உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மதுசோகித் சுயரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மதுசோகித் சுயரோவ்
2023 ஆம் ஆண்டில் முகம்மதுசோகித் சுயரோவ்
நாடுஉசுபெக்கிசுத்தான்
பிறப்பு2009
பட்டம்பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் (2024)
உச்சத் தரவுகோள்2491 (மே 2025)

முகம்மதுசோகித் சுயரோவ் (Mukhammadzokhid Suyarov) என்பவர் உசுபெக்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 2024 ஆம் ஆண்டில் பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டத்தை பிடே அமைப்பு இவருக்கு வழங்கியது.

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

ஜூன் 2024 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இவர் சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் 4 ஆவது இடத்தைப் பிடித்தார். இதன் போது இவர் நான்கு கிராண்ட்மாசுட்டர்களை தோற்கடித்தார்: பார்டியா டேனேசுவர், விட்டலி பெர்னாட்சுக்கி, மிகைல் நிகிடெங்கோ மற்றும் செர்ச்சி டிவியாகோவ் என்பவர்கள் அந்த நான்கு கிராண்டு மாசுட்டர்களில் உள்ளடக்கமாகும்..[1]

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் உசுபெக்கிசுதானில் நடந்த பிரசிடென்ட் கோப்பையில் விளையாடினார். அங்கு வந்திகா அகர்வாலுக்கு எதிரான இவரது சமநிலை முடிவை நடுவர்கள் தவறாக இவருக்கு கிடைத்த வெற்றியாகக் கருதினர், இதனால் அகர்வால் போட்டியில் இருந்து விலகினார்.[2]

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இணையவழி மாசுட்டர்கள் சதுரங்கப் போட்டியில் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[3]

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஆசிய பிராந்திய வாகையாளர் பட்டத்திற்கான போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 2025 சதுரங்க உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றார்.[4] உலகக் கோப்பை போட்டியில், முதல் சுற்றில் நிசத் அபாசோவ் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Top tournament in Tashkent - the UzChess Masters live". Chessbase. 14 June 2024.
  2. "Vantika Agrawal's draw turns to loss at President Cup in Uzbekistan because of 'arbiter's fault' and bizarre FIDE rule – Here's what happened". November 25, 2024.
  3. Colodro, Carlos (February 17, 2025). "Chessable Masters: Atabayev, Samadov and Suyarov make it to the Play-In".
  4. "Winners crowned at Asian Zonal 3.4 Championship". April 9, 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மதுசோகித்_சுயரோவ்&oldid=4412168" இலிருந்து மீள்விக்கப்பட்டது