உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது அப்தெல் வஹாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது அப்தெல் வஹாப்
பிறப்பு(1898-03-13)மார்ச்சு 13, 1898
கெய்ரோ, எகிப்து
இறப்புமே 4, 1991(1991-05-04) (அகவை 93)
பணிபாடகர், இசையமைப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1917-1991
வலைத்தளம்
www.abdel-wahab.com

முகம்மது அப்தெல் வகாப் (Mohammed Abdel Wahab; 13 மார்ச் 1902 – 4 மே 1991), 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எகிப்திய பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். அவர் தனது காதல் மற்றும் எகிப்திய தேசபக்தி பாடல்களுக்காக புகழ் பெற்றவர்.

இவர் லிபியாவின் தேசிய கீதத்தையும் இயற்றினார், இது 1951 முதல் 1969 வரையிலும், பின்னர் 2011 முதல் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1][2]

பிறப்பு

[தொகு]
கெய்ரோ நகரின் பாப் எல்-ஷெரியா சதுக்கத்தில் இருக்கும் அப்தெல் வஹாப்பின் சிலை

முகமது அப்தெல் வஹாப் 1898-இல் எகிப்தின் கெய்ரோவில், பாப் எல்-ஷெரியா என்ற சுற்றுப்புறத்தில் பிறந்தார். இங்கு இப்போது இவரது சிலை உள்ளது. இவர் தனது இசைக்கான வாழ்க்கையை இளம் வயதிலேயே தொடங்கினார். தனது ஏழு வயதில் உள்ளூரில் தனது முதல் பொது நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 13 வயதில், தனது முதல் குரல் பதிவை செய்தார். முகமது அப்தெல் வஹாப் சக நாட்டுப் பாடகர் அப்தெல் ஹலீம் ஹாஃபிஸின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]
மாம்னொவ எல் ஹப் (Mamnou'a el hub, 1942) எனும் எகிப்திய திரைப்படத்தின் சுவரொட்டி.

1933ஆம் ஆண்டில், முகம்மது அப்தெல் வஹாப் பாரிசுக்குச் சென்று பிரெஞ்சு இசைத் திரைப்படங்களைப் பற்றி அறிந்த பிறகு, தனது சொந்த பாணியிலான எகிப்திய திரைப்பட இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கினார்.[3] இவர் எகிப்திய கலாச்சாரத்திற்கு ஓர் இலகுவான இசைத் திரைப்பட வகையை அறிமுகப்படுத்தினார். 1933 மற்றும் 1949க்கு இடையில் எட்டு இசை நகைச்சுவை பாடல் தொகுப்புகளை இயற்றினார். இவரது திரைப்படங்கள் மேற்கத்திய சமூக உயரடுக்கினரை சித்தரித்தன. இவை பாரம்பரிய எகிப்திய மெட்டுகளிலிருந்து வேறுபட்ட இசையை உள்ளடக்கியது. 1933-இல் தனது திரைப்படமான தி வைட் ரோஸ் எனும் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் முந்தைய சாதனைகளை முறியடித்து எகிப்திய திரையரங்குகளில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டது. 1950-இல், அப்தெல் வஹாப் தனது இசையில் கவனம் செலுத்த திரைத்துறையிலிருந்து வெளியேறினார்.

எகிப்து, அரபு இசைப் பங்களிப்பு

[தொகு]

முகம்மது அப்தெல் வஹாப் 1,820 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார்[4]. அவர் எல்லா காலத்திலும் மிகவும் புதுமையான எகிப்திய இசைக்கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், உள்ளூர் அல்லாத தாளங்கள் மற்றும் செம்மைப்படுத்தப்பட்ட ஓட் வாசிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி எகிப்திய இசையின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்தார்.

