உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மதி(The Mohammadi) என்பது ஒரு வங்காள மொழி மாதாந்திர கலை இதழாகும். இதை முகமது அக்ரம் கான் நிறுவினார், அவர் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1][2]

வரலாறு

[தொகு]

முகம்மதி, ஆகத்து 1927-ல் ஆங்கிலேய ஆட்சியின் வங்காள மாகாணத்தில் உள்ள கொல்கத்தாவில் முகமது அக்ரம் கானால் நிறுவப்பட்டது. வங்காள முசுலிம்களின் தனித்துவமான இலக்கியப் பண்பாட்டை உருவாக்குவதே அகமதியின் நோக்கமாக இருந்தது. இது முகமது அலி சின்னாவின் இரு தேசக் கோட்பாட்டை ஆதரித்தது. இது சிறிது காலம் மூடப்பட்டு, 1937-ல் மீண்டும் திறக்கப்பட்டது. இது பாகித்தானையும் இந்தியப் பிரிவினையையும் ஆதரித்தது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இது கிழக்கு பாகித்தானில் உள்ள டாக்காவிற்கு மாற்றப்பட்டது.[3] முகமது வசீத் அலி சிறிது காலம் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.[4] டாக்காவில் அதன் முதல் இதழ் டிசம்பர் 1949-ல் வெளியிடப்பட்டது. இதை முசிபுர் ரகமான் கான் தொகுத்தார். பல இதழ்களை அக்ரம் கான் மற்றும் பத்ருல் அனாம் கான் ஆகியோர் தொகுத்தனர். இந்த இதழ் சுஃபியா கமல், சவ்கத் உசுமான், அப்துல்லா அல்-முதி சரஃபுதீன் மற்றும் அலாவுதீன் அல் ஆசாத் போன்ற வங்காள முசுலிம் எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டது. இந்த இதழ் அதன் பாகித்தான் மற்றும் முஸ்லிம் சார்பு நிலைப்பாட்டின் காரணமாக வங்காள தேசியவாதத்தை எதிர்த்தது. அதன் கடைசி இதழ் 1970 இல், பங்களாதேசு சுதந்திரத்திற்கு ஒரு வருடம் முன்பு வெளியிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maulana Akram Khan: Pioneer of Bengali Muslim journalism" (in en). The New Nation. http://thedailynewnation.com/news/105189/maulana-akram-khan-pioneer-of-bengali-muslim-journalism.html. பார்த்த நாள்: 5 June 2018.
  2. Chatterji, Joya (2002). Bengal Divided: Hindu Communalism and Partition, 1932-1947. Cambridge University Press. p. 68. ISBN 978-0-521-52328-8.
  3. 1 2 Mowla, AHM Shafiqul. "Mohammadi, The" (in ஆங்கிலம்). Banglapedia. Retrieved 5 June 2018.
  4. "Ali, Muhammad Wajed - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). Retrieved 28 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மதி&oldid=4504966" இலிருந்து மீள்விக்கப்பட்டது