முகம்மதி பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையித்

முகம்மதி பேகம்
சுய தரவுகள்
பிறப்பு22 மே 1878
இறப்பு2 நவம்பர் 1908(1908-11-02) (அகவை 30)
சிம்லா, பிரித்தானிய இந்தியா
சமயம்இசுலாம்
மனைவிசையித் மும்தாஜ் அலி
குழந்தைகள்இம்தியாஸ் அலி தாஜ் (மகன்)
சமயப் பிரிவுசுன்னி இசுலாம்
குறிப்பிடத்தக்க ஆக்கம்தெஹ்ஸீப்-இ-நிஸ்வான்
Relativesநயீம் தாஹிர் (பேரன்), பரன் தாஹிர் (பேரன்)

முகம்மதி பேகம் (Muhammadi Begum) ( சயீதா முகம்மதி பேகம் என்றும் அழைக்கப்படுகிறார்) (22 மே 1878 - 2 நவம்பர் 1908) ஒரு சுன்னி இசுலாம் அறிஞரும், உருது எழுத்தாளரும் பெண்களுக்கான கல்வியை ஊக்கப்படுத்துபவரும் ஆவார். இவர் தெஹ்ஸீப்-இ-நிஸ்வான் என்ற இசுலாமிய வார இதழை இணைந்து நிறுவினார். மேலும் அதன் நிறுவன ஆசிரியராக இருந்தார். உருது பத்திரிகையைத் வெளியிட்ட முதல் பெண் என்றும் அறியப்படுகிறார். இவர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்கள் உரிமைகளை ஆதரித்த சையித் மும்தாஜ் அலி தேவ்பந்தின் மனைவியாவார்.

சுயசரிதை[தொகு]

முஹம்மதி பேகம் 1878 மே 22 அன்று பஞ்சாபின் ஷாபூரில் பிறந்தார். [1] இவர் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்தார். தனது சகோதரர்களுடன் உருது மொழியைக் கற்றுக்கொண்டார். மேலும் 1886இல் திருமணமான பிறகு தனது சகோதரியுடன் தொடர்பில் இருக்க கடிதங்களை எழுதவும் கற்றுக்கொண்டார். [2]

1897ஆம் ஆண்டில், இவர் இசுலாமிய அறிஞரும் தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னாள் மாணவருமான சையித் மும்தாஜ் அலி தேவ்பந்த் என்பவரை மணந்தார். 1898இல், தம்பதியினர் தெஹ்ஸீப்-இ-நிஸ்வான் என்ற பெண்களுக்காக வாராந்திர பத்திரிகையைத் தொடங்கினர். இது இசுலாத்தில் பெண்கள் உரிமைகள் குறித்த முன்னோடிப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [3] இவர் 1908இல் தான் இறக்கும் வரை பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். [4] உருது பத்திரிகையை வெளியிட்ட முதல் பெண்மணியாக முஹம்மதி பேகம் காணப்படுகிறார்.

இறப்பு[தொகு]

முஹம்மதி பேகம் 1908 நவம்பர் 2 அன்று தனது 30 வயதில் சிம்லாவில் காலமானார். இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரன் நயீம் தாஹிர் சயீதா முஹம்மதி பேகம் அவர் உன்கா கண்டன் என்ற பெயரில் வெளியிட்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sarwat Ali. "Stuff legends are made of". https://www.thenews.com.pk/tns/detail/655864-stuff-legends-are-made-of. பார்த்த நாள்: 22 August 2020. 
  2. Sarkar, Sumit; Sarkar, Tanika (2008). Women and Social Reform in Modern India: A Reader. பக். 363. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780253352699. https://books.google.com/books?id=GEPYbuzOwcQC&pg=PA360&lpg=PA360&dq=mumtaz+ali+deobandi#v=onepage. பார்த்த நாள்: 20 August 2020. 
  3. Moaddel, Mansoor (1998). "Religion and Women: Islamic Modernism versus Fundamentalism". Journal for the Scientific Study of Religion 37 (1): 116. doi:10.2307/1388032. https://archive.org/details/sim_journal-for-the-scientific-study-of-religion_1998-03_37_1/page/116. 
  4. Tahir Kamran (8 July 2018). "Re-imagining of Muslim Women - II". thenews.com.pk. The News International. பார்க்கப்பட்ட நாள் 22 August 2020.
  5. Asif Farrukhi (16 September 2018). "A PIONEERING WOMAN OF LETTERS". Dawn. https://www.dawn.com/news/1433254. பார்த்த நாள்: 22 August 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மதி_பேகம்&oldid=3520880" இலிருந்து மீள்விக்கப்பட்டது