வஹாப் பல்வேறு பாடல்களையும், பாரம்பரிய அரபு இசையின் இசைத் துண்டுகளையும் இயற்றியிருந்தாலும், மேற்கத்திய இசை தாக்கங்களை இணைத்ததற்காக அவர் குறிப்பிடத்தக்க அளவில் விமர்சிக்கப்பட்டார். அக்காலத்தில் அறியப்பட்ட எகிப்திய இசையின் பாரம்பரிய வடிவங்களுக்குப் பொருந்தும் வகையில், அவர் மேற்கத்திய தாளங்களை எகிப்திய பாடல்களுக்கு அறிமுகப்படுத்தினார். உதாரணமாக, 1941 இல், அவர் தனது ’எல் காண்டோல்' பாடலில் ஒரு வால்ட்ஸ் தாளத்தை அறிமுகப்படுத்தினார், மற்றும் 1957 இல், அப்தெல் ஹலீம் ஹாஃபிஸின் ’யா அல்பி யா காலி’ பாடலில் ஒரு ராக் அண்ட் ரோல் தாளத்தை அறிமுகப்படுத்தினார். 1950 களில், அவர் ’அகி ஜாவிஸ் அல்ஜாலிமுன் அல்மடா’ (சகோதரர்களே, கொடுமைக்காரர்கள் எல்லை மீறிவிட்டார்கள்) என்ற குறிப்பிடத்தக்க பாலஸ்தீனிய தேசியவாத பாடலையும் தயாரித்தார்.

நஜாத் எல் சாகிராவுக்காக சில சிறந்த வெற்றிகளை இயற்றினார் வஹாப். இதில் புகழ்பெற்ற கவிஞர் நிசார் கப்பானியின் நான்கு கவிதைகளும் அடங்கும்.

வஹாப், புகழ்பெற்ற எகிப்திய கவிஞர் அஹ்மத் ஷாவ்கியின் முன்பு ஓட் எனும் இசைக்கருவியை வாசித்திருக்கிறார். இவர் புகழ்பெற்ற பாடகி உம் குல்தூமுக்காக பத்து பாடல்களை இயற்றினார். மேலும், ஊமைத் திரைப்படத்திலிருந்து நடிப்பது முதல் பாடும் காலகட்டம் வரை கடந்து வந்த முதல் எகிப்திய பாடகர் வஹாப் அவர்.[5]

’நட்சத்திரங்களுக்கான எங்கள் தூதர்[6]’ என்று வஹாப் குறிப்பிடும், லெபனானின் நட்சத்திர இசைக்கலைஞர் ஃபைரூஸ் என்பவருக்காக பாடல்களை இயற்றினார்[7]. 1958 இல், கெய்ரோவில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தின் தலைவர் தான் என்று அவர் கூறினார்.[8]

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்

[தொகு]

முகமது அப்தெல் வஹாப் எகிப்திய தேசியவாதம், அரபு தேசியவாதம் மற்றும் புரட்சிகர பாடல்களுக்காக புகழ் பெற்றவர். அவரது பிரபலமான பாடல்களில் சில:

  • "யா மஸ்ர் தம் எல்ஹானா" (ஓ எகிப்து, மகிழ்ச்சி இங்கே உள்ளது)
  • "ஹைய் அலா எல்ஃபலாஹ்" (கடமையின் அழைப்பு)
  • "எல்வதன் எலாக்பர்" (பெரிய தாயகம்)
  • "மஸ்ர் நதெனா ஃப லப்பெனா எல்நெடா" (எகிப்து எங்களை அழைத்தது, நாங்கள் பதிலளித்தோம்)
  • "உலோ லே மஸ்ர்" (எகிப்திடம் சொல்லுங்கள்)
  • "ஹோப் எல்வதன் ஃபார்த் அலய்யா" (தேசபக்தி எனது கடமை)
  • "சோட் எல்கமாஹிர்" (மக்களின் குரல்)
  • "யா நெஸ்மெட் எல்ஹோர்ரியா" (ஓ சுதந்திரத்தின் தென்றல்)
  • "சவாயித் மின் பெலாடி" (என் நாட்டிலிருந்து ஆயுதங்கள்)

திரைப்படங்கள்

[தொகு]

நடிகர்

[தொகு]
ஆண்டு படங்களின் பெயர் ஆங்கில பெயர் எகிப்திய பெயர்
1933 தி வைட் ரோஸ் The White Rose Al Warda Al Baida
1936 லவ்வர்ஸ் டியர்ஸ் Love's Tears Doumou' el Hub
1938 லாங் லிவ் லவ் Long Live Love Yahya el Hub
1939 ஹேப்பி டே Happy Day Yawm Sa'id
1942 லவ் இஸ் ஃபார்பிடன் Love Is Forbidden Mamnou'a el Hub
1944 எ புல்லட் இன் தி ஹார்ட் A Bullet in the Heart Rossassa Fel Qalb
1947 ஐ யம் நோ ஏஞ்செல் I'm No Angel Lastu Mallakan
1949 தி ஃபிளர்டேஷன் ஆஃப் கேர்ள்ஸ் The Flirtation of Girls Ghazal Al Banat

மறைவு

[தொகு]

முகமது அப்தெல் வஹாப் 1991 மே 4 ஆம் தேதி தனது சொந்த ஊரான எகிப்தின் கெய்ரோவில் பக்கவாதத்தால் இறந்தார்.

