31.259722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது அலியின் பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கெய்ரோ, எகிப்து
புவியியல் ஆள்கூறுகள்30°01′43″N 31°15′35″E / 30.028611°N 31.259722°E / 30.028611; 31.259722
சமயம்இசுலாம்
தலைமைஎகிப்தின் முகமது அலி

முகமது அலி பாஷாவின் பெரிய பள்ளிவாசல் (Great Mosque of Muhammad Ali Pasha) அல்லது அலபாசுடர் பள்ளிவாசல் என்பது எகிப்தில் கெய்ரோவின் கோட்டையில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது 1830 மற்றும் 1848க்குமிடையில் கட்டப்பட்டது.

கோட்டையின் உச்சியில் அமைந்துள்ள இந்த உதுமானிய பள்ளிவாசம், 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஒன்றாகும். அதன் நிழலும், இரட்டை மினாரெட்டுகளும், கெய்ரோவின் அனைத்து பகுதியிலிருந்தும் நன்கு தெரியுமாறு கட்டப்பட்டுள்ளது.

1816 இல் இறந்த முகம்மது அலியின் மூத்த மகனான துசுன் பாஷாவின் நினைவாக இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது.

இந்த பள்ளிவாசல், கோட்டையுடன் சேர்ந்து, கெய்ரோவின் முக்கிய அடையாளங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மேலும் எந்த திசையிலிருந்தும் நகரத்தை நெருங்கும் போது காணக்கூடிய முதல் அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

கெய்ரோ கோட்டையில் முகம்மது அலியின் பள்ளிவாசலின் வரைபடம்

கெய்ரோவின் கோட்டையில் 1830 மற்றும் 1848க்குமிடையில் பழைய மம்லூக் கட்டிடங்களின் தளத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது. இருப்பினும் 1857 இல் சயீது பாஷாவின் ஆட்சி வரை இது நிறைவடையவில்லை. இஸ்தான்புல்லைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் யூசுப் புஷ்னக் அந்த நகரத்தின் சுல்தான் அகமது பள்ளிவாசலை மாதிரியாகக் கொண்டு இதை நிர்மாணித்தார் [1] [2]. இது கோட்டையின் இடிபாடுகளிருந்து கட்டப்பட்டது.

பள்ளிவாசல் நிறைவடைவதற்கு முன்பு, மேல் சுவர்களில் இருந்த சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு முதலாம் அப்பாசின் அரண்மனைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. சுவர்கள் பளிங்கு போல தோற்றமளிக்கும் வகையில் மரத்தால் வரையப்பட்டிருந்தன. 1899 ஆம் ஆண்டில் மசூதி விரிசல் அறிகுறிகளைக் காட்டியது மற்றும் சில போதிய பழுதுபார்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மசூதியின் நிலை மிகவும் ஆபத்தானது, 1931 ஆம் ஆண்டில் முதலாம் புவாது மன்னரால் ஒரு முழுமையான மறுசீரமைப்பு திட்டம் கட்டளையிடப்பட்டது, இறுதியாக 1939 இல் பாரூக் மன்னனின் கீழ் முடிக்கப்பட்டது.

முகம்மது அலி பாஷா மசூதியின் முற்றத்தில், கராரா பளிங்கிலிருந்து செதுக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது உடல் 1857 இல் ஹோஷ் அல்-பாஷாவிலிருந்து இங்கு மாற்றப்பட்டது.

பள்ளிவாசலின் உட்புற குவிமாடம் .
எகிப்து - கெய்ரோவின் அலி முகமதுவின் பள்ளிவாசல். புரூக்ளின் மியூசியம் காப்பகங்கள், குட்இயர் காப்பக சேகரிப்பு
முகமது அலி மசூதியின் உட்பக்கம். அரிய புத்தகங்கள் மற்றும் சிறப்பு சேகரிப்பு நூலகம், கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம்

முகம்மது அலி இந்தப் பள்ளிவாசலைக் கட்ட உதுமானியக் கட்டடக்கலை பாணியைத் தேர்வுசெய்தார். மம்லூக்குகளைப் போலல்லாமல், உதுமானியர்களுக்கு அரசியல் அடிபணிந்த போதிலும், முந்தைய மம்லுக் வம்சங்களின் கட்டடக்கலை பாணிகளில் ஒட்டிக்கொண்டார்.

கட்டிடம்[தொகு]

இந்த பள்ளிவாசல் நான்கு சிறிய மற்றும் நான்கு அரை வட்ட குவிமாடங்களால் சூழப்பட்ட மைய குவிமாடம் கொண்டு கட்டப்பட்டது. இது ஒரு சதுர திட்டத்தில் கட்டப்பட்டு 41x41 மீட்டர் அளவிடப்பட்டது. மத்திய குவிமாடம் 21 மீட்டர் விட்டம் மற்றும் கட்டிடத்தின் உயரம் 52 மீட்டர். துருக்கிய வகையைச் சேர்ந்த இரண்டு நேர்த்தியான உருளை மினாரெட்டுகள் இரண்டு பால்கனிகள் மற்றும் கூம்புத் தொப்பிகளைக் கொண்டு மசூதியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன. மேலும் அவை 82 மீட்டராக உயர்ந்துள்ளன.

புகைப்படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Blue Guide Egypt - Second Edition, 1988
  2. Glasssteelandstone.com - Mosque of Muhammad Ali பரணிடப்பட்டது 2006-10-16 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]