மரபு

[தொகு]

அப்தெல் வஹாப் தனது தாயகத்திலும் அரபு உலகம் முழுவதும் எகிப்திய இசையின் புதிய சகாப்தத்தை நிறுவுவதில் அடிப்படை பங்காற்றினார். மேற்கத்திய பாரம்பரிய மற்றும் பிரபலமான மரபுகளுக்கு எகிப்திய இசையை வெளிப்படுத்துவதன் மூலம் மேற்கத்திய உலகிலும் அவர் ஒரு அடையாளத்தை விட்டுச் சென்றார்.

அவர் லிபியாவின் தேசிய கீதங்களான லிபியா, லிபியா, லிபியாவை இயற்றினார்.[9]

புகழஞ்சலி

[தொகு]

மார்ச் 13, 2012 அன்று, கூகிள் அவரது 110வது பிறந்தநாளை கூகிள் டூடுல் மூலம் கொண்டாடியது.[10]

மரியாதை

[தொகு]

எகிப்திய தேசிய மரியாதை

[தொகு]
ரிப்பன் வகை மரியாதை
EGY Order of the Nile – Grand Cordon BAR கிராண்டு கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைல்
கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி அரப் ரிபப்ளிக் ஆஃப் எகிப்து
கிராண்டு கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மெரிட் (எகிப்து)

சர்வதேச மரியாதை

[தொகு]
Ribbon bar Country Honour
 யோர்தான் கிராண்டு கார்டன் ஆஃப் தி Grand Cordon of the சுப்ரீம் ஆர்டர் ஆஃப் தி ரெனைசன்ஸ்
 லெபனான் கமாண்டர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி கேடர்
Order of the Grand Conqueror (Libya)  லிபியா லிபியாவின் தேசிய ஆர்டரின் காலர்
 மொரோக்கோ கிராண்ட் கிராஸின் ஒயிஸ்ஸாம் அலௌயிட் ஆர்டர்
link=https://en.wikipedia.org/wiki/File:Civil Order of Oman - First Class.png  ஓமான் ஓமன் ஆர்டரின் முதல் வகுப்பு
SYR Order Merit 1kl rib  சிரியா சிரிய அரபு குடியரசின் சிவில் மெரிட் ஆர்டரின் கிராண்ட் கார்டன்
 தூனிசியா துனிசியாவின் குடியரசு ஆர்டரின் கிராண்ட் கார்டன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. About Libya: Libyan National Anthem, National Transitional Council of Libya, archived from the original on July 21, 2011, retrieved August 23, 2011
  2. "Egyptian artists contribute in 6 Arab national anthems". egypttoday.com. June 9, 2017.
  3. "Mohammad Abdel Wahab". Al Mashriq. Retrieved July 16, 2016.
  4. "Mohammad Abdel Wahab". Al Mashriq. Retrieved July 16, 2016.
  5. Best Arabic Music பரணிடப்பட்டது பெப்ரவரி 3, 2016 at the வந்தவழி இயந்திரம். Best Arabic Music. Retrieved March 13, 2012.
  6. "Lebanese diva arouses emotion, controversy in Syria". Reuters.com. January 28, 2008. Retrieved November 24, 2021.
  7. "Songs of Wahab Mohamed Abdel - Fairuz | Songs, Reviews, Credits". AllMusic. Retrieved November 24, 2021.
  8. "Beirut and Fairouz: A path of gold and loss - Heritage special - Heritage". English.ahram.org.eg. Retrieved November 24, 2021.
  9. "Egyptian artists contribute in 6 Arab national anthems". egypttoday.com. June 9, 2017.
  10. "Mohammed Abdel Wahab's 110th Birthday". Google. March 13, 2012.

வெளியிணைப்புகள்

[தொகு]
முகம்மது அப்தெல் வஹாப் அவர்களின் சில பாடல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அப்தெல்_வஹாப்&oldid=4300110" இலிருந்து மீள்விக்கப்பட்